Sunday, August 13, 2017

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2017 - ( ரிஷப லக்கினம் )


சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் என்று வர்ணிக்கப்படும், இலக்கின பாவகாத்திற்க்கே முதல் உரிமை உண்டு, மேலும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் சுய ஜாதகத்திற்கு பலன் காணும் பொழுது துல்லியமான பலாபலன்களை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக தெளிவாக கூற இயலும், எனவே நவ கிரகங்களின் பெயர்ச்சியை சுய ஜாதக  பாவக வலிமையின் அடிப்படையில் கணிதம் செய்து பார்க்கும் பொழுது சம்பந்தம் பட்ட ஜாதகருக்கு நவ கிரகங்களின் பெயர்ச்சியினால் வரும் நன்மை தீமை பலாபலன்களை பற்றி துல்லியமாக கணிதம் செய்ய இயலும், திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி ஆவணி மாதம் 01ம் தேதி ஆகஸ்ட் 17ம் தேதி இரவு 18ம் தேதி இரவு 02-32க்கு ராகு பகவான் சிம்மம் ராசியிலிருந்து கடகம் ராசிக்கும் கேது பகவான் கும்பம் ராசியிலிருந்து மகரம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். சாயா கிரகங்களான ராகுகேது  தனது சஞ்சார நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு தரும் யோக அவயோக நிகழ்வுகளை பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்  அன்பர்களே!

ரிஷப லக்கினம் :

காலபுருஷ தத்துவத்திற்க்கு 2ம் ராசியான ரிஷபத்தை லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு, வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்தில் ராகு பகவானும், பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்தில் கேது பகவானும் தனது சஞ்சார காலம் வரை தரும் பலன்களை ஆய்வு செய்வோம் அன்பர்களே! ராகு பகவானின் வீர்ய ஸ்தான சஞ்சாரம் ரிஷப லக்கின அன்பர்களுக்கு முயற்சிக்கும் காரியங்கள் யாவிலும் வெற்றி மேல் வெற்றி தரும், தன்னம்பிக்கை அதிகரிக்கும், சுய முன்னேற்றம் சார்ந்த திட்டமிடுதல்கள் யாவும் முழு அளவிலான நன்மைகளை தரும், ஜாதகருக்கு வரும் எதிர்ப்புகள் யாவும் குறைந்து ஆதாராவும், உதவிகளும் தேடி வரும், ஜாதகரின் தனிப்பட்ட அபிலாசைகள் யாவும் நிறைவேறும், குறிப்பாக காதல் வெற்றி பெற்று இனிமையான இல்லற வாழ்க்கை அமையும், தெவீக பலம் கூடுவதால் ஜாதகருக்கு மிகுந்த நன்மைகள் நடைமுறைக்கு வரும், ஜாதகருக்கு எதிர்பால் இன சேர்க்கை மூலம் லாபங்களும் அதிர்ஷ்டங்களும் ஏற்பட்ட வாய்ப்புகள் அதிகம் உண்டு, ரிஷப லக்கின அன்பர்களின் மனபயம் நீங்கி தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும், செயல்பாடுகளில் வேகமும் விவேகமும் அதிகரிக்கும், புதிய முயற்சிகள் மூலம் ஜாதகரின் தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும், வியாபாரம் சார்ந்த விஷயங்களில் ரிஷப லக்கின அன்பர்களுக்கு இந்த ராகு சஞ்சாரம் அபரிவிதமான வளர்ச்சியை வாரி வழங்கும், தெய்வீக நம்பிக்கை மேலோங்கும், வண்டி வாகனம் மற்றும் சொத்து வீடு ஆகியவற்றின் மூலம் ஜாதகர் தொடர் லாபங்களை பெரும் யோகத்தை தரும், தனம் சார்ந்த தொழில் செய்யும் அன்பர்களுக்கு இனிவரும் காலம் ஏற்றமிகு சிறப்புகளை வாரி வழங்கும், முன்னேற்றத்தின்பால் நம்பிக்கை கொண்டோர் அனைவருக்கும் ( ரிஷப லக்கின ) அபரிவிதமான வளர்ச்சியை தற்போழுது நிகழ்ந்துள்ள ராகு பகவானின் கடக ராசி சஞ்சாரம் தட்டாமல் தரும் என்பதில் மாற்று கருத்து இல்லை ரிஷப லக்கி அன்பர்களே!

கேது பகவானின் பாக்கிய ஸ்தான சஞ்சாரம், ரிஷப இலக்கின அன்பர்களுக்கு உகந்த நன்மைகளை தருமா ? என்றால் அது கேள்விக்குறியே, கேது பகவானின் பாக்கிய ஸ்தான சஞ்சாரம் சற்று கடுமையான விளைவுகளை தங்களுக்கு தர கூடும் என்பதால் எந்த ஓர் விஷயத்தையும் சற்று ஆலோசனை செய்து வயதில் பெரியோர் வார்த்தைகளை மதித்து செயல்படுவது தங்களுக்கு சகல நன்மைகளையும் தரும், இதில் சற்று கவனம் இன்றி செயல்பட்டால் வீண் அவ பெயரும் கௌரவ குறைவும் உண்டாகும் என்பதை மறுப்பதற்கு இல்லை, மனதில் நினைத்தவுடன் திரு தளங்களுக்கு சென்று வந்துவிடுவது தங்களின் ஆத்ம பலத்தை அதிகரிக்கும், தொழில் சார்ந்த நடவடிக்கைகளில், நல்ல ஆலோசகர் மற்றும் அனுபவஸ்தர் அறிவுரைபடி நடந்துகொள்வது தங்களுக்கு வீண் செலவினங்களை குறைக்க உதவும், நீடித்த தொழில் வெற்றிக்கு இதுவே உகந்த நன்மைகளை தரும், பொறுப்பு மிக்க செயல்பாடுகள் மூலம் தங்களுக்கு வரும் அவபெயரில் இருந்து தாங்கள் விடுபடலாம், தொழில் துறை கூட்டு தொழில் அல்லது சுய தொழில் செய்யும் அன்பர்கள் இனிவரும் காலங்களில் அதிக பொறுப்புடனும், நாவடக்கத்துடனும் நடந்துகொள்வது சிறப்பான முன்னேற்றங்களை வாரி வழங்கும், தெய்வீக நம்பிக்கை உள்ளோர் குல தேவதை வழிபாட்டையும், பித்ரு வழிபாட்டையும் முறையாக செய்வது பாக்கிய ஸ்தான கேது சஞ்சார நிலையால் வரும் இன்னல்களை வெகுவாக குறைக்கும், யோக வாழ்க்கையை நிலை நிறுத்தும், ரிஷப இலக்கின அன்பர்களுக்கு கேது பகவானின் சஞ்சாரம் சற்று இன்னல்களை தரும் என்பதை மறுப்பதற்கு இல்லை, முறையான ராகுகேது பிரீதி பாரிகாரங்கள் சகல நன்மைகளையும் தரும்.

குறிப்பு :

 ரிஷப லக்கின அன்பர்களுக்கு தற்போழுது நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 3,9ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள்  3,9ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் ரிஷப லக்கின அன்பர்களுக்கு மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 

9443355696


Friday, August 11, 2017

ஜாதகத்தில் உள்ள யோகங்களும், யோகங்களை வழங்கும் திசா புத்திகளும், தொடர்ச்சி....கடந்த பதிவில் உதாரண ஜாதகத்தில் உள்ள வலிமை பெற்ற பாவக நிலையை ( யோக நிலை ) பற்றி சிந்தனைக்கு எடுத்துகொண்டோம், அதில் 1,3,4,5,6,7,9,10ஆகிய 8 பாவகங்களும் மிகவும் வலிமையுடன் இருப்பதை கண்டோம், குறிப்பாக பாக்கிய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் வீடுகள் வழியில் இருந்து ஜாதகர் அனுபவிக்கும் யோக பலன்களை பற்றி தெளிவு பெற்றோம், இனி சம்பந்தப்பட்ட ஜாதகர் தமது சுய ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட பாவக வழியிலான தொடர்புகளை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : கடகம்
ராசி : ரிஷபம்
நட்ஷத்திரம் : கிருத்திகை 2ம் பாதம்

ஜாதகருக்கு பாதிக்கப்பட்ட பாவக தொடர்புகள் :

2,12ம்  வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 2ம் பாவக வழியில் இருந்து வருமானம் சார்ந்த இன்னல்களையும் இழப்புகளையும் தரக்கூடும், 12ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீர்ய ஸ்தானமாக அமைவது ஜாதகரின் சில முயற்சிகள் தடைபெறக்கூடும், தாமதம் மற்றும் தடங்கல் மூலம் ஜாதகர் சில நேரங்களில் அதிக மன உளைச்சல்களை சந்திக்கும் நிலை ஏற்படலாம், 2ம் வீட்டிற்கு 12ம் பாவகம் 11ம் வீடாக அமைவது ஒரு வகையில் ஜாதகருக்கு சரளமான பேச்சு திறனையும், மிதம்மிஞ்சிய வருமானத்தையும் தரக்கூடும், இருப்பினும் ஜாதகருக்கு வரும் வருமானம் அனைத்ததையும் ஜாதகர் பயன் படுத்த இயலாத சூழ்நிலையை தரக்கூடும், வாக்கு பலிதம் உண்டாகும், வாக்கு வன்மையின் மூலம் வாழ்க்கையில் சுபயோகங்களை பெறுவதற்கு உண்டான சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும்.

12ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் அதிக அளவிலான மன அழுத்தம் மற்றும் மன போராட்டங்களை சந்திக்கும் சூழ்நிலை தரும், குறிப்பாக ஜாதகர் செய்யும் பெரிய முதலீடுகள் ஜாதகருக்கு கடுமையான நெருக்கடிகளை தரும், நல்ல உறக்கம் பாதிக்கும், விபத்து நஷ்டம் மற்றும் மருத்துவ செலவினங்களை ஜாதகரால் தவிர்க்க இயலாது, மனோபயம் ஜாதகரின் முன்னேற்றத்தையும், மன தைரியத்தையும் பதம் பார்க்கும், பதட்டமான நேரங்களில் ஜாதகர் எடுக்கும் முடிவுகள் ஜாதகரின் பொருளாதார இன்னல்களை தரக்கூடும், திருப்தி இல்லாத மன நிலை ஜாதகரின் வாழ்க்கையில் ஓர் வெற்றிடத்தை எப்பொழுதுமே வைத்திருக்கும், மோட்ச வாழ்க்கைக்கு உண்டான தடைகளையும் தாமதங்களையும் தரக்கூடும்.

8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு பூர்ண ஆயுளை தரும், இருப்பினும் உடலில் ரண சிகிச்சையை தரக்கூடும், வலி தாங்கும் வல்லமையை ஜாதகர் பெற்றிருப்பர், தனது வாழ்க்கை துணை வழியிலான சில நன்மைகளை ஜாதகர் தன்னிறைவாக பெரும் யோகம் உண்டாகும், பாதுகாப்பான பயணம் ஜாதகரின் இன்னல்களை வெகுவாக  குறைக்கும்,  வெளியூர் வெளிநாடுகள் வழியில் இருந்து தன சேர்க்கை அதிக அளவில் உண்டாக வாய்ப்பு உள்ளது, ஜாதகரின் ஆயுள் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 11ம் வீடாக அமைவது ஜாதகருக்கு வரும் இன்னல்களை ஜாதகரே தனது அறிவு திறனால் வெற்றி கொள்வார்  என்பதனை தெளிவுபடுத்துகிறது, பூர்ண ஆயுள் என்பதனால் ஜாதகர் உடல் நிலையில் மட்டும் சற்று கவனம் செலுத்துவது அவசியமாகிறது, பயணங்களிலும் பாதுகாப்புடன் இருப்பது வீண் விரையங்களை தவிர்க்க உதவும்.

11ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட பாவகம் ஆகும், இதனால் ஜாதகரின் முன்னேற்றம்  பெரிய அளவில் பாதிக்கப்பட கூடும் முன்னேற்றம், ஜாதகருக்கு வரும் அதிர்ஷ்டங்கள் தடைபட கூடும், தன்னம்பிக்கை மற்றும் மனஉறுதி ஜாதகரின்  வாழ்க்கையில் சில நேரங்களில் பெரிய பாதிப்புகளை தருவதை தவிர்க்க இயலாது, சுய ஜாதகத்தில் எந்த ஓர் பாவகமும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு உகந்தது அல்ல, மேலும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்ற பாவக பலனை நடைபெறும், எதிர்வரும் திசா புத்திகள் ஏற்று நடத்தாமல் இருப்பது ஜாதகருக்கு சகல நிலைகளில் இருந்தும் நன்மைகளை தரும் அமைப்பாகும்.

மேற்கண்ட ஜாதகருக்கு வலிமை பெற்ற 1,3,4,5,6,7,9,10ம் பாவக வழியில் ஜாதகர் யோக பலன்களை அனுபவித்த போதிலும் 2,8,11,12ம் பாவக வழியில் இருந்து அவயோக பலன்களை எதிர்கொள்ளும் நிலையை தரும், எனவே ஜாதகர் 2,8,11,12ம் பாவக வழியிலான விஷயங்களில் அதிக கவனமுடன் இருப்பது அவசியமாகிறது, குறிப்பாக 2ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் தனக்கு வரும் வருமானங்களை பாதுகாக்கும் திட்டமிடுதல்களை செய்வது சிறப்பை தரும், அனைவரிடமும் பேச்சில் சமாதானத்தை கடைபிடிப்பது சுய முன்னேற்றத்தை அதிகரிக்கும், பொருளாதார திட்டமிடுதல்கள் ஜாதகரின் வாழ்க்கையில்  சுபயோகங்களை வாரி வழங்கும், 8ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் பாதுகாப்பான விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவது நல்லது, குறிப்பாக உடல் நிலை சார்ந்த விஷயங்களில் சற்று அதிக கவனம் வேண்டும், எதிர்பாராத நேரங்களில் வரும் இன்னல்களை தனது அறிவு திறன் கொண்டு வெற்றி பெறுவது அவசியமாகிறது, 11ம் பாவக வழியில் இருந்து அதீத தன்னம்பிக்கையும், முற்போக்கு சிந்தனையும் ஜாதகரின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், தெய்வீக அனுக்கிரகம்  மூலம் வாழ்க்கையில் வெற்றி உண்டாகும், 12ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் செய்யும் முதலீடுகளில் அதிக கவனம் தேவை, திருப்தியான மனநிலை மற்றும் சரியான திட்டமிடுதல்கள் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும், மற்றவர்கள் வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க சற்று எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுவது ஜாதகருக்கு உகந்த சிறப்புகளை வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696  

Tuesday, August 8, 2017

ஜாதகத்தில் உள்ள யோகங்களும், யோகங்களை வழங்கும் திசா புத்திகளும் !சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் பெரும் வலிமையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சுபயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வருகின்றது, சுப யோகங்களை தரும் திசா புத்திகள் எதுவென்பதில் தெளிவு பெறுவது சம்பத்தப்பட்ட ஜாதகருக்கு உறுதியான வெற்றி வாய்ப்புகளை பெறுவதற்க்கு பேருதவியாக அமையும் என்பதில் மாற்று கருத்து என்பது இல்லை, பொதுவாக சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையை பற்றிய தெளிவு இல்லாதா பொழுது நமது உழைப்பும் நேரமும் வெகு அளவில் விரையமாகும், கிராமங்களில் சொல்லும் செலவடையான " பாடும் பட்டது போல் வீடும் கெட்டது போல் " என்பதற்க்கு இணையான பலனை தந்து விடும், தனது பிறவிப்பயனை தெளிவாக உணர்ந்துகொள்ள சுய ஜாதகத்தில் லக்கின முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலையை பற்றிய விழிப்புணர்வு நம் அனைவருக்கும் தேவை படுகிறது என்ற விஷயத்துடன் ஓர் உதாரண ஜாதகத்தை ஆய்வு செய்வோம் அன்பர்களே !


லக்கினம் : கடகம்
ராசி : ரிஷபம்
நட்ஷத்திரம் : கிருத்திகை 2ம் பாதம்

மேற்க்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்பு :

1,3,7,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு லக்கின பாவக வழியில் இருந்து நீண்ட ஆயுள், சிறந்த உடல் ஆரோக்கியம், தெய்வீக அனுபவம், இறை அருளின் கருணையை பரிபூர்ணமாக பெரும் யோகம், பல திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகம், பெரிய மனிதர்கள் ஆதரவு, அரசு ஆதரவு, முக்கிய பதவிகள் கற்ற கல்வி வழியிலான யோக வாழ்க்கை, தமக்கு சாதகமாக வாழ்க்கையை மாற்றி அமைத்துக்கொள்ளும் அறிவு திறன், அதி புத்திசாலித்தனம், வருமுன் உணரும் உள்ளுணர்வு திறன், தெய்வீக நம்பிக்கை, சுய ஆளுமை திறன், பெருந்தன்மையான குணம், எதிர்ப்புகளை சமாளிக்கும் வல்லமை, சமூக அந்தஸ்து, நல்லோர் ஆதரவு, எங்கு சென்றாலும் ஜாதகருக்கு கிடைக்கும் நற்ப்பெயர், தன்னம்பிக்கை குறையாத மனநிலை, நிறைந்த நல்லறிவு என்ற வகையில் சுபயோக பலன்களை தரும் மேலும் ஜாதகரின் பாக்கிய ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு உபய மீன ராசியில் கடைசி பாகையில் ( 359.41.25 ) ஆரம்பித்து மேஷ ராசி முழுவதும் வியாபித்து இருப்பது, ஜாதகரின் சுய கட்டுப்பாடு, ஒழுக்கம், நேர்மை, மனஉறுதி, விரைந்து செயலாற்றும் திறன் , எதிர்ப்புகளை வெற்றிகொள்ளும் யோகம், புகழ் கீர்த்தி என முழு அளவிலான நன்மைகளை  வாரி வழங்கும், குறிப்பாக ஜாதகரின் கல்விஅறிவு உலக புகழை பெற்றுத்தரும்.

3ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் சகலவித சௌபாக்கியமும் பெரும் அருகதை உடையவர், ஆராய்ச்சி மனபக்குவம், எடுக்கும் காரியங்களில் வெற்றி, வீரியமிக்க செயல்பாடுகள், முற்போக்கு சிந்தனை மற்றும் நேர்மறை எண்ணங்கள் மூலம் சுபயோகங்களை பெரும் அமைப்பு, காரிய சிந்தி, நேர்மையான குணம், உதவி செய்ய ஓடிவரும் மக்கள் செல்வாக்கு, மிதமிஞ்சிய தைரியம், தன்னிலை உணரும் யோகம், சித்தர்கள் ஆசிர்வாதம், பரிபூர்ண லக்ஷ்மி கடாட்சம், அனைவரின் மன நிலையையும் அறியும் யோகம், பெண் தெய்வங்களின் ஆசியை குறுகிய காலத்தில் பெரும் யோகம், விளையாட்டுகளில் ஆர்வம், போட்டி பந்தையங்களில் வெற்றி, எதிர்பாராத அதிர்ஷ்டம் என்ற வகையில் நன்மைகளை தரும், குறிப்பாக ஜாதகரின் தைரியாமான சில முடிவுகள் எதிர்பாராத வெற்றிவாய்ப்புகளை வாரி வழங்கும் .

7ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் யோகம் மிக்க நல்ல வாழ்க்கை துணையை பெறுவதின் மூலம் இல்லற வாழ்க்கையில் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், நல்ல நண்பர்கள், சிறந்த கூட்டாளிகள் அமைவார்கள், வெளிநாடு வெளியூரில் இருந்து வரும் சுபயோக வாய்ப்புகளை ஜாதகர் அனுபவிக்கும் யோகத்தை தரும், எந்த ஓர் சூழ்நிலையிலும் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் ஆதரவு பரிபூர்ணமாக அமையும், திடீர் செல்வாக்கின் மூலம் பொருளாதார வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும், எதிர்பால் இன சேர்க்கை மூலம் சுபயோகங்கள் உண்டாகும், சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்தில் உள்ள அன்பர்கள் ஆதரவு ஜாதகருக்கு தேடி வரும், அரசியல் பதவிகள், அரசு சார்ந்த உதவிகள் ஜாதகருக்கு பெருமளவில் கிடைக்கும், ஜாதாகர் களத்திர ஸ்தான வழியில் இருந்து பெரும் யோகங்களை முழு அளவில் பெறுவார், நல்ல வலிமை மிக்க கூட்டாளி அமைவார் அல்லது வெளியூர் வெளிநாடுகளில் ஜாதகருக்கு பிரபலத்துவம் எதிர்பாராமல் உண்டாகும்.

9ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நல்ல குணமும், நல்ல எண்ணமும் மனதில் உள்ள லட்சியங்களை வெற்றி பெற செய்யும், தனது வாழ்க்கையை சிறப்பாக வாழும் யோகம் பெற்றவர்கள், ஜாதகரின் முன்னோர்கள் மற்றும் ஜாதகர் செய்த புண்ணியத்தின் பலன்களை ஜாதகர் பாக்கிய ஸ்தான வழியில் இருந்து அனுபவிப்பர், தெய்வீக அனுகிரகம் ஜாதகரின் வாழ்க்கையில் பல புதுவித மாற்றங்களை  வாரி வழங்கும், கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்ற பழமொழியின் பலாபலன்களை ஜாதகர் அனுபவிப்பார், ஜாதகர் வாக்கு பலிதம் பெரும், ஆசிர்வாதம் சகல துன்பங்களையும் நீக்கும், வாக்கு வன்மை அதிகரிக்கும் என்பதால் ஜாதகர் எவரை சபிக்காமல், ஆசிர்வதிப்பது சுபயோக வாழ்க்கையை தரும்.

4ம் வீடு சுக ஸ்தானமான நான்காம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகரின் சுகபோக வாழ்க்கையின் தன்மையை நமக்கு சிறப்பாக எடுத்துறைக்கிறது, குறிப்பாக ஜாதகருக்கு நல்ல வீடு, வண்டி வாகனம், சொத்து சுக சேர்க்கை, தனது தாய் வழியில் இருந்து பெரும் யோக வாழ்வு, நல்ல குணம், தனது சுய உழைப்பின் மூலம் பொருளாதர முன்னேற்றத்தை பெரும் தனி தன்மை என்ற வகையில் நன்மைகளை தரும், மேலும் ஜாதகரின் சுக ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஆயுள் ஸ்தானமான விருச்சிக ராசியில் அமைவது, ஜாதகருக்கு இன்சூரன்ஸ், போனஸ், கிரசுவிடி அமைப்பில் இருந்து புதையலுக்கு நிகரான வருமான வாய்ப்பை தரும், மேலும் ஜாதகரின் மனோ வலிமை சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், வடக்கு திசை சார்ந்த மனைகளில் ஜாதகர் குடியிருப்பது, ஜாதகரின் சுக போக வாழ்க்கையை 100 % விகிதம் உறுதி செய்யும், மேலும் இடம் நிலம் வீடு, வண்டி வாகனம்  ஆகிய வழியில் இருந்து வருமான வாய்ப்புகளையும் ஜாதகருக்கு பரிபூர்ணமாக வாரி வழங்கும்.

5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகரின் சமயோசித புத்திசாலித்தனத்தை கட்டியம் கூறும், நிறைந்த கல்வி அறிவு ஜாதகரின் வெற்றிகளுக்கு உறுதுணை புரியும், ஜாதகர் செய்யும் அனைத்து காரியங்களிலும் ஜாதகரின் புத்திசாலித்தனம் மிளிரும், எவரும் தீர்வு காணாத விஷயங்களுக்கு ஜாதகரின் தீர்வே இறுதியான நல்ல முடிவை தரும், ஜாதகரின் குல தேவதையின் ஆசி சகல யோகங்களை வாரி வழங்கும், பிரச்சனைகளுக்கான உடனடி தீர்வுகள் காண்பதில் வல்லமை உண்டாகும், சுய ஆளுமையின் மூலம் வாழ்க்கையில் தொடர் வெற்றிகளை ஜாதகர் பெற்றுகொண்டே இருப்பார், கலைத்துறையில் பிரகாசிக்கும் யோகமும், சாஸ்திர ஞானமும் ஜாதகருக்கு பரிபூர்ணதுவத்தை தரும், தெய்வீக அனுபவம் மூலம் விடையறிய கேள்விகளுக்கு பதில் தெரிய வரும், கணிதம் ஜோதிடம், வானவியலில் நல்ல தேர்ச்சி உண்டாகும், நுண்ணறிவு திறன் ஜாதகரின் வாழ்க்கையை சிறப்பிக்க செய்யும்.

6,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 6ம் பாவக வழியில் இருந்து குறுகிய கால வெற்றிகளை தொழில் ரீதியாக வாரி வழங்கும், ஜாதகரிடம் மற்றவர்களின் தனத்தை ஆளுமை செய்யும் யோகம் உண்டாகும், எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம் எனலாம், ஜாதகரை தொழில் ரீதியாக எதிர்பவர்களின் கதி மிக மோசமாக அமைந்துவிடும், கடன் வாங்குவது கொடுப்பது ஜாதகருக்கு தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றங்களை தரும், சுபயோக வாழ்க்கையை தன்னிறைவாக பெரும் யோகம் உண்டாகும், ஜாதகரின் சத்ரு ஸ்தான தொடர்பு ரிஷப ராசியுடன் என்பதால் ஜாதகரின் பேச்சு திறன் எதிரியையும் மயங்க செய்யும், எதிர்ப்பவர்களையும் மண்டியிட செய்யும், ஜாதகரின் ஜீவன ஸ்தான வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஓர் விஷயமாகும்.

10ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் நல்ல தொழில் அமைப்பு, நல்ல பதவி, செய்யும் தொழில் வழியில் வரும் முன்னேற்றம், தீர்க்கமான வாத திறமை, உயர் பதவி தேடி வரும் யோகம், மேலும் மேலும் ஜீவன ரீதியான நன்மைகளை பெரும் அமைப்பு, லட்சியங்கள் அடைவதின் மூலம் மன திருப்தி, நிறைந்த செல்வாக்கு, சுய கௌரவம், நல்ல அந்தஸ்து என  ஜாதகர் ஜீவன ஸ்தான வழியில் இருந்து முழு நன்மைகளையும் பெறுவார், ஜாதகரின் ஜீவன ஸ்தானம் ரிஷபத்தில் அமைவது வாக்கின் வழியிலான தொழில் வாய்ப்புகளை வாரி வழங்கும், எதிர்பாராத வெற்றிகளை ஜாதகர் ஜீவன ரீதியாக தங்கு தடையின்றி பெறுவார், வாழ்நாள் முழுவதும் ஜாதகருக்கு தொழில் முன்னேற்றம் என்பது அபரிவிதமாக வந்து கொண்டே இருக்கும், சுய தொழில் செய்யும் எண்ணம் இருப்பின் ஜாதகருக்கு உகந்த தொழில்களாக ஆலோசனை வழங்குதல் ( தனம் சார்ந்த ) ( தொழில் ஆலோசகர் ) வட்டி தொழில், நிதி நிறுவனம் ( வண்டி வாகனம் மற்றும் சொத்துகள் அடிப்படையில் நிதி உதவி செய்தல் ) நல்ல தொழிலாக இருக்கும், அல்லது சேவை துறை சார்ந்த தொழில்கள் மூலம் நிறைவான வருமானத்தை பெறுவார்.

அடுத்த பதிவில் மேலும் ஆய்வு செய்வோம் ......

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

Wednesday, August 2, 2017

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2017 - ( மேஷ லக்கினம் )


   சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் என்று வர்ணிக்கப்படும், இலக்கின பாவகாத்திற்க்கே முதல் உரிமை உண்டு, மேலும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் சுய ஜாதகத்திற்கு பலன் காணும் பொழுது துல்லியமான பலாபலன்களை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக தெளிவாக கூற இயலும், எனவே நவ கிரகங்களின் பெயர்ச்சியை சுய ஜாதக  பாவக வலிமையின் அடிப்படையில் கணிதம் செய்து பார்க்கும் பொழுது சம்பந்தம் பட்ட ஜாதகருக்கு நவ கிரகங்களின் பெயர்ச்சியினால் வரும் நன்மை தீமை பலாபலன்களை பற்றி துல்லியமாக கணிதம் செய்ய இயலும், திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி ஆவணி மாதம் 01ம் தேதி ஆகஸ்ட் 17ம் தேதி இரவு 18ம் தேதி இரவு 02-32க்கு ராகு பகவான் சிம்மம் ராசியிலிருந்து கடகம் ராசிக்கும் கேது பகவான் கும்பம் ராசியிலிருந்து மகரம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். சாயா கிரகங்களான ராகுகேது  தனது சஞ்சார நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு தரும் யோக அவயோக நிகழ்வுகளை பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்  அன்பர்களே!

மேஷ லக்கினம் :

மேஷ லக்கின அன்பர்களுக்கு சுக ஸ்தானமான 4ம் பாவகத்தில் ராகு பகவானும், ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்தில் கேது பகவானும் தனது சஞ்சார காலம் வரை தரும் பலன்களை ஆய்வு செய்வோம் அன்பர்களே! பொதுவாக சுய ஜாதகத்தில் சாயாகிரகங்களுக்கு தனிப்பட்ட வலிமை உண்டு, அதாவது தான் நின்ற இடத்தின் பலனை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளும் வல்லமையும், தன்னுடன் சேர்ந்த கிரகங்களின் வலிமையை தனது பலனாக ஏற்று நடத்தும் வல்லமையும்  பெற்ற கிரகங்கள் ராகு கேது என்றால் அது மிகையில்லை, அப்படிப்பட்ட ராகு கேது மேஷ லக்கின அன்பர்களுக்கு இரு கேந்திர பாவகமான 4,10ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் அமைப்பு வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாக கருதலாம், ராகுவின் 4ம் பாவக சஞ்சாரம் ஜாதகருக்கு தேய்பிறை காலங்களில் அபரிவிதமான யோக பலன்களை வாரி வழங்கும், புதிய வண்டி வாகன சேர்க்கை, சொத்து சுக சேர்க்கை, மண் மனை யோகம், புதிய பொருட்கள் வாங்கும் யோகம், சுப நிகழ்ச்சிகள் மூலம் குடும்பத்தில் மனமகிழ்ச்சி, எதிர்பாராத சொத்து மற்றும் ஆபரண சேர்க்கை, நல்ல குண நலத்துடன் அனைவரையும் மகிழ்விக்கும் யோகம், தாய் வழியிலான நன்மைகள் மற்றும் யோகங்கள் என்ற வகையில் சுபயோக பலன்களை வாரி வழங்கும், தங்களின் மனவலிமை அதிகரிக்கும், மனத்தெளிவு, சீரிய சிந்தனை, அனைத்தையும்  வெற்றிகொள்ளும் யோகம் என்ற வகையில் நன்மைகளை தரும், இருப்பினும் வளர்பிறை காலங்கள் தங்களுக்கு கடுமையான நெருக்கடிகளை  தரக்கூடும், காரிய தடை, முன்னேற்ற தடை, எதிர்ப்புகள், தனது குண நலன்களை தாமே கெடுத்துக்கொள்ளும் நிலை என சற்று இன்னல்களை தரக்கூடும் என்பதால் வளர்பிறை காலங்களில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது சகல நலன்களையும் தரும்.

கேதுவின் 10ம் பாவக சஞ்சாரம் மேஷ லக்கின அன்பர்களுக்கு ஜீவன வழியில் இருந்து சகல யோகங்களையும் வாரி வழங்க தயார் நிலையில் உள்ளது என்பதை மறுக்க இயலாது, தங்களின் தொழில் வளர்ச்சி என்பது இனி வரும் காலங்களில் மின்னல் வேகத்தில் வளர்ச்சி பாதையில் வெற்றிநடைபோடும், சுய கவுரவம் ஓங்கி நிற்கும், சமூக அந்தஸ்து அதிகாரிக்கு, அதிகார பதவிகளை அலங்கரிக்கும் யோகம் உண்டாகும், கேது மகர ராசியில் சஞ்சாரம் செய்யும் காலம்  முழுவது தங்களுக்கு அபரிவிதமான வளர்ச்சிக்கு பஞ்சம் இருக்காது, உதவி  செய்வோர் எண்ணிக்கையும், மக்கள் செல்வாக்கும் அதிகரிக்கும், இதுவரை இல்லாத தொழில் முன்னேற்றம் இனிவரும் காலங்களின் தங்களுக்கு தடையின்றி கிடைக்கும், தங்களின் திட்டமிடுதல்கள் அனைத்தும் தொடர்ந்து  வெற்றிகளை வாரி வழங்கிக்கொண்டே இருக்கும், ஆத்ம பலம்  ஆன்மீக பலம் இரண்டும் தங்களின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், புதிய தொழில் முயற்சிகள் நல்ல வெற்றிகளை  தரும், முன் பின் அறிமுகம் அற்ற நபர்கள் வேற்று மதத்தினர், வேற்று நாட்டினர் மூலம் அபரிவிதமான ஜீவன முன்னேற்றத்தை  தடையின்றி கேதுவின் சஞ்சாரம் வாரி வழங்கும், மண் தத்துவம் ( சர ) சார்ந்த  தொழில்களில் இருக்கும் அன்பர்களுக்கு இனிவரும் காலம் ஓர் அதிர்ஷ்டம் நிறைந்த  பூரண நன்மைகளையும் யோகங்களையும் வாரி வழங்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை, தெய்வீக அனுக்கிரகமும், தொழில் மீது கொண்டுள்ள பக்தியும் தங்களுக்கு அபரிவிதமான ஜீவன முன்னேற்றத்தை வாரி வழங்க காத்துகொண்டு இருக்கின்றது என்பதால் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு  நலம் பெறுங்கள் .

குறிப்பு :

மேஷ லக்கின அன்பர்களுக்கு தற்போழுது நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 4,10ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள்  4,10ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் மேஷ லக்கின அன்பர்களுக்கு மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

Saturday, July 22, 2017

அற்புத வாழ்வை வாரி வழங்கும் ஆடி அமாவாசை வழிபாடு !

 

இயற்கையாகவே அமாவாசை தினங்களில் மனிதனுக்கு பிரபஞ்சத்துடனான தொடர்பு மிக நெருக்கமாக அமையும், மனதில் எழும் எண்ணத்தின் வலிமைதனை அதிகரிக்கும் அதன்காரணமாக இறை அருளின் கருணையையும், பித்ரு தேவதைகளின் ஆசியையும் மிக எளிதாக பெரும் வண்ணம் ஜீவதொடர்பை ஓவ்வொருவரும் பெறுவது இயற்கையாக நடைபெறும், குறிப்பாக ஆடி,புரட்டாசி,தை அமாவாசை தினங்களில் இதன் தாக்கம் சற்று அதிக அளவில் அமையும் என்பதனால் குலதெய்வத்தை வழிபடுவதன் மூலம் சுய ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தானம் எனும் 5ம் பாவகம் மிகவும் வலிமை பெரும் அதன் நேரெதிர் பாவகமான லாப ஸ்தானமான 11ம் பாவகமும் வலிமை பெரும் இதன் மூலம் ஜாதகருக்கு பூர்வ புண்ணிய ஸ்தான வழியில் இருந்து பரிபூர்ண அறிவு திறனும், சமயோசித புத்திசாலித்தனமும் அதிகரிக்கும், லாப ஸ்தான வழியில் இருந்து தன்னம்பிக்கையும், அதிர்ஷ்டத்துடன் கூடிய வெற்றிகளை வாரி வழங்கும்.

 பித்ரு வழிபாடு செய்வதன் மூலம் சுய ஜாதகத்தில் பாக்கிய ஸ்தானம் எனும் 9ம் பாவகம் மிகவும் வலிமை பெரும் அதன் நேரெதிர் பாவகமான வீர்ய ஸ்தானம் எனும் 3ம் பாவகமும் வலிமை பெரும் இதன் மூலம் ஜாதகருக்கு பாக்கிய ஸ்தான வழியில் இருந்து நல்ல ஞானத்துடன் கூடிய நல்லோர் சேர்க்கை உண்டாகும், பித்ருக்கள் ஆசிர்வாதம் ஜாதகரின் வாழ்க்கையில் வியக்க தக்க மாற்றங்களை வாரி வழங்கும், மேலும் வீர்ய ஸ்தான வழியில் இருந்து ஜாதகருக்கு தைரியமும் தன்னம்பிக்கையுடன் கூடிய வெற்றிகளும் உண்டாகும், இதனால் சகல சௌபாக்கியமும் ஜாதகரின் வாழ்க்கையில் வந்து சேரும், மேற்கண்ட விஷயங்கள் அவரவர் சுய ஜாதக வலிமைக்கு ஏற்றார் போல் பலாபலன்களை தரக்கூடும் என்ற போதிலும் சுப பலன்கள் நிச்சயம் நடைமுறைக்கு வரும்.

மேலும் ஆடி அமாவாசை வழிபாடு என்பது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பணிரெண்டு பாவகங்களுக்கும் வலிமை சேர்க்கும் வல்லமை பெற்றது, என்பதனால் அனைவரும் முறையாக அவரவர் குல வழக்கபடி குல தெய்வ வழிபாடு, பித்ரு வழிபாடு செய்து சகல நலன்களையும் பெருக.

குறிப்பு :

 ஆடி அமாவாசை வழிபாடு செய்வதின் மூலம் நமது வாழ்க்கையில், குலம் விருத்தி அடையும், அண்டிய பிணி அகலும், நீண்ட ஆயுள் அமையும், பேரிழப்புகள் தவிர்க்கப்படும், தொழில் விருத்தி உண்டாகும், முன் ஜென்ம விணை, சாபங்கள் தீரும், பிரம்மஹஷ்தி தோஷம் நீங்கும், தீயோர் சேர்க்கை விலகும், தீய பழக்க வழக்கங்களில் இருந்து விடுதலை கிடைக்கும், தெய்வீக அனுபவமும், வருமுன் உணரும் பேராற்றலும் அதிகரிக்கும், சுய ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் ( பாவக வலிமை இன்மை ) விலகி, சுப யோகங்கள் நடைமுறைக்கு வரும், கடன் சார்ந்த  இன்னல்கள் நீங்கி பொருளாதார தன்னிறைவு உண்டாகும், புதுவித ஜீவன முன்னேற்றமும், ஏற்றமிகு எதிர்காலமும் நம் அனைவருக்கும் உண்டாகும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

Thursday, July 20, 2017

7ல் ராகு 1ல் கேது அமர்வது ராகுகேது தோஷமா? நடைபெறும் ராகு திசை தரும் பலன்கள் என்ன ?7ல் ராகு 1ல் கேது அமர்வது ராகுகேது தோஷமா? நடைபெறும் ராகு திசை தரும் பலன்கள் என்ன ?

 சுய ஜாதகத்தில் சாய கிரகங்களான ராகு கேது லக்கினம் மற்றும் களத்திர பாவகத்தில் அமர்வது ராகுகேது தோஷம் அல்லது சர்ப்ப தோஷம் என்று வர்ணிக்கப்படுகிறது, எந்த ஓர் லக்கினம் என்றாலும் சரி சுய ஜாதகத்தில் லக்கினத்திற்கு உற்ப்பட்ட பாகையில் ராகுவோ அல்லது கேதுவோ அமர்வது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு லக்கின பாவக வழியில் இருந்து முழு அளவிலான யோக பலன்களை தரும், குறிப்பாக ஜாதகர் லக்கின பாவக வழியில் இருந்து அனுபவிக்க வேண்டிய நன்மைகளையும் யோகங்களையும் பரிபூர்ணமாக அனுபவிப்பார், நீண்ட ஆயுள், நல்ல உடல் நலம், ஜாதகர் பெரும் புகழ் மற்றும் கீர்த்தி, நல்ல எண்ணங்கள், கட்டுப்பாடு, உடல் மற்றும் மனவலிமை, சரியான திட்டமிடுதல்கள், தனக்கு தேவையான நல்ல விஷயங்களை அனைவரிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் அறிவாற்றல், நேர்மை தன்னம்பிக்கை, ஒழுக்கம் மற்றும் சிந்தித்து செயல்படும் தன்மை என்ற வகையில் ஜாதகர் நன்மைகளை பெறுவார், இது அணைத்தது லக்கினத்தினருக்கும் பொருந்தும் இனி தங்களது சுய ஜாதக அமைப்பில் ராகு கேது தரும் பலாபலன்களை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.


லக்கினம் : கடகம் 
ராசி : மகரம் 
நட்ஷத்திரம் : உத்திராடம் 2ம் பாதம்.

 கடக லக்கினம், லக்கினம் கடக ராசியில் 109.28.14 பாகையில் ஆரம்பித்து, சிம்ம ராசியில் 137.56.07 பாகை வரை வியாபித்து இருக்கின்றது, களத்திர ஸ்தானம் மகர ராசியில் 289.28.14 பாகையில் ஆரம்பித்து, கும்ப ராசியில் 317.56.27 பாகை வரை வியாபித்து இருக்கின்றது, தங்களது ஜாதகத்தில் மகரம் மற்றும் கடக ராசியில் ராகு கேது அமர்ந்த போதிலும், லக்கினம் மற்றும் களத்திர ஸ்தானத்திற்கு உற்ப்பட்ட பாகைக்குள் ராகு கேது அமரவில்லை எனவே தங்களது சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் மற்றும் லக்கினத்தில் ராகு கேது அமரவில்லை என்பதை தெளிவு படுத்த "ஜோதிடதீபம்" விரும்புகிறது, மேலும் ராகு கேது மகரம் மற்றும் கடகத்தில் உள்ள 6ம் பாவகம்  மற்றும் 12ம் பாவகத்தில் உள்ளது என்பதே தங்களது சுய ஜாதகத்தில் ராகு கேது அமர்ந்துள்ள உண்மை  நிலை, எனவே லக்கினத்தில் ராகு கேது எண்ணத்தை தவிர்த்து விடுங்கள், மேலும் அதை வைத்து பலன் காண முற்படுவதும் தவறான அணுகுமுறை என்பதில் தெளிவு பெறுங்கள்.

அடுத்து தங்களின் கேள்வி ராகு கேது தங்களது ஜாதகத்திற்கு அமர்ந்த பாவக வழியில் இருந்து தரும்  பலாபலன்கள் பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், 6ல் அமர்ந்த ராகு தங்களுக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து நன்மைகளையும், 12ல் அமர்ந்த கேது தங்களுக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து நன்மைகளையும் தருகின்றனர், இருப்பினும் தற்போழுது  நடைபெறும் ராகு திசை தங்களுக்கு 4,6,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு அளவில் விரைய ஸ்தான பலனை தருவது மேற்கண்ட பாவக வழியில் இருந்து தங்களுக்கு கடுமையான இன்னல்களை தரும், குறிப்பாக மேற்கண்ட பாவக வழியில் இருந்து சுக வாழ்க்கைக்கு தடை, வண்டி வாகனம் மற்றும் வீடு நிலம் சார்ந்த இழப்புகள், உடல் நிலை பாதிப்பு, மருத்துவ செலவு, கடன் தொந்தரவு, எதிர் பாராத செலவுகள், தொழில் வழியில் இன்னல்கள், தொழில் முடக்கம், தொழிலாளர் பிரச்சனைகள், மனநிம்மதி இழப்பு, முதலீடு செய்த வகையில் இருந்து வரும் திடீர் இழப்புகள், மனப்போராட்டம், அனைத்திலும் முடக்கம் என்ற வகையில் கடுமையான இன்னல்களை தரும்.

தங்களது சுய ஜாதகத்தில் ராகு கேது தாம் அமர்ந்த பாவக வழியில் வலிமை பெற்று இருப்பினும், ராகு தனது திசையில் விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்துவது  தங்களுக்கு நன்மை தரும் அமைப்பு அல்ல என்பதனை  நினைவில் வைத்து செயல்படுங்கள், மேற்கண்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்ப்பதற்கு உண்டான பரிகாரங்களை தேடி நலம் பெறுங்கள் "வாழ்த்துக்கள் "

குறிப்பு :

 ஜாதகத்தில் கிரகங்கள் அமர்ந்த நிலை அல்லது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பெற்ற வலிமையை கருத்தில் கொண்டு சுய ஜாதக பலன்களை கூறுவது முற்றிலும் தவறு, பாவக வலிமையை கருத்தில் கொண்டும், நடைபெறும் திசா புத்திகள் ஏற்று நடத்தும் பாவகத்தின் தன்மையை கருத்தில் கொண்டும் பலன் காண்பதே சரியான அணுகுமுறை என்பதே உண்மை, மேலும் சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெற்று இருப்பினும், நடைபெறும் திசாபுத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே ஏற்று நடத்தும் பாவக வழியில் இருந்து நன்மைகள் மற்றும் யோகங்கள் நடைமுறைக்கு வரும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

Tuesday, July 18, 2017

சனி மகா திசை தரும் பலாபலன் என்ன ? எதிர்வரும் புதன் திசை தரும் பலாபலன்கள் என்ன ?


 சுய ஜாதகத்தில் சனி திசை நடைபெறும் பொழுது பெரும்பாலும் நாம் அனைவரும் நமக்கு இன்னல்களே நடைபெறும் என்று கருதுவது உண்டு, மேலும் சனி திசை என்பது வாழ்க்கையில் இன்னல்களையும், துன்பங்களையும் வாரி வழங்கும் அமைப்பை பெற்றது என்ற கருத்தும் பரவலாக உண்டு, மனித வாழ்க்கையில் வரும் இன்னல்களுக்கும் துன்பங்களுக்கும் காரணகர்த்தாவாக சனிபகவானை உருவகபடுத்துபவர்களும் உண்டு, இன்னும் சிலர், ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி என்று, ஜாதகத்தில் சந்திரன் நின்ற ராசிக்கு சனிபகவானின் சஞ்சார நிலையை கருத்தில் கொண்டு பெரும் இன்னல்களை தருபவர் என்று சனிபகவானை துவேசிப்பவர்களும் உண்டு, மேற்கண்ட விஷயங்கள் யாவும் சுய ஜாதகத்தில் பாவக வலிமை நிலையை பற்றிய தெளிவு இல்லாமலும், நடைபெறும் திசா புத்திகள் ஏற்று நடத்தும் பாவக வலிமையின் தன்மையை பற்றிய புரிதல் இல்லாமலும், சொல்லப்படும் கட்டுக்கதையாகவே " ஜோதிடதீபம் " கருதுகிறது, அடிப்படையில் சுய ஜாதகம் இருக்கும் பொழுது ராசியை வைத்து பலாபலன் காண முற்படுவதே தவறான ஓர் அணுகுமுறை என்பதை பதிவு செய்ய விரும்புகிறோம், லக்கினத்தையும் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலையையும் கருத்தில் கொண்டு பலாபலன் காண முற்படுவதே சரியான மற்றும் துல்லியமான ஜாதக பலன்கள் காண வழிவகுக்கும், ஜாதகரின் கேள்விக்கு உண்டான பதிலை அவரது சுய ஜாதக அமைப்பை வைத்து பலாபலன் எப்படி காண்பது என்பதனை இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : விருச்சிகம்
ராசி : துலாம்
நட்ஷத்திரம் : சித்திரை 4ம் பாதம்

ஜாதகருக்கு தற்போழுது  சனி திசை ( 13/03/2013 முதல் 12/03/2022 வரை ) நடைமுறையில் உள்ளது நடைபெறும் சனி  திசை ஜாதகருக்கு வழங்கும் பலன்கள் என்ன என்பதனை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், ஜாதகருக்கு தற்போழுது நடைமுறையில் உள்ள சனி திசை வலிமை பெற்ற 7ம் வீடு களத்திர  ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு அளவில் ஸ்திரமாக 7ம் பாவக பலனை மட்டும் ஏற்று நடத்துகிறது, ஜாதர் விருச்சிக லக்கினம்  என்பதால் 7ம் பாவகம் ஜாதகருக்கு ஸ்திர மண் தத்துவ ராசியான ரிஷபத்தில் அமைகிறது, மேலும் 7ம் பாவகம் ஜாதகருக்கு ரிஷபத்தில் 32:32:05 பாகையில் ஆரம்பித்து மிதுனத்தில் 61:17:18 பாகையில் முடிவடைகிறது, பெரும்பாலும் 7ம் பாவகம் ஜாதகருக்கு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வாக்கு ஸ்தானமான ரிஷப ராசியில் வியாபித்து இருப்பது, வரவேற்க தக்க அம்சமாகும், மேலும் சனி திசை முழுவதும் ஜாதகத்துக்கு  7ம் வீடு களத்திர  ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக பலனை தருவது வரவேக்க தக்க அம்சமாகும்.

இதனால் ஜாதகர் சனி திசையில் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து சகல  சௌபாக்கியங்களையும் அனுபவிக்கும் யோகத்தை தரும், மேலும் தனது  நண்பர்கள் உதவி, கூட்டாளிகள் உதவி, வெளிநாடுகளில் இருந்து வருமான வாய்ப்பு, அயல் தேசத்தில் ஜீவன வாழ்க்கையை மேற்கொள்ளும் யோகம், ஸ்திரமான வருமானங்கள், இனிமையான பேச்சு திறன் மூலம் அனைவரின் ஆதரவையும் பெரும் யோகம், பொதுமக்கள் ஆதரவு, சமூக அந்தஸ்து, தெய்வீக அனுக்கிரகம் மூலம் வாழ்க்கையில் சகல முன்னேற்றங்களையும் பெரும் யோகம் உண்டாகும், குறிப்பாக ஜாதகரின் குடும்ப  வாழ்க்கை சிறப்பாக அமையும், கைநிறைவான வருமானம் வந்து சேரும், குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும், எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும், ஜாதகரின் வாக்கு வன்மை அதிகரிக்கும், பேச்சு திறமையால் தனது வாழ்க்கையை மிக சிறப்பானதாக மாற்றி கொள்ளும் யோகம் பெற்றவராகிறார், மேலும் தனது வாழ்க்கை துணையின் முழு ஆதரவையும், அவர்கள் வழியிலான நன்மைகளையும் ஜாதகர் பரிபூர்ணமாக அனுபவிக்கும் யோகம் உண்டு, சனி திசை ஜாதகருக்கு வெளியூர், வெளிநாடு, வியாபாரம், பொதுமக்கள், அயல் தேச லாபங்கள் என்ற வகையில் சுபயோகங்களை ஸ்திரமாக வாரி வழங்கும் என்பது கவனிக்க தக்க அம்சமாகும், ஜாதகருக்கு சனி திசை நடைபெற்றாலும், சனி தனது திசையில் வலிமை பெற்ற களத்திர ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து சகல யோகங்களையும் தரும்.

எனவே சுய ஜாதகத்தில் பாவ கிரகத்தின் திசை, புத்தி  ( சூரியன், செவ்வாய், சனி, தேய்பிறைசந்திரன், ராகு,கேது ) நடைபெற்றால் தீய பலன்கள் நடைபெறும் என்று நினைப்பது முற்றிலும் தவறு, எந்த ஓர் கிரகத்தின் திசாபுத்தி நடைபெற்றாலும், நடைபெறும் திசாபுத்தி அவரவர் சுய ஜாதகத்தில் உள்ள எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்பதை தெளிவாக தெரிந்துகொண்டு, அதற்க்கான உண்மையான பலாபலனை அறிந்து வாழ்க்கையில் நலம் பெறுவது அவசியமாகிறது.

ஜாதகருக்கு அடுத்து வரும் புதன் திசை தரும் பலாபலன்களை சற்று சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !

புதன் திசை ( 12/03/2022 முதல் 13/03/2039 ) ஜாதகருக்கு 1,3ம் வீடுகள் வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று ராஜ யோக பலனை தருவது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், மேலும் ஜாதகரின் வீர்ய ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமாகவும், சர மண் தத்துவ ராசியான மகரத்தில் வியாபித்து இருப்பது, ஜாதகரின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியமும் வந்து சேரும் யோகத்தை தரும், சனி திசையை விட புதன் திசை ஜாதகருக்கு 1,3ம் பாவக வழியில் இருந்து 100% விகித யோக வாழ்க்கையை நல்கும், எதிர்பாராத முன்னேற்றம் மற்றும் ஜீவன வழியிலான லாபங்களை ஜாதகர் தங்கு தடையின்றி பெறுவார், அதிர்ஷ்டத்தின் தாக்கத்தை முழு அளவில் ஜாதகர் ஜீவன வழியில் இருந்து பெறுவார், அபரிவிதமான தொழில் வளர்ச்சி, எடுக்கும் காரியங்கள் யாவும் வெற்றி, சுலப பொருள் வரவு, மக்களின் பேராதரவு, பொது வாழ்க்கையில் வெற்றி, அரசியல் லாபங்கள், தெய்வீக அனுபவங்கள், மண், மணை, வண்டி வாகன சேர்க்கை, எதிர்பாராத அதிர்ஷ்டம் என ஜாதகரின் வாழ்கையில் புதன் திசை மிகுந்த நன்மைகளை பரிபூர்ணமாக வாரி வழங்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

மேற்கண்ட ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் சனி திசை களத்திர பாவக வழியில் இருந்து சுப யோகங்களையும், புதன் திசை வீர்ய ஸ்தான வழியில் இருந்து யோக பலன்களையும் வாரி வழங்குவது, அவரது சுய ஜாதகத்தில் பாவகங்கள் பெற்றுள்ள சுபதுவத்தை எடுத்துரைக்கிறது, எனவே நமது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பணிரெண்டு பாவகங்களும் வலிமை பெற்று இருப்பின், நமக்கு எந்த கிரகத்தின் திசாபுத்தி நடைபெற்றாலும் யோக பலனே நடைமுறைக்கு வரும், நமது ஜாதகத்தில் பாவகங்கள் பாதிக்கப்பட்டு இருப்பின் நமக்கு நடைபெறுவது குரு,சுக்கிரன் போன்ற சுப கிரகத்தின் திசை என்றாலும் அவயோக பலன்களே நடைமுறைக்கு வரும் என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது, கிரகங்களின் திசாபுத்திகள் நமக்கு நன்மையையும் தீமையையும் தருவதில்லை, நமது சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையே நமக்கு நன்மையையும் தீமையையும் தருகின்றது என்பதே உண்மை அன்பர்களே, எனவே அவரவர் சுய ஜாதக வலிமையை கருத்தில் கொண்டு ஜாதக பலாபலன்கள் காண்பதே மிக துல்லியமான பலாபலன்களை காண இயலும் என்பதை கருத்தில் கொள்க.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696