சரியான ஜோதிடம் மக்களை சென்றடைவதே முக்கியம், ஜோதிட ரீதியாக இருக்கும் மூட நம்பிக்கையை களைவதே ஜோதிடதீபத்தின் நோக்கம்......

Monday, March 5, 2012

திசை புத்திகளில் நவ கிரகங்கள் கோட்சார ரீதியாக நடத்தும் பலன்களும் !
ஜோதிட பலன் சொல்லும்பொழுது பெரும்பாலும்  பல ஜோதிடர்கள் , சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு , கோட்சார ரீதியாக , ராகு கேது , குரு, சனி ஆகிய கிரகங்கள் ஜாதகரின் ராசியுடன் சம்பந்தம் செய்து நன்மை தீமை பலன்களை சொல்லுகின்றனர், இந்த கணிப்பு சரியான பலன்களை சொல்லுமா ? 

நிச்சயம்  சரியான பலன்களை தருவதில்லை என்பதே உண்மை . மேலும் கோட்சார ரீதியாக பலன் சொல்லுவது எப்படி ?

1  முதலில் ஜாதகரின் லக்கினம் என்னவென்று பார்க்க வேண்டும் , இலக்கணத்தை வைத்து பலன் சொல்லுவதே மிகவும் சரியான பலன்களை தெரிந்து கொள்ள முடியும் .

2  ஜாதகருக்கு தற்பொழுது நடக்கும் திசை , புத்தி , அந்தரம் , சூட்சமம் , என்ன வென்று சரியாக கணிதம் செய்து ஜாதகத்துடன் ஒப்பிட்டு பார்த்து சரி செய்து கொள்ளுவது நல்லது.

3  ஜாதகருக்கு நடக்கும்  திசை , புத்தி , அந்தரம் , சூட்சமம் , அனைத்தும் எந்த எந்த வீடுகளின் பலன்களை நடத்துகிறது என்று கணித்து கொள்ள வேண்டும் .

4  குறிப்பாக    திசை , புத்தி எந்த வீடுகளின் பலன்களை நடத்துகிறது என்று காண்பது முக்கியம் 

5  இதற்க்கு பிறகு ஜாதகத்தில் தற்பொழுது நடக்கும் திசை , புத்தி , அந்தரம் , சூட்சமம் அனைத்தும் எந்த வீடுகளின் பலன்களை நடத்துகிறது, அது என்ன விதமான பலன்களை நடத்துகிறது ( நன்மை தீமை ) என்று கணிப்பது சரியான பலன்களை சொல்ல ஏதுவாக இருக்கும் . மேலும் இந்த வீடுகளுடன் கோட்சார ரீதியாக  நவ  கிரகங்கள் சம்பந்தம் பெறுகிறதா என்று கணிப்பது மிக முக்கியம் .

 6   அப்படி இந்த வீடுகளுடன் கோட்சார ரீதியாக  நவ  கிரகங்கள் சம்பந்தம் பெற்றால் அவை எந்தவிதமான பலன்களை தருகிறது  ( நன்மை தீமை ) என்று கணிப்பது முக்கியம் .

7  ஒரு வேலை திசை புத்தி பலன் நடத்தும்  வீடுகளுடன் கோட்சார ரீதியாக கிரகங்கள் சம்பந்தம் பெற வில்லை என்றால், கோட்சார பலன்களை பற்றி நாம் கவலை கொள்ள தேவையில்லை.

8  எந்த ஜாதகமாக  இருந்தாலும் நடக்கும் திசை எந்த வீடுகளுடன் தொடர்பு பெறுகிறதோ அந்த வீடுகளுடன் கோட்சார கிரகங்கள் சம்பந்தம் பெற்றால் மட்டுமே நன்மை தீமை பலன்களை செய்யும் . 


எடுத்துகாட்டாக :  கோட்சார அமைப்பு 05  / 03  / 2012 

ஒரு ரிஷப லக்கினம் , கன்னி ராசியை சேர்ந்தவருக்கு , சுய ஜாதகத்தில் நடக்கும் திசை 1ம் வீடு 7 ம் வீடு, -- 10 ம்    வீட்டுடன் தொடர்பு பெற்று  தற்பொழுது பலன் நடத்துமாயின், ஜாதகர் கன்னி ராசியாக இருந்தாலும் துலாத்தில் தற்பொழுது  இருக்கும் சனிபகவானால் ( ஏழரை சனி என்று மற்றவர் பயமுறுத்துவார் ) எந்தவிதமான நன்மை தீமையான பலன்களையும் அனுபவிக்க மாட்டார் , ஆனால் லக்கினம் மற்றும் ஏழாம் வீட்டுடன் தொடர்புடைய கோட்சார ராகு கேது இரு கிரகங்களினாலும் 100  சதவிகித நன்மையே பெறுவார்.2 comments:

 1. சார் இது எல்லாம் எனக்கு சொல்லவே இல்லையே..


  //ஆனால் லக்கினம் மற்றும் ஏழாம் வீட்டுடன் தொடர்புடைய கோட்சார ராகு கேது இரு கிரகங்களினாலும் 100 சதவிகித நன்மையே பெறுவார்.//

  என்றாலும் விளக்கமாக கூறியதிற்கு நன்றி .. மற்ற ஜோதிடர் போல் இல்லாமல் ராகு கேது நன்மையும் செய்வர் என்று உறுதியாக சொல்லியதிற்கு நன்றி. ஏனென்றால் நிறைய பேர் ஜாதகத்தை பார்த்ததும் ராகு கேதுக்கு கட்டாயமாக பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொல்வது உண்டு(ஜாதகத்தில் ராகு கேது நன்மையே செய்தலும் ).

  நன்றி

  ReplyDelete
 2. நன்றி ஐயா, இப்படிப்பட்ட புதிய விஷய நுணுக்கமுள்ள பதிவுகளை தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.

  பொதுவாக தசா புக்தி பலன்களையும், கோச்சார பலன்களையும் இணைத்து பார்த்து பலன் சொல்லும் போது தசா, புக்திகளை நடத்தும் கிரகங்கள் கோச்சாரத்தில் லக்னத்திற்கு எந்த நிலையில் இருக்கின்றனர் என்பதை கவனித்து பலன் சொல்ல வேண்டும் என்பது தங்கள் பதிவிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

  அதாவது நடக்கின்ற தசா புக்தி பலனை நடத்தும் நாதர்கள் கோச்சாரத்தில் கெடுதலான நிலையில் இருந்தால் அந்த தசா புக்தி நற்பலன்களை தராது என சொல்ல வேண்டும் அல்லவா?

  எனக்கு ஒரு சிறிய ஐயம். ஒருவருக்கு சந்திர தசா நடக்கிறது எனில் 10 வருடம் நடைபெறும் சந்திர தசாவின் நன்மை தீமைகளை கோச்சாரத்தில் 2 நாளைக்கு ஒரு முறை மாறும் சந்திரனை எப்படி சம்பந்தப்படுத்தி பலனை நிர்ணயிப்பது.

  மற்றொரு ஐயம். எந்த தசாவிலும் சுயபுக்தி வேலை செய்யாது என்றும் அப்படி நன்மை செய்தால் தசா முழுவதும் நற்பலன்களை செய்யாது என்றும் ஜோதிட கருத்து உள்ளதே. தங்களின் கருத்து என்ன?

  ஒரு தசாவில் சுய புக்தி பலன்களை எப்படி நிர்ணயம் செய்து பலனை சொல்வது? ஏனெனில் பல தசாக்களில் சுய புக்தி காலம் ஏறக்குறைய 2 ஆண்டுகளுக்கு மேல் நடக்கும் போது அவருக்கு வாழ்வில் முக்கியமான சம்பவங்கள் எதுவும் நடைபெறாதா? அவற்றை ஜோதிடர்கள் சுயபுக்தி பலன் தராது என்று நினைத்து சொல்லாமல் விட்டுவிடக்கூடாது என்பதற்காக கேட்கிறேன்.

  ReplyDelete