செவ்வாய், 1 மே, 2012

சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் சித்தரவதையா ? வெள்ளி கிழமை ஆண் குழந்தை பிறந்தால் குடும்பம் விளங்காதா ?



 கேள்வி :

சித்திரை மாதம் பிறக்கும் குழந்தையாலும், வெள்ளிகிழமை பிறக்கும் 
ஆண் குழந்தையாலும், சில நட்சத்திரங்களில் பிறக்கும் குழந்தைகளாலும்
அதன் பெற்றோருக்கு மற்றும் குடும்பத்திற்கு  துன்பம் , தோஷம் , கண்டம், 
இழப்பு போன்ற நிலைகள்  வரக்கூடுமா ?  அப்படி வருமாயின் அதற்க்கு 
ஜோதிட ரீதியான தீர்வு என்ன ? தயவு செய்து வழிகாட்டுங்கள் .

பதில் :


ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்களையெல்லாம் திருத்தவே முடியாது! என்றுஒரு திரை படத்தில் விவேக் அவர்கள் சொன்னது தான் நமது
நினைவுக்கு வருகின்றது,

இதுவரை மனிதர்களுக்கும் நவ கிரகங்களுக்கும் அந்த தோஷம் இந்த தோஷம்
என்று கண்டு பிடித்தவர்கள்,  இப்பொழுது பிறக்கும் குழந்தைக்கும் தோஷம் கற்ப்பிக்க துவங்கி விட்டனர்குழந்தையும் தெய்வமும் 
குணத்தால் ஒன்று என்று பெரியவர்கள் சொல்ல கேட்டு இருக்கிறேன் , குழந்தை இருக்கும் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும் என்றும் கேள்வி பட்டு இருக்கிறேன் , குழந்தை
பாக்கியம் இல்லாமல் பல பேர் கோவில் கோவிலாக சென்று 
தவம் இருப்பதையும் என் கண்ணார கண்டு இருக்கிறேன் .


ஆனால், சித்திரை மாதம்பிறக்கும் குழந்தையாலும், வெள்ளிகிழமை
பிறக்கும் ஆண் குழந்தையாலும், சில நட்சத்திரங்களில் பிறக்கும்
குழந்தைகளாலும் அதன் பெற்றோருக்கு மற்றும் குடும்பத்திற்கும்
துன்பம் , தோஷம் , கண்டம், இழப்பு போன்ற நிலைகள்  வரும் என்று
எந்த ஜோதிடமும், ஜோதிட  சாஸ்திரமும்  சொன்னதாக எனது பார்வைக்கு படவில்லை . 
அப்படி சொல்லி இருக்குமாயின் அது ஜோதிடசாஷ்திரமாக இருக்க
வாய்ப்பில்லை. ஜோதிட கலை அனைவரின் நல்வாழ்க்கைக்கு மட்டும் 
வழிகாட்டுகிறதே தவிர, ஒருவர் தீமையான பலனை அனுபவிக்க அல்ல .
 
மேலும் இது போன்ற கருத்துகளை,  மற்றும் மூட நம்பிக்கைகளை  ஜோதிட கணிதம்  என்ற பெயரில் சில கத்து குட்டிகள் சொல்வதையும்,
உளறுவதையும் வேதவாக்காக எடுத்து கொண்டு செயல்படுவர்களுக்கு 
அறிவு என்ற ஒன்று தம்மிடம் இருப்பதை மறந்தவர்களாகவே இருப்பார்கள் .

ஒருவனுடை நல்வாழ்க்கைக்கும் துன்பத்திற்கும் அவனே காரணம் என்பதை 
மனிதர்கள் நிச்சயம் உணர வேண்டும் , உங்களுடைய வாழ்க்கையை 
உங்களுக்கு பிறக்கும் குழந்தை நிச்சயம் நிர்ணயம் செய்ய வாய்ப்பு  இல்லை 
அப்படி நிர்ணயம் செய்யுமானால் உங்களின் ஜாதகம் என்ன செய்து கொண்டு 
இருக்கிறது ? 

ஒருவருக்கு குழந்தை பிறக்கிறது பிறந்த சில மாதங்களில் அதன் தகப்பனார் , விபத்தில் இறந்து விட்டார்,  இதற்க்கு உண்மை காரணம் அவருக்கு  இருந்த 
போதை பழக்கமே, ஆனால் குழந்தையின் ஜாதகத்தை பார்த்த ஜோதிடன்  சொன்னது தகப்பன் இறந்ததிற்கு காரணம், இந்த குழந்தையின் ஜாதகமே  என்று ! 


குடித்து விட்டு கவனம் இல்லாமல் வாகனம் ஒட்டி , விபத்தை தானே 
ஏற்ப்படுத்தி கொண்டு  இறந்து போனதிற்கு காரணம் அவரே, இதில் குழந்தையின் பங்கு ஒரு சதவிகிதம் கூட இல்லை என்பதே உண்மை .


அந்த குழந்தை செய்த ஒரே தவறு அவருக்கு குழந்தையாக பிறந்தது 
மட்டுமே.

ஜோதிட அன்பர்களே கேள்வியில் உள்ளது போல் எந்தவித தீமையான 
பலனையும், குழந்தையின் ஜாதக அமைப்போ , நட்சத்திரமோ , கிழமைகளோ  நிர்ணயம் செய்ய 100 சதவிகிதம் வாய்ப்பு இல்லை, 

உண்மையில் சித்திரை மாதங்களில் பிறக்கும் குழந்தைகள் அதிகம் 
பேர் நல்ல அரசு துறைகளில்,பணியாற்றும் யோகத்தை பெற்றவர்களாக 
காணப்படுகின்றனர் , நிர்வாகத்தில்சிறந்து விளங்குகின்றனர், 
நீண்ட ஆயுள் அமைப்பை பெறுகின்றனர், சிறந்த ஆரோக்கியம் , மன உறுதி நல்ல எண்ணம்,மற்றவருக்கு சேவை செய்யும் 
தொழில் சிறந்து விளங்கும் தன்மையை பெறுகின்றனர் , வெள்ளி 
கிழமை நாளில் பிறக்கும் ஆண்குழந்தைகள் அனைவரும் 
மண்ணுலக வாழ்க்கையில்  கிடைக்கும்  அனைத்து யோகங்களையும் பெற்று சிறப்பாகவே காணப்படுகின்றனர் .

எந்த நட்சத்திரமும் தீமை செய்பவை அல்ல நட்சத்திரம் மட்டுமே ஜாதகத்தை 
நிர்ணயம் செய்து விட வாய்ப்பு இல்லை.

நல்லதே நினையுங்கள் நன்மையே நடக்கும் , இதற்க்கு பரிகாரம்  சில கத்து குட்டி ஜோதிடன் வேண்டுமானால் சொல்ல முடியும் எங்களால் இயலாது காரணம் எங்களது ஜோதிடம்  உண்மை அடிப்படையாக  கொண்ட  ஜோதிட முறை என்பதே .          
 
வாழ்க வளமுடன் 


ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக