ஞாயிறு, 13 மே, 2012

மேஷ லக்கினத்தில் ராகு அல்லது கேது அமர்ந்தால் தரும் பலன்!



ஜாதகரை ஒரு இடத்தில் பிடித்து வைக்க முடியாது , நல்ல சுறு சுறுப்புடன் அனைத்து வேலைகளையும் செய்யும் தன்மை , மிக சிறந்த நிர்வாக திறமை , நினைத்ததை நடத்தி காட்டும் திறன் என எடுக்கும் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி பெரும் அமைப்பு , வெப்ப நோய்களால் சிறு சிறு தொந்தரவுகள் , தலை வழி போன்ற பிரச்சனைகள் ஏற்ப்பட கூடும் , இருப்பினும் சுய கட்டுப்பாடான வாழ்க்கை முறை , நல்ல பழக்க வழக்கங்களுடன் ஜாதகர் சிறந்து விளங்குவார் , மேலும் உழைப்பால் உயர்ந்தவர்கள் என பெயர் எடுக்கும் தன்மை , ஜாதகருக்கு ஏற்ப்படும் ,.


 சில நேரங்களில் மற்றவர்கள் புரிந்து கொள்ள இயலாதவாறு தனது நடவடிக்கையை கொண்டிருப்பார் , கால புருஷ தத்துவப்படி முதல் வீடாகவே மேஷம் வருவதால் முருக பெருமானின் அருள் பரிபூரணமாக இவர்களுக்கு கிடைக்கும் , ஆயுள் பூரணமாக அமைந்து இருக்கும் , சட்டத்திற்கு புறம்பான தொழில்களில் அதிக வருவாய் பெரும் அமைப்பை கொண்ட ஜாதகராக இருப்பார் , அல்லது மறை முக வருவாயினை பெரும் வாய்ப்பு அதிகம் ஜாதகருக்கு ஏற்ப்படும் .


மேஷ லக்கினத்தில் ராகு கேது அமர்ந்த ஜாதகருக்கு திருமண வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக அமைவதில்லை , இதற்க்கு காரணம் களத்திர பாவத்தில் அமரும் ராகு அல்லது  கேதுவே , மேலும் மனதிற்கு இசைந்த மனையாள் வாய்ப்பதில்லை , பலதார யோகமும் ஜாதகருக்கு ஏற்ப்படுகிறது .

 நண்பர்களும் , கூட்டாளிகளும் ஜாதகருக்கு சரியாக அமைவதில்லை , மேலும் அதிகம் நம்பிக்கை துரோகத்திற்கு ஆர்ப்படும் நிலை இந்த ஜாதகருக்கு ஏற்ப்படுவதை தவிர்க்க இயலாது , எனவே நண்பர்களுடனோ , கூட்டாளிகளுடனோ தொழில் செய்தால் ஜாதகர் அதிக கவனத்துடன் இருப்பது நல்லது , பொது மக்களை நம்பி ஜாதகர்  களத்தில் இறங்கினால் கையில் திருவோடு நிச்சயம் .

தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது ஜாதகருக்கும் , மற்றவர்க்கும் நன்மை தரும் . மேலும் தொழில் செய்தால் ஜாதகர் தனியாக செய்வது 100 சதவிகித நன்மை இல்லை எனில் பல வகையில் துன்பப்பட வேண்டும் .


மேஷ லக்கினத்தில் ராகுவோ , கேதுவோ அமரும்பட்சத்தில் ஜாதகருக்கு லக்கினாதிபதி செவ்வாய் எங்கு அமர்ந்தாலும் அதை பற்றி நாம் எவ்வித கவலையும் பட தேவையில்லை , காரணம் லக்கினத்தின் முழு பலனையும் ராகுவோ , கேதுவோ மட்டுமே செய்யும் அதுவும் 100 சதவிகிதம் நன்மை என்பது மறுக்க முடியாத உண்மை .


எனவே மேஷ இலக்கின அமைப்பை கொண்டவர்கள் லக்கினத்தில் ராகுவோ , கேதுவோ அமரும்பட்சத்தில் ஜாதகர் இலக்கின பாவக வழியில்  நன்மை மட்டுமே பெறுவார் .


 மேஷ லக்கினத்திற்கு லக்கனத்தில் ராகுவோ அல்லது கேதுவோ அமர்வது லக்கினத்திற்கு மட்டும் 100 சதவிகித நன்மையையும் ,  லக்கினத்திற்கு களத்திர பாவமாக வரும் துலாம் ராசியில் ராகுவோ , கேதுவோ அமர்வது 100 சதவிகித தீமையான பலனை தரும், என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை .

வாழ்க வளமுடன்  
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
 

1 கருத்து:

  1. ஐயா
    என் மகளுக்கு மேஷ லக்கினத்தில் கேதுவும் ஏழில் ராகுவும் சனியும் வருகிறது. இது தீமை பயக்குமா?

    ராசி மகரம்
    நட்சத்திரம் திருவோணம் 4
    லக்கினம் மேஷம்
    பிறந்த நாள் : 27-3-2014
    பிறந்த நேரம் : 07:26 AM

    பதிலளிநீக்கு