செவ்வாய், 22 மே, 2012

மிதுன லக்கினத்தில் ராகு அல்லது கேது அமரும்பொழுது தரும் பலன் !






மிதுன லக்கினம் காலபுருஷ தத்துவத்திற்கு மூன்றாம் வீடாகவும், காற்று தத்துவ உபய ராசியாகவும் அமைகிறது  , சுய ஜாதகத்தில் மிதுன ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு லக்கினத்தில் ராகு அல்லது கேது அமரும்பொழுது , இலக்கின பாவகத்திர்க்கு உண்டான முழு பலனையும் தானே எடுத்துக்கொண்டு பலனை நடத்துவார்கள், அப்படி பார்க்கும் பொழுது மிதுனலக்கினத்தில் ராகு அல்லது கேது அமர்வது 100 சதவிகித நன்மையே ஜாதகர் இலக்கின வழியில் இருந்து பெறுவார்.

ஜாதகர் வளரும் சூழ்நிலை மிகவும் நல்ல அமைப்பை பெற்றிருக்கும் , அடிப்படை கல்வி ஜாதகருக்கு இயற்கையாகவே நல்ல முறையில் அமையும் , ஜாதகர் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றியை தரும் , சிறந்த விளையாட்டு வீரராக திகழும் தன்மை ஏற்ப்படும் , இவர்களிடம் இருக்கும் சிறப்பான விஷயம் என்னவென்றால் , தமக்கோ , அல்லது பிறருக்கோ ஏற்ப்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் சரியான ஆலோசனை வழங்குவதில் இவர்களுக்கு நிகர் இவர்களே , சமயோசிதமான புத்திகூர்மை , மற்றவர்களுக்கு சிறப்பான ஆலோசனை வழங்கும் அதி புத்திசாலி தனம் , அதிக அறிவாற்றல் திறன் , என இந்த லக்கினத்திற்கு உண்டான பலனை ராகு , கேது விருத்தி செய்து தரும் .

ஜாதகரின் சுதந்திர மனப்பான்மைக்கு குறுக்கே எவர் வந்தாலும் , அவரை தனது புத்திசாலி தனத்தால் எளிதாக கழட்டிவிடும் தன்மையும் ஏற்ப்படும் , ஒரு தொழில் நிறுவனம் சிறப்பாக இயங்க இந்த அமைப்பை பெற்றவர்களை நிர்வாகத்தில் வைப்பது சாலச்சிறந்தது , காரணம் இவர்களின் அணுகுமுறை மற்றவர்களிடம் இருந்து முற்றிலும் வேறுபாடும் , நலிந்த நிறுவனங்களை கூட தனது புத்திகூர்மையாலும் , நிர்வாக திறமையாலும் வெகு விரைவில் வெற்றி பெற செய்யும் தன்மை ஜாதகருக்கு நிச்சயம் உண்டு .

ஜாதகரை  மாஹாபாரத்தில் வரும் இருவருடன் ஒப்பிட முடியும் ஒருவர் பகவான் கிருஷ்ணர் , இன்னொருவர் ராஜ சகுனி , இதில்  பகவான் கிருஷ்ணர் தனது அறிவு திறனால் பாண்டவர்களை வாழவைத்தார், ராஜ சகுனி தனது அறிவு திறனால் கௌரவர்கள்  அழிவுக்கு காரணமாக விளங்கினார் , அதுபோல் ஜாதகர் சேரும் இடத்திற்கு ஏற்றார் போல் நன்மையையும் , தீமையும் பெறுவார்கள் , இவர்கள் நினைத்தால் தனது அறிவு திறனால் முடியாத காரியம் எதுவும் இல்லை என்பதே உண்மை , நல்வழியில் நடந்து நலம் பெருக .

ஜாதாகர் இலக்கின வழியில் 100 சதவிகிதம் நன்மை பெற்றாலும், களத்திர , கூட்டாளி , கூட்டு ஆகிய வழியில் 100 சதவிகிதம் தீமையான பலனே நடக்கும் , இதற்க்கு காரணம் களத்திர பாவகத்தில் அமரும் ராகு , கேது கிரகமே, வெளியில் சகல விதங்களிலும் வெற்றிபெறும் ஜாதகர் வீட்டில் தனது மனைவியை கண்டால் பெட்டி பாம்பாக அடங்கிவிடுவார் , சிலர் தன் மனைவியிடம் அடி வாங்காத ஏரியாவே கிடையாது என்ற நிலை ஏற்ப்படும் .

தனது  மனைவிக்கு கோபம் வந்து விட்டால் அன்றைக்கு ஜாதகர்தான் பலிகட.  கரண்டி , பருப்பு மத்து , பூரிகட்டை என்று ஜாதகறது இல்லத்தரசி கையில் வைத்துள்ள , பொருட்களில் பாரபட்சம் இல்லாமல் பூஜை நடக்கும். உள்ளே நன்றாக வாங்கிகொண்டு வெளியே வந்து நான் என் பொண்டாட்டியை, அடிப்பேன் , குத்துவேன் ,வெட்டுவேன் , யாராவது கேட்டா அவர்களையும் அடிப்பேன் , குத்துவேன் ,வெட்டுவேன்  என்று நம்ம கவுண்டமணி கணக்கா டயலாக் விடும் நிலைக்கு ஜாதகர் ஆளாக வேண்டும்.

ஆக மிதுன இலக்கின ஜாதகர்கள் அனைவரும் தனது மனைவியிடம் சற்றே பயபக்தியுடன் இருப்பது நலம் .

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696


  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக