திங்கள், 7 மே, 2012

ஜாதகத்தில் பலன் தருவதில் அதிக பங்கு வகிப்பது நவ கிரகமா? பனிரெண்டு பாவகமா?



 ஒரு சுய  ஜாதகத்தில்  பலனை நடத்துவதில் முக்கிய பங்கு வகிப்பது கிரகங்களா?  பாவகங்களா?  என்றால்  நிச்சயம் பாவகங்களே !  இதில் எவ்வித சந்தேகமும் இல்லை காரணம் சில ஜாதக அமைப்பில் சில கிரகங்கள் ஆட்சி , உச்சம் என்ற நிலையில் வீற்றிருக்கும் , ஆனால் ஜாதகருக்கு அந்த கிரக அமைப்பில் இருந்து எந்தவிதமான நன்மையையும் கிடைத்து இருக்காது .


 அந்த மாதிரி ஜாதகத்தை பார்க்கும் சில ஜோதிடர்கள்  "அப்பா உனக்கு சுக்கிரன் உச்சம் எனவே மண்ணில்  அனைத்து சுக போகங்களும் நிச்சயம் கிடைக்கும்" என்று உசுப்பேத்தி விடுவார்கள் ஜாதகர் அப்படியே சந்தோஷ வானில் சிறகடித்து பறக்க துவங்கி விடுவார் ஆனால் நடப்பது வேறு மாதிரி இருக்கும் ஜாதகருக்கு சுக்கிரன் பேக்கை கிழித்துக்கொண்டு இருப்பார் , இதுமாதிரியான ஜாதக அமைப்பை நாங்கள்  நிறைய பார்த்திருக்கிறோம் .


இதற்க்கு காரணம் என்ன ?


ஜாதகத்தில் கிரகங்கள் எந்த நிலையில் இருந்தாலும் , லக்கினம் உட்ப்பட  12 பாவகங்களும் நன்றாக இருப்பின் ஜாதகர் நிச்சயம் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருப்பார் , இதில் சுக்கிரன் நீச்சமானாலும் சரி , குரு நீச்சமானாலும் சரி .

 காரணம் லக்கினம் உட்பட 12 பாவகங்களும் குடம் மாதிரி , அதில் நிரப்ப படும் நீரே கிரகங்களின் சக்தி . இதில் ஒவ்வொரு மனிதரின் கர்ம வினை பதிவிற்கு ஏற்றார் போல் இந்த குடங்கள் நல்ல நிலையிலும் , சிறு ஓட்டை முதல் பெரிய ஓட்டை வரை வித விதமாக , வினை பதிவிற்கு ஏற்றார் போல் இறை அருளால் வழங்க படுகிறது .


 இந்த குடங்களில் அனைவருக்கும் சம விகிதத்தில் விழும்  நீர்
 ( கிரக சக்தி ) நல்ல குடங்களில் ஆயுள் முழுவதும் நிறைந்து இருக்கிறது , ஓட்டை குடங்களில் விழும் நீர் ஓட்டைக்கு தகுந்தார்  போல் விரையம் ஆகிறது ஆவறவர் வினை பதிவிற்கு ஏற்றார் போல், மனிதர்கள் சில பேர் மட்டும்  இறைநிலை தத்துவத்தை உணர்ந்து கர்மவினை பதிவை அகற்றி தமது குடங்களின் ஓட்டைகளை தாமே அடைத்துக்கொண்டு இறைநிலையை அடைகின்றனர் , பெரும்பாலானோர் இதை பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் தன்னிடம் உள்ள ஜீவ சக்தியை 
( கிரக சக்தியை ) விரையம் செய்கின்றனர் .


இது தொடர்ந்து நடக்கும் பொழுது மனிதனுக்கு அனைத்து கஷ்டங்களும் , துன்பங்களையும் அதிகமாகிறதோ தவிர நன்மை ஏற்ப்படுவதில்லை , இதில் விழிப்புணர்வை அனைவரும் பெற வேண்டும் என்பது எனது ஆவல் ,


மேலும் விண்வெளியில் சஞ்சாரம் செய்யும் நவகிரகங்கள் ( சாயா கிரகமான ராகு கேது உட்ப்பட ) அனைத்தும் பூமிக்கு ஒரே அமைப்பில் , சரிவிகிதமாக  ஜீவ சக்தியை அனுப்பிக்கொண்டுதான் இருக்கிறது , அந்த ஜீவ சக்தி அனைவருக்கும் ( ஓரறிவு ஜீவன் முதல் ஆறறிவு ஜீவன் வரை ) சரிவிகிதத்தில் தான் கிடைக்கிறது, தமக்கு கிடைத்திருக்கும் பாத்திரத்திற்கு ஏற்ப கிரக ஜீவ சக்தி சேமிக்க படுகிறது அந்த அமைப்பில் நன்மையோ தீமையோ ஜீவன்கள் அனுபவிக்கின்றன இதுவே உண்மை .


இதற்க்கு நாம் நவகிரகத்தின் மீது அந்த தோஷம் , இந்த தோஷம் என்று பலி போடுவது எப்படி சரியாகும் , சற்றே சிந்திக்கவும்.

இதற்க்கு மாறாக வர்ஷன் ஜோதிடன் அவனுக்கு கிரக ஜீவ சக்தியை அதிகம் கொடு என்றும் , குழந்தை கணினி பொறியாளர் அவருக்கு இன்னும் அதிகம் கொடு என்றும் நவகிரகங்கள் பாகு பாடு கட்டுவதில்லை , அவரவர் குடத்திற்கு ( பாவக வலிமைக்கு  ) ஏற்றார் போல் நன்மை தீமை பலன் நடக்கிறது .


அனைவரும் கர்ம வினை பதிவை ( குடத்தின் ஓட்டையை அடைக்கும் வழி ) போக்கிக்கொள்ளும் தேடுதல் இருப்பின் அனைவருக்கும் நன்மையே நடக்கும்.


வாழ்க வளமுடன்

ஜோதிடன் வர்ஷன்

9443355696 .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக