சனி, 19 மே, 2012

ரிஷப லக்கினத்திற்கு லக்கினாதிபதி நின்ற இட பலன்கள் !




( கிழ்காணும் பலன்கள் இலக்கின பாவக பாகைக்குள் உட்பட்டு, சம்பந்த பட்ட வீடுகளின் பகைகளில்  அமரும்பொழுது தரும் பலன்கள் ஆகும் என்பதை கவனத்தில் கொள்க )

கால புருஷ தத்துவத்தில் ரிஷபலக்கினம் இரண்டாம் வீடாக வருகின்றது , சுய ஜாதகத்தில் ரிஷப ராசியை லக்கினமாக பெற்றவர்களுக்கு,  லக்கினாதிபதி  சுக்கிரன் லக்கினத்திற்கு நின்ற இட பலனை இனி காண்போம் !

ரிஷப லக்கினாதிபதி சுக்கிரன் லக்கினத்தில் நின்றால் ஜாதகர் மிகசிறந்த யோகசாலி , எடுக்கும் காரியங்கள் யாவும் வெற்றி பெரும் , நல்ல கல்வியறிவு ஜாதகருக்கு கிடைக்க பெரும் , நீண்ட ஆயுளும் , நல்ல உடல் ஆரோக்கியமும் அமைய பெறுவார் , நிறைய சொத்து , நில புலன்கள் , வண்டி வாகனங்கள் என ஜாதகருக்கு இயற்கையாகவே அமைந்து இருக்கும் , நல்ல மனமும் குணமும் அமைய பெற்றவராக ஜாதகர் காணப்படுவார் , பெருந்தன்மையான குணங்கள் ஜாதகருக்கு இயற்கையிலே அமைந்து விடும் .லக்கினத்தில் சுக்கிரன் அமர்வது 100 சதவிகிதம் நன்மையே ஜாதகருக்கு தரும் .

ரிஷப லக்கினாதிபதி சுக்கிரன் இரண்டாம் பாவகம் மிதுனத்தில் நின்றால், வரும் வருவாய் அனைத்தும் செலவு செய்துவிடுவார் , சொல் வாக்கை காப்பாற்ற இயலாது , குடும்பத்தில் அடிக்கடி தொல்லைகளை சந்திக்க வேண்டியிருக்கும் , ஜாதகர் பண விசயங்களில் மிகவும் கவனமாக இருப்பது மிகுந்த நலம் தரும் , ரிஷப லக்கினாதிபதி சுக்கிரன் இரண்டாம் பாவகம் மிதுனத்தில் அமர்வது அவ்வளவு நன்மை தர வாய்ப்பில்லை லக்கினத்திற்கு .

ரிஷப லக்கினாதிபதி சுக்கிரன் மூன்றாம் பாவகம் கடகத்தில்  நின்றால், ஜாதகர் அதிர்ஷ்டம் நிறைந்தவர் , நினைக்கும் எண்ணங்களை நடைமுறைக்கு கொண்டுவரும் தன்மை அமையப்பெருவார் , எழுத்தின் மூலம் செல்வாக்கு உயரும் , நல்ல சொத்து சுக சேர்க்கை ஏற்ப்படும் , அரசுவழி விருதுகள் கிடைக்க பெறுவார் , வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது வெகு விரைவானதாக அமையும் . பால் பண்ணை , மற்றும் நாலுகால் ஜீவன்களை வைத்து செய்யும் தொழில்களில் அபரிவிதமான வளர்ச்சி , FMCG துறையில் அதிகம் சாதிப்பவர்கள் இவர்களே , உணவு சார்ந்த தொழில்களில் அதிக வெற்றியினை பெறுவார் இந்த அமைப்பை பெற்ற ஜாதகர்.  ரிஷப லக்கினாதிபதி சுக்கிரன் மூன்றாம் பாவகம் கடகத்தில் அமர்வது 100 சதவிகிதம் லக்கினத்திற்கு நன்மையே  தரும் .

ரிஷப லக்கினாதிபதி சுக்கிரன் நான்காம்  பாவகம் சிம்மத்தில்  நின்றால், தாயாருக்கு அவ்வளவு நன்மை தருவதில்லை , அல்லது ஜாதகருக்கு , வண்டி வாகனம் , சொத்து சுகம் , வீடு ஆகியவை ஜாதகரின் பெயரில் இருந்தால் இழக்க வேண்டிவருகிறது , நல்ல குணங்களும் ஜாதகருக்கு அமைவதில்லை , அவசரப்பட்டு செய்யும் காரியங்கள் அனைத்தும் தோல்வியே தரும் , சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கை கொண்டவராக காணப்படுவார் , ரிஷப லக்கினாதிபதி சுக்கிரன் நான்காம்  பாவகம் சிம்மத்தில் அமர்வது அவ்வளவு நன்மை தர வாய்ப்பில்லை லக்கினத்திற்கு .

ரிஷப லக்கினாதிபதி சுக்கிரன் ஐந்தாம் பாவகம் கன்னியில் நின்றால், ஜாதகருக்கு அனைவரும் உதவி செய்வார்கள் , பெண்கள் உதவி அதிகம் கிடைக்கும் , ஜாதகர் எவ்வித சூழ்நிலையிலும் இறை அருளால் நன்மையே பெறுவார் , இவர்களுக்கு இறைநிலை தரிசணம் இயற்கையாகவே கிடைக்கும் , இருப்பினும் தான் கொண்ட எண்ணங்களில் இருந்து பின்வாங்கும் தன்மையில்லாதவர்கள் , லட்ச்சியவாதிகள் , அரசியலில் நல்ல முன்னேற்றத்தையும் மக்களின் அன்புக்கும் பாத்திரமாக விளங்கும் தன்மை ஜாதகருக்கு ஏற்ப்படும் , இளகிய மனம் படைத்தவர்கள் , இந்த குணத்தை மற்றவர்கள் தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொண்டு நன்மை பெறுவார்கள் நல்ல அதிர்ஷ்டம் தொடர்ந்து ஜாதகருக்கு வந்துகொண்டே இருக்கும் . ரிஷப லக்கினாதிபதி சுக்கிரன் ஐந்தாம் பாவகம் கன்னியில் அமர்வது 100 சதவிகிதம் லக்கினத்திற்கு நன்மையே  தரும் .

ரிஷப லக்கினாதிபதி சுக்கிரன் ஆறாம்  பாவகம் துலாம் ராசியில்  நின்றால், ஜாதகர்  தேவையில்லாமல் மற்றவர் விஷயங்களில் மூக்கை நுழைப்பது அவ்வளவு நல்லதல்ல , மேலும் யாருடனும் பகைமை பாராட்ட கூடாது குறிப்பாக பெண்களிடம் , காரணம் அவர்களால் கேட்ட பெயர் ஏற்ப்பட வாய்ப்பு அதிகம் . கடன் பெறுவதும் , கடன் கொடுப்பதும் ஜாதகருக்கு அதிக சிரமங்களை கொடுக்கும் , மற்றவருக்காக ஜாமீன் போடுவது தன் தலையிலே கல்லை போட்டுகொள்வதர்க்கு இணையானது , ஆனால் அரசியல் செல்வாக்கு ஜாதகருக்கு நிச்சயம் ஏற்ப்படும் , எந்த ஒரு செயலையும் மற்றவர் ஆலோசனை படி நடப்பது தீமையான பலனையே தரும் ரிஷப லக்கினாதிபதி சுக்கிரன் ஆறாம்  பாவகம் துலாம் ராசியில் அமர்வது அவ்வளவு நன்மை தர வாய்ப்பில்லை லக்கினத்திற்கு .

ரிஷப லக்கினாதிபதி சுக்கிரன் ஏழாம் பாவகம் விருசக ராசியில்  நின்றால், பரிதாபத்துக்கு உரியவர்கள் , இலக்கின வழியில் அதிக தீமையான பலனை அனுபவிக்கும் தன்மை ஏற்ப்படும் , பல தார யோகமும் அவர்களால் துன்பமும் ஜாதகருக்கு அதிகம் ஏற்ப்படும் , பெண்களிடம் கவனமாக பழகுவது நன்மைதரும் , பெண்கள் பால் அதிகம் விரும்பப்படும் தன்மை ஜாதகருக்கு ஏற்ப்பட்டாலும் அந்த வகையில் ஜாதகர் துன்பத்தையே அனுபவிக்க வேண்டி வரும் , இந்த அமைப்பை பெற்ற ஜாதகர்கள் பெண்கள் விசயத்தில் கவனமாக இல்லை எனில்  தேவதாசாக பாட்டிலும் , பழைய சால்வையும் வெறும் கையுமாக அலைய வேண்டிவரும்,  மேலும் கூடுதல் இணைப்பாக எப்பொழுது  ஜாதகருடன் ஒரு நாய் இருக்கும் அதற்கும் சேர்த்து ஜாதகர் டாஸ்மாக்கில் மதுபானம் , சைடு டிஷ் வாங்க வேண்டி வரும். ரிஷப லக்கினாதிபதி சுக்கிரன் ஏழாம் பாவகம் விருசக ராசியில் அமர்வது அவ்வளவு நன்மை தர வாய்ப்பில்லை லக்கினத்திற்கு .

ரிஷப லக்கினாதிபதி சுக்கிரன் எட்டாம் பாவகம் தனுசு  ராசியில்  நின்றால், ஜாதகருக்கு திடீர் இழப்புகளை சந்திக்க வேண்டி வரும் மேலும் சில நேரங்களில் விபத்துகளால் அதிக பாதிப்பு ஏற்ப்பட வாய்ப்பு அதிகம் , மற்றவர்களை நம்பி அதிக தொகையை மூதலீடு செய்தால் ஜாதகருக்கு அத்தனையும் விரையமாகும் , உடல் நிலையில் அதிக கவனம் செலுத்துவது ஜாதகருக்கு அதிக நன்மைதரும் , மேலும் தீய பழக்கங்களை ஜாதகர் விட்டு விடுவது சகலத்திற்கும் நல்லது இல்லை எனில் அதிகம் மருத்துவ செலவுகளை சந்திக்க வேண்டி வரும் , எப்பொழுதும் ஜாதகர் கவனமுடன் செயல்படுவது நலன் தரும் .ரிஷப லக்கினாதிபதி சுக்கிரன் எட்டாம் பாவகம் தனுசு  ராசியில் அமர்வது அவ்வளவு நன்மை தர வாய்ப்பில்லை லக்கினத்திற்கு .

ரிஷப லக்கினாதிபதி சுக்கிரன் ஒன்பதாம் பாவகம் மகர ராசியில்  நின்றால், மிகசிறந்த தொழில் அதிபர்களாக வளம் வரும் தன்மை ஏற்ப்படும் , பல்துறை திறமை சாலிகள் கலைத்துறையில்  சாதிக்கு தான்மை கொண்டவர்கள் , எங்கும் எப்பொழுதும் விரைவான வளர்ச்சியினை ஜாதகர் பெறுவார் , முன்னேற்றம் என்பது அபரிவிதாமாக அமையும் , கலைகளில்  சிறந்து விளங்கும் அமைப்பை பெற்றவர்கள் , மிகசிறந்த மன ஆற்றல் கொண்டவர்கள் மேலும் மானோ தத்துவ மருத்துவத்தில் சிறந்து விளங்கும் தன்மை ஏற்ப்படும் , வீடு வண்டி வாகனம் , சொத்து சுகம் என ஜாதகருக்கு குறைவில்லாமல் கிடைக்க பெறுவார்கள் . ரிஷப லக்கினாதிபதி சுக்கிரன் ஒன்பதாம் பாவகம் மகர ராசியில் அமர்வது 100 சதவிகிதம் லக்கினத்திற்கு நன்மையே  தரும் .

ரிஷப லக்கினாதிபதி சுக்கிரன் பத்தாம் பாவகம் கும்ப  ராசியில்  நின்றால், ஜாதகர் தனது தகப்பானார் வழியில் அதிக கெடுதலான பலனை அனுபவிக்க வேண்டி வரும் இதனால் மன கவலை அதிகம் ஜாதகருக்கு ஏற்ப்படும், ஜீவன வழியிலும் அதிக நன்மை பெற இயலாது மற்றவர்களின் ஆதரவில் வாழும் சூழ்நிலை ஏற்ப்படும் , சுய தொழில் செய்தால் அதிக கவனமுடன் இருப்பது நல்லது கூட்டு தொழில் அவ்வளவு நன்மை தருவதில்லை .ரிஷப லக்கினாதிபதி சுக்கிரன் பத்தாம் பாவகம் கும்ப  ராசியில் அமர்வது அவ்வளவு நன்மை தர வாய்ப்பில்லை லக்கினத்திற்கு .

ரிஷப லக்கினாதிபதி சுக்கிரன் பதினொன்றாம் பாவகம் மீன   ராசியில்  நின்றால், பரிபூரண அதிர்ஷ்டம் நிறைந்தவராக ஜாதகர் காணப்படுவார் , எடுக்கும் காரியங்களில் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி , படி படியான வளர்ச்சி , அரசு துறையில் கிடைக்கும் ஆதாயம் , பெண்களால் அதிர்ஷ்டம் , பெண்களால் முன்னேற்றம் என ஜாதகருக்கு நன்மையான பலன்களே அதிகம் நடக்கும் , நீடித்த அதிர்ஷ்டம் ஜாதகருக்கு வாழ்நாள் முழுவதும் நிறைந்திருக்கும். ரிஷப லக்கினாதிபதி சுக்கிரன் சுக்கிரன் பதினொன்றாம் பாவகம் மீன   ராசியில் அமர்வது 100 சதவிகிதம் லக்கினத்திற்கு நன்மையே  தரும் .

ரிஷப லக்கினாதிபதி சுக்கிரன் பதினொன்றாம் பாவகம் மீன   ராசியில்  நின்றால்,ஜாதகர் செய்யும் சில அவசர முடிவுகளால் காலம் முழுவதும் துன்பபடவேண்டி வரும் விட்டு கொடுக்கும் மனப்பான்மை அற்றவராக காணப்படுவார் , களத்திர வாழ்க்கையில் ஜாதகர் அதிகம் பாதிக்கப்பட கூடும் , சில நேரங்களில் மனதளிவில் பாதிக்க படும் நிலைக்கு ஜாதகர் தள்ளப்படுவார் , நல்ல ஆன்மீக வாதிகளிடம் ஆசி பெறுவது ஜாதகருக்கு அதிக நன்மை பயக்கும் , முன்னேற்றத்திற்க்காக அதிகம் பாடுபட வேண்டி இருக்கும் , ஜாதகர் மற்றவர்களுடன் அனுசரித்து செல்வது வாழ்க்கையை முன்னேற்றப்பாதைக்கு அழைத்து செல்லும் .ரிஷப லக்கினாதிபதி சுக்கிரன் பனிரெண்டாம் பாவகம் மேஷ ராசியில் அமர்வது அவ்வளவு நன்மை தர வாய்ப்பில்லை லக்கினத்திற்கு .

குறிப்பு :


மேற்கண்ட பலன்கள் சுய ஜாதக ரீதியாக லக்கினம் எனும் முதல் பாவக  பலனை  திசைகள் புத்திகள் . அந்தரம் , சூட்சமம் ஆகியவைகள்  நடத்தினால் மட்டுமே பலன் நடைமுறைக்கு வரும்  என்பதை கவனத்தில் கொள்க .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

4 கருத்துகள்:

  1. நல்ல பதிவு ...
    உங்கள் பதிவு மேலும் பலரை சென்றடைய
    முதல் பக்கத்தில் இணைத்து உள்ளேன்
    பார்க்க

    தமிழ் DailyLib

    பதிலளிநீக்கு
  2. dear sir
    my name is chandra mohan
    date of birth 15/09/1975
    time of birth : 2.43 pm
    place of birth : avanashi

    i am doing garment business last 10 years but silll now i am not getting development. still have finace problem. kindly advise whan can i come to do business very well kindly advise
    waiting for your reply
    best regards
    chandra mohan

    பதிலளிநீக்கு
  3. அய்யா தங்களது பதிவை படித்தேன்.
    எனக்கு ரிஷப லக்னம் லக்கினாதிபதி லக்கினத்தில் இருக்கிறார். ஆனால் பலன் அப்படியே உல்டாவாக இருக்கிறது.

    தங்கள் பார்வைக்காக எனது ஜாதக குறிப்பை கொடுத்துள்ளேன். தயவு செய்து எனக்கு ஆலோசனை வழங்கவும்.

    பெயர்: ஜோதி மணிகண்டன்
    தந்தை பெயர்: நடராஜன்
    பிறந்த தேதி: 21.04.1975
    பிறந்த நேரம்: காலை 8.8
    பிறந்த இடம்: வீரவநல்லூர் (Viravanallur or Veeravanallur), திருநெல்வேலி மாவட்டம், தமிழ் நாடு, இந்தியா

    வசிக்கும் இடம்: பாளையங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம், தமிழ் நாடு, இந்தியா

    கேள்வி: நான் பிறந்த‌திலிருந்தே ப‌ண க‌ஷ்ட‌த்தில் தான் இருக்கிறேன். என் வாழ்வு சிற‌ந்து பிற‌ர்க்கு பொருளுத‌வி செய்யும் நிலை எப்போது வ‌ரும் அதற்கு நான் என்ன செய்யவேண்டும். மேலும், குடும்பத்தில் தினமும் சண்டை. நிம்மதி இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லக்கினம் பாதக ஸ்தான தொடர்பை பெறுவது தங்களது ஜாதகத்தில் இல்ல குறை

      நீக்கு