சனி, 5 மே, 2012

திருமணம் விரைவாக நடைபெற கன்னிமார் வழிபாடு !




சுய ஜாதக ரீதியாக குடும்ப ஸ்தானம், களத்திர ஸ்தானம் பாதிப்பை பெற்று இருக்கும்  ஜாதக  அமைப்பை சார்ந்த ஆண் பெண் அனைவருக்கும், விரைவாகவும் சிறப்பாகவும்  திருமண வாழ்க்கை அமைய காவல் தெய்வங்கள் என்று அழைக்க படும் , கருப்பனார் , முனியப்பன், அண்ணமார்  போன்ற தெய்வங்களுக்கு, அருகில் இருந்து அருள் பாலித்து வரும் துணை தெய்வங்களான கன்னிமார் எனும் சப்த கன்னிகளை, குடும்ப ஸ்தானம், களத்திர ஸ்தானம் பாதிப்பை பெற்று இருக்கும்  ஜாதக  அமைப்பை சார்ந்த ஆண்கள், பெண்கள் முறையாக வளர் பிறையில் வரும் திங்கள் , வியாழன் , வெள்ளி ஆகிய தினங்களில் மல்லிகை மலர்களையும் , வெண்பட்டு வஸ்திரத்தையும் சாற்றி , நெய் , இலுப்பை என்னை சேர்த்து வடக்கு முகமாக 7 தீபம் ஏற்றி , மாலை நேரங்களில் வழிபாடு செய்கிறவர்களுக்கு, விரைவாகவும் சிறப்பாகவும்  திருமண வாழ்க்கை அமையும் .

சுய ஜாதக ரீதியாக ஜாதகருக்கு எந்த கிழமைகள் 100 சதவிகித நன்மையை தரும் என்று தெரிந்து கொண்டு அந்நாளில் வழிபாடு செய்வது நலம் தரும் . இல்லற வாழ்க்கை இனியதாகவும் , அவர்களின் மனம் போல் வாழ்க்கை துணையும் , குடும்ப  வாழ்க்கை மிகவும் சிறப்பானதாகவும் அமையும் இதில் சந்தேகம் இல்லை மேலும்  தனது குலம் செழிக்க,
வாரிசு அமைப்பு சில மாதங்களிலேயே, எவ்வித தடையும் இல்லாமல் கிடைக்கும் என்பது ஒரு சிறப்பான செய்தி .

இளம் வயதில் திருமண வாழ்க்கை சரியானதாகவும் , சிறப்பாகவும் நடை பெற இந்த கன்னிமார் தெய்வங்கள், அருள் புரியும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை , திருமணம் ஆகாத ஒவ்வொரு ஆணும், பெண்ணும் இந்த வழிபாட்டினை  முறையாக கடை பிடிப்பது, அனைத்து குறைகளையும் தாகர்த்து இனிமையான வாழ்க்கையை அமைத்து தரும் .


மண், மனை, நிலம், சொத்து, வண்டி வாகனம் , போன்ற அமைப்புகளில் சிக்கல்கள் அனுபவித்து வருபவர்கள், அனைவரும் கன்னிமார் தெய்வங்களுக்கு விளக்கென்னையும், நெய்யும் சேர்த்து வடக்கு முகமாக விளக்கேற்றி செவ்வாய் கிழமைகளில் மாலை நேரங்களில்  வழிபாடு செய்தால், சம்பந்தபட்ட பிரச்சனைகளில் இருந்து தீர்வு நிச்சயம் கிடைக்கும் . 


ஜோதிடன் வர்ஷன் 
9443355696

3 கருத்துகள்:

  1. நல்ல பதிவு .. நிறைய கோயிலில் சப்த கன்னிமார்கள் உள்ளனர் .. உள் ஊரிலே உள்ள கோவிலில் சப்த கன்னிமார்கள் சன்னதி இருக்கும்.. தடை உள்ளவர்களுக்கு உள் ஊரிலே பரிகாரம்..
    சப்த கன்னிமார்களை கும்பிடுவோம் தடைகள் அகற்றுவோம்

    பதிலளிநீக்கு
  2. pillaygal veli naattil ullargal, avargalukkaga petrorgal parigaram seyyalaama

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செய்யலாம் இருப்பினும் , யாருக்கு பசிக்கிறதோ அவர் சாப்பிட்டால் தான் பசியாறும்,

      நீக்கு