வியாழன், 22 நவம்பர், 2012

ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் பாவகம் வழங்கும் யோக வாழ்க்கை : பகுதி 1



ஜீவனம்  எனும் தொழில் ஸ்தானம் ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் பல நெளிவு சுளிவுகளை கற்றுகொடுக்கும் இடம் , அடிப்படையில் கல்வி காலங்களில் இருந்து வரும் ஆண் மற்றும் பெண் அன்பர்கள் தனது வாழ்க்கையில் மனிதர்களை பற்றி அதிகம் தெரிந்து கொள்ள உதவும் ஒரு இடம் , போட்டிகள் நிறைந்த இந்த உலகில் ஒரு மனிதன் பொருளாதார ரீதியாக வெற்றி பெற இந்த தொழில் ஸ்தானமே உதவி செய்கிறது , குறிப்பாக கல்வி காலங்களில் எதை பற்றியும் அதிக கவலைகள் இல்லாமல் சுற்றி திரிந்த அன்பர்களுக்கு , வேலை நிமித்தமாக ஒரு இடத்திற்கு சென்று பணியாற்றும் பொழுது சம்பந்த பட்ட நபரின் வாழ்க்கையில் சூழ்நிலையே வேறு விதமாக அமைந்து விடுகிறது .

 அந்த இடத்தில் தான் ஒரு பணியாளன் என்ற எண்ணமும் , தனக்கு மேல் தன்னை கட்டுபடுத்த ஒரு நபர் இருக்கிறார் என்ற எண்ணமும் சம்பந்தபட்டவரின் சுதந்திரத்தை கட்டுக்குள் கொண்டு வந்து விடுகிறது , ஜாதகர் பொருளுக்காக ( வருமானம் ) சில சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி வருகிறது , அதிலும் தனது நேரத்தை பணத்திற்காக மற்றவருக்கு தாரை வார்க்க வேண்டி வருகிறது , அவர் எவ்வளவு பெரிய வருமானத்தை பெற்றாலும் சரி , எவ்வளவு பெரிய நிறுவனத்தில் பணியாற்றினாலும் சரி இந்த நிலையே, மேலும் ஜாதக அமைப்பில் ஜீவன ஸ்தானம் நல்ல நிலையில் இருக்கும் ஒரு நபர் மற்றவருக்காக பணியாற்றுகிறார் என்றால் அங்கே நடப்பது என்ன ? சம்பந்த பட்ட நபரின் ஜீவன ஸ்தானம் வலிமையாக வேலை செய்யும் அந்த நிறுவனத்தின் முதலாளிக்காக ( முதலாளியின் ஜாதக அமைப்பில் ஜீவன ஸ்தானம் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பது வேறு விஷயம் ), ஆனால் சம்பந்த பட்ட நபருக்கோ சிறு தொகை மட்டுமே கிடைக்கும், அதுவும் தனது உழைப்பிற்கு ஏற்ற அமைப்பில் இருக்கும் என்று சொல்ல இயலாது .

நமது நாட்டை பொறுத்தவரை ஒருவர் படிப்பு பின்பு ஒரு நல்ல வேலை என்ற முறையிலேயே  சிந்தனை ஓட்டம் செல்கிறது , தமக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது  என்றால் மற்றவரிடம் அடிமையாக இருப்பதில் தமக்கு எவ்வித அவமானமும்  இல்லை என்ற மனபக்குவத்தை தந்தது நமது நாட்டின் கல்வி முறையில்  இருக்கும் குறைபாடே , இது ஒரு சிறந்த எதிர்காலத்தை நமது இளைஞர்களுக்கு நிச்சயம் வழங்குவதற்கு உண்டான வாய்ப்பு சற்றே குறைவு, ஆக  நமது பெற்றோர்கள் தமது குழந்தைகளை சுயமாக சிந்திக்க என்று சுதந்திரம்  தருகிறார்களோ அன்றே இந்த சூழ்நிலை மாறும் .

இருப்பினும் ஒருவர் தனது ஜாதக ரீதியாக ஜீவன வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்ளலாம்  ? என்பதை பற்றி இலக்கின வாரியாக இனி நாம் பார்ப்போம் , ஒருவருக்கு சரியான வயதில் நல்ல ஜீவனம் அமைகிறது என்றால்  நிச்சயம் ஜாதகரும் ஜாதகரின் தகப்பனாருமே காரணமாக எடுத்துகொள்ள  இயலும் , ஏனெனில் ஒருவருக்கு தனது தகப்பனாருடன் நல்ல உறவு முறை இருக்கிறது என்றால் , அந்த ஜாதகருக்கு ஜீவனம் சிறப்பாக அமையும்  என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை , எனவே ஒருவருக்கு சுய ஜாதக  ரீதியாக ஜீவன ஸ்தானம் நல்ல வலிமையுடன் இருப்பது அவசியம் , இனி இலக்கின வாரியாக ஜீவன ஸ்தானம் மூலம் பெரும் நன்மை தீமைகளை பார்ப்போம் .

மேஷ லக்கினம் :

மேஷ லக்கினம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு , முதல் வீடாக வருவதால் லக்கினத்திற்கு  ஜீவன ஸ்தான அதிபதியாக சனி பகவான் வருகிறார் , மேலும் இந்த லக்கினத்திற்கு  சனி பகவான் எந்த எந்த ராசிகளில் அமர்ந்தால் ஜீவன வாழ்க்கையில்  மேன்மையும் , யோகத்தையும் தருவார் என்பதை பற்றி இனி பார்ப்போம் .

விதி விலக்கு :

மேஷ லக்கினத்திற்கு பத்தாம் பாவகமான மகரத்தில் ராகுவோ , அல்லது  கேதுவோ அமர்ந்தால் ஜீவன ஸ்தானம் 100 சதவிகிதம் வலிமை பெற்றுவிடும் , மேலும் ஜீவன ஸ்தானத்திற்கு அதிபதியான சனி பகவான் எந்த பாவகத்தில்  அமர்ந்திருந்தாலும் ஜீவன ஸ்தானத்திற்கு நன்மை தீமை பலனை தருவதற்கு தகுதி அற்றவர் ஆகிவிடுவார் , ஜீவன ஸ்தானம் மகரத்தில் அமரும்  ராகு அல்லது கேதுவே ஜீவன ஸ்தானத்திற்கு உண்டான முழு பலனையும் செய்வார்கள்  அதுவும் 100 சதவிகிதம் நன்மையாக, ஆக இங்கு மேஷ லக்கினத்திற்கு  ஜீவன ஸ்தானத்தில் அமரும் ராகு கேது கிரகத்தால் ஜாதகர் ஜீவன வழியில் யோக பலன்களையே அனுபவிப்பார் என்பதில் எவ்வித ஐயமும்  இல்லை .

மேஷத்தில் அமரும் சனி பகவானால் (லக்கினத்திலும் , ஜீவன ஸ்தானத்திற்கு நான்கிலும் அமரும் சனி ) ஜாதகர் மிகுந்த நன்மைகளையே பெறுவார் குறிப்பாக ஜாதகர் நெருப்பு சார்ந்த தொழில்கள் , கட்டுமான தொழில் , அரசு நிர்வாக தொழில்கள் , மின்னணு  உபகரண தொழில்கள் , கனரக வண்டி வாகன தொழில்கள் செய்தால்  சிறப்பான வெற்றிகளை தரும் .

ரிஷபத்தில் அமரும் சனி பகவானால் ( லக்கினத்திற்கு இரண்டிலும் ,ஜீவன ஸ்தானத்திற்கு ஐந்திலும்  அமரும் சனி ) ஜாதகருக்கு தொழில் ரீதியாக சில இன்னல்களை அனுபவிக்க வேண்டி வரும் , ஒருவேளை ரிஷபத்தில் நான்காம் பாவகத்தில் அமரும் சனிபகவானால்  யோகமே உண்டாகும் , இதனால் ஜாதகர் ஜீவன வழியில் நன்மை  பெரும் யோகம் உண்டு ஆனால் சனி ஐந்தில் அமருவது ஜீவன வழியில் அதிக  தீமையே செய்யும் .

மிதுனத்தில் அமரும் சனி பகவானால் ( லக்கினத்திற்கு மூன்றிலும் ஜீவன ஸ்தானத்திற்கு ஆறிலும் அமரும் சனி ) ஜாதகருக்கு அதிக நன்மைகள் தர சிறிதும் வாய்ப்பு இல்லை , மேலும் கடன் பட்டு செய்யும் தொழில்களில் ஜாதகர் வாழ்க்கையில்  அதிக இன்னல்களை சந்திக்க வேண்டி வரும் , இங்கு அமரும் சனி ஜாதகருக்கு ஜீவன வழியில் தீமையே செய்யும் ஜாதகரின் சிந்தனை ஜீவன அமைப்பில் படு குழியில் தள்ளிவிட வாய்ப்பு அதிகம் .

கடகத்தில் அமரும் சனி பகவானால் ( லக்கினத்திற்கு நான்கு, ஜீவன ஸ்தானத்திற்கு ஏழாம் வீட்டி அமரும் சனி கடகத்தில் பகை பெற்றாலும் கூட ) ஜாதகருக்கு  ஜீவன வழியில் கொடிகட்டி பறக்க வைத்துவிடுவார் , குறிப்பாக மக்களை  வாடிக்கையாளராக கொண்டு செய்யும் தொழில்களில் எல்லாம் வெற்றி மேல் வெற்றியே கிடைக்கும், வண்டி வாகனம் , நிலம் வீடு , உணவு பொருட்கள் விற்பனை , நீர்ம பொருட்கள் , மண்ணிற்கு கீழே கிடைக்கும் திரவ பொருட்கள்  போன்ற தொழில்களில் அபரிவிதமான முன்னேற்றம் உண்டாகும் .

சிம்மத்தில் அமரும் சனி பகவானால் ( லக்கினத்திற்கு ஐந்தில் , ஜீவன ஸ்தானத்திற்கு எட்டில் ) ஜாதகருக்கு ஜீவன வழியில் திடீர் இழப்பை தரும் , சுய  தொழில் அல்லது வேளையில் அதிக இன்னல்களை தரும், ஒருவேளை சிம்மத்தில்  ஏழாம் பாவகத்தில் சனி அமர்ந்தால் யோகமே ஏற்ப்படும் கடகத்தை  போன்றே அதிக நன்மைகளை தரும் , இருப்பினும் செய்யும் தொழில்களில்  மற்றம் உண்டாகும் அதாவது மருத்துவம் , மருந்து , உயிர்காக்கும்  தொழில்கள் என செய்யும் தொழில்களில் மாற்றத்தை தரும் இருப்பினும்  மக்கள் தொடர்பை ஏற்ப்படுத்தும் .

கன்னியில் அமரும் சனி பகவானால் ( லக்கினத்திற்கு ஆறில், ஜீவன ஸ்தான அமைப்பிற்கு  ஒன்பதில் ) ஜாதகருக்கு ஜீவன வழியில் பெரிய நன்மைகளை பெறுவதற்கு உண்டான வாய்ப்பு மிக மிக குறைவே , ஆனால் சிறப்பான அடிமை  தொழிலை தருவதற்கு உண்டான வாய்ப்பை ஏற்ப்படுத்தி தரும் , நல்ல  வேலை அமையும் ( அடிமை தொழில் ).

துலாம் ராசியில் அமரும் சனி ( லக்கினத்திற்கு ஏழாம் வீட்டிலும், ஜீவன ஸ்தானத்திற்கு  பத்திலும் அமரும் சனி ) ஜாதகருக்கு ஜீவன வழியில் வெற்றி மேல்  வெற்றியை தரும் சுய தொழில் செய்வதின் மூலம் ஜாதகர் மிகப்பெரிய வெற்றியை  பெரும் யோகம் உண்டாகும் , தனது அறிவாற்றலால் செய்யும் தொழில்களில்  எல்லாம் கோடி கட்டி பறக்கும் யோகம் உண்டாகும் , புதுமையான விஷயங்களை உலகிற்கு அறிமுகம் செய்யும் ஆற்றல் பெற்றவர்கள், ஜீவன அமைப்பில் மக்களுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டு இருப்பவர்கள்  , தன்னம்பிக்கை மற்றும் அறிவாற்றலை மட்டுமே முதலீடாக  கொண்டு தொழில் செய்யும் வல்லமை பெற்றவர்களா , எந்த ஒரு சூழ்நிலையிலும்  மனம் தளராமல் ஜீவன வழியில் மேன்மை பெரும் தன்மை பெற்றவர்கள் , இந்த அமைப்பை பெற்றவர்கள் செய்யாத தொழில்களே கிடையாது  என்று சொல்லலாம் ,குறிப்பாக ஆடை அலங்கார பொருட்கள் , சொகுசு  வண்டி வாகனங்கள் , தங்க நகை வியாபாரம் உலோகம் அலோகம் சார்ந்த தொழில்களில் வெற்றி மேல் வெற்றியே கிடைக்கும் , இது ஜீவன ஸ்தான  அமைப்பிற்கு மிகசிறப்பான இடம் மேஷ லக்கினத்திற்கு இங்கு அமரும் சனி தொழில் வெற்றியை வாரி வழங்கி விடுவார் .

விருச்சகத்தில் அமரும் சனி ( லக்கினத்திற்கு எட்டில் , ஜீவன ஸ்தானத்திற்கு பதினொன்றில்  அமரும் சனி ) ஜாதகருக்கு தொழில் ரீதியாக வெற்றிகளை வாரி வழங்கினாலும்  திருமண வாழ்க்கைக்கு பிறகே பெரிய அளவில் முன்னேற்றம்  உண்டாகும் , இருப்பினும் திடீர் இழப்புகளை தவிர்க்க இயலாது, இந்த அமைப்பை பெற்றவர்கள் தனது மனதை ஒருநிலை படுத்துவது  அவசியம் , மனம் போன போக்கில் சென்றால் சரிவுகளை தவிர்க்க இயலாது , இருப்பினும் ஜீவன வழியில் 100 சதவிகித நன்மைகளை வாரி வழங்கும் , குறிப்பாக ஆயுள் காப்பீடு , வெளிநாடுகளில் இருந்து அதிக வருமானம் , திடீர் அதிர்ஷ்டம் , புதையல் யோகம் , பண்ணை மற்றும் விவசாயம்  செய்வதால் நிறைய வருமானம் பெரும் யோகம் உண்டாகும் .

தனுசு ராசியில் அமரும் சனி ( லக்கினத்திற்கு ஒன்பதில் ஜீவன ஸ்தானத்திற்கு பனிரெண்டில் அமரும் சனி ) ஜாதகருக்கு அடிமை தொழிலை மட்டுமே சிறப்பாக அமைத்து  தரும் , மேலும் ஆசிரிய பணி , அரசு துறையில் பணியாற்றும்  யோகத்தை தர கூடும் , சுய தொழில் செய்ய ஏற்ற அமைப்பு இதுவல்ல  ஆனால் களத்திர பாவகம் நல்ல நிலையில் இருந்தால் கூட்டு தொழில் செய்யலாம் , சனி இங்கு அமர்வது பெரிய யோக பலனை தராது ஜீவன  அமைப்பிற்கு .

மகரத்தில் அமரும் சனி ( லக்கினத்திற்கு பத்திலும், ஜீவன ஸ்தான அமைப்பிற்கு  ஒன்றிலும் அமரும் சனி ) ஜீவன ஸ்தானத்தை 100 சதவிகிதம் கெடுத்து விடும்  இங்கே சனி ஆட்சி பெற்றாலும் யோக பலன் இல்லை தனது பாவகத்தை  கெடுக்க இவரே காரணமாக அமைந்துவிடுவார் , ஒரு வேலை சூரியனுடன் சேர்ந்த புதன் இங்கு அமர்ந்தால் ஜீவன ஸ்தானம் வலிமை பெரும் இதன் வழி நன்மைகள் கிடைக்க வாய்ப்பு அதிகம், ஆக சனி இங்கு அமருவது 200 சதவிகித தீமையை தரும் ஜீவன அமைப்பிற்கு .

கும்பத்தில் அமரும் சனி ( லக்கினத்திற்கு பதினொன்றிலும் , ஜீவன ஸ்தான அமைப்பிற்கு இரண்டிலும் அமரும் சனி ) ஜாதகருக்கு ஜீவன வழியில் சிரமம் தரும் அமைப்பாகவே இதையும் கருத வேண்டி வருகிறது தனது வீட்டிற்கு இரண்டில் மறையும் சனியால் ஜீவன அமைப்பிற்கு எவ்வித நன்மையையும் தர  இயலாது ஒரு வேலை சூரியனுடன் சேர்ந்த புதன் இங்கு அமர்ந்தால் ஜீவன ஸ்தானம் வலிமை பெரும் இதன் வழி நன்மைகள் கிடைக்க வாய்ப்பு அதிகம்.

மீனத்தில் அமரும் சனி ( லக்கினத்திற்கு பனிரெண்டிலும் , ஜீவன  ஸ்தானத்திற்கு மூன்றிலும் அமரும் சனி ) ஜாதகருக்கு ஜீவன வழியில் எளிதான  வெற்றிகளை வாரி வழங்கி விடுவார் , தொழில் ரீதியாக எவ்வித சிரமும்  இன்றி முன்னேற்றம் பெரும் யோகம் உண்டாகும் , குறிப்பாக பங்கு வர்த்தக தொழில்களில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும் , மேஷ லக்கினத்திற்கு  சனி இங்கு அமர்வது ஜாதகரை சுகபோகியாக மாற்றிவிடும் தன்மை பெற்றது , பணம் என்பது ஜாதகருக்கு ஒரு பெரிய விஷயமாகவே இருக்காது , ஏதாவது ஒரு வழியில் செல்வம் வந்துகொண்டே இருக்கும் .

மேற்க்கண்டவை பொது பலன்கள் என்றாலும் , சுய ஜாதகத்தை வைத்தே ஜீவன  பாவக வலிமையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது ஜோதிட தீபத்தின் கருத்து .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969

1 கருத்து:

  1. மற்ற லக்கன காரர்கலுக்கு ஜீவன ஷ்தானம் எங்கு போய்
    படிக்க வேண்டும், எங்கு எழுதியுள்ளிர்.

    பதிலளிநீக்கு