புதன், 21 நவம்பர், 2012

கேள்வி பதில் : செவ்வாய் தோஷ நிர்ணயம் , விளக்கம் !




ஐயா வணக்கம்,

தங்களின் செவ்வாய் தோஷ நிர்ணயமும் செவ்வாய் வழங்கும் நன்மையும் தீமையும்
பகுதி 1 ஐ படித்தபோது எழுந்த ஐயங்கள் இவை.

A.மேஷ லக்ன ஜாதகருக்கு 2ல் அமரும் செவ்வாயால் 100% தீமையே என்று
கூறியுள்ளீர்கள்.ரிஷபத்தில் செவ்வாய் சமம் என்ற நிலையில் உள்ளபோதும்
தீமைதான் ஏற்படுத்துவாரா?
வேறு கிரக பார்வை அல்லது சேர்க்கையால் இந்த நிலை மாறக்கூடுமா?


பதில் : மேஷ லக்கினத்திற்கு லக்கினாதிபதி என்ற முறையில் லக்கினத்திற்கு இரண்டில் மறைவது லக்கினத்திற்கும் , இரண்டாம் பாவகத்திர்க்கும் தீமையை தரும் , மேலும் எந்த ஒரு பாவக அதிபதி என்றாலும் சரி அந்த பாவகத்திர்க்கு 2,6,8,12 வீடுகளில் மறைவு பெறுவது சம்பந்த பட்ட பாவக அமைப்பிற்கு தீமையான பலனை தர கூடும் , இது பாவக அமைப்பிற்கு சில மாற்றங்களை தரவும் அதாவது ( நன்மை தீமை ) செய்யும் .

B.மேஷ லக்ன ஜாதகருக்கு 4ல் கடகத்தில் அமரும் செவ்வாய் 100% நன்மை
செய்வார் என்று கூறியுள்ளீர்கள்.கடகத்தில் செவ்வாய் நீசமாயிற்றே. பூமி
காரகன் என்ற முறையில் தன் பலமிழந்ததால் பூமி,வீடு,நிலம் போன்றவைகளால்
ஜாதகருக்கு ஆதாயம் அடையமுடியாது என்று கூறுவது சரியா?

பதில் : லக்கினத்திற்கு லக்கினாதிபதி என்ற முறையில் அதிக நன்மைகளை கடகத்தில் அமரும் செவ்வாய் நிச்சயம் தருவார் , இந்த இடத்தில் நான்காம் வீட்டுக்கு அதிபதியான சந்திரன் வளர்பிறை சந்திரனா ? தேய்பிறை சந்திரனா ? என்று நிர்ணயம் செய்த பிறகு அவர் கடகத்திற்கு எந்த வீட்டில் அமர்ந்திருக்கிறார் என்பதை வைத்து நான்காம் பாவகத்திர்க்கு செவ்வாய் தரும் நன்மை தீமை பலனை நிர்ணயம் செய்யவேண்டும் என்பதே உண்மை .

C.மேஷ லக்ன ஜாதகருக்கு 7ல் துலாமில் செவ்வாய் நன்மை செய்வார்
என்றுள்ளீர்கள்.இங்கும் செவ்வாய் சம நிலை.மேஷத்திலும் சம நிலை .இரண்டும்
சுக்கிரனின் வீடு.சோ ரிஷபத்தில் தீமையையும் துலாமில் நன்மையையும்
செய்யும் ரகசியம் என்ன?

பதில் : துலாம் ராசியில் அமரும் செவ்வாய் பகவானால் மேஷ லக்கினம் 100 சதவிகித நன்மையை பெரும் , இதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை , ஆனால் களத்திர பாவகமான துலாம் ராசியின் நிலையை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள சுக்கிரன் எங்கு அமர்ந்து இருக்கிறார் என்பதை வைத்தே நிர்ணயம் செய்ய வேண்டும் , பொதுவாக சர காற்று தத்துவ துலாம் ராசியில் நெருப்பு நன்றாக எறிவது போல் ( காற்று வேகமாக அடித்தால் பற்றி எரியும் நெருப்பின் தீவிரம் அதிகமாகும் ) இந்த இடத்தில் செவ்வாய் சுக்கிரனின் கூட்டு தொடர்பு மிகவும் சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும் . ரிஷபத்தில் அமரும் செவ்வாய் மேற்கண்ட அளவிற்க்கு நன்மையை தர வாய்ப்பில்லை காரணம் ரிஷபம் ஸ்திர மண் ராசி எனவே ( எரியும் நெருப்பின் மீது கொட்டப்படும் மண் நெருப்பை அனைத்து விடும் நெருப்பின் தன்மை மட்டுப்படும் ) இங்கே அமரும் செவ்வாய் நன்மையான பலனை வழங்க வலிமை அற்றவர் ஆகிவிடுகிறார் , மேற்கண்ட உதராணம் தங்களுக்கு விளக்கம் தரவே, இதுவே ஜாதக பலனாக நிர்ணயம் செய்ய இயலாது சுய ஜாதக அமைப்பை வைத்தே நன்மை தீமை பலனை நிர்ணயம் செய்யவேண்டும்  அன்பரே !

D.மேஷ லக்ன ஜாதகருக்கு 8ல் செவ்வாய் மறைவு என்பதால் தீமையை செய்கிறார் எனலாமா?
ஆனால் அங்கே அவர் ஆட்சி பலமாக உள்ளாரே.லக்னாதிபதி அஷ்டமாதிபதி என்ற
முறையில் ஆட்சி பலமாகத்தானே உள்ளார்,பிறகு ஏன் தீமை செய்யவேண்டும்?


பதில் : மேஷ லக்கினத்திற்கு 8 ல் மறைவு பெரும் செவ்வாய் லக்கினத்திற்கும் தீமை செய்வார் , மறைவு கேந்திரமான 8 ம் பாவக அதிபதி என்ற முறையில் இங்கு அமரும் செவ்வாய் 8 ம் பாவகத்தை 200 சதவிகிதம் கெடுத்து விடும் தன்மை பெற்றவர் ஆகிறார் . ஆக இங்கு அமரும் செவ்வாய் லக்கினம் எட்டாம் பாவகம் இரண்டு பாவகத்தையும் கடுமையாக பாதித்துவிடும் அபாயம் உண்டு ,இப்படி அமைந்த ஜாதகத்தில் லக்கினத்திலோ , அல்லது எட்டாம் பாவகத்திலோ ராகு அல்லது கேது அமர்ந்தால் லக்கினம் அல்லது எட்டாம் பாவகம் 100 சதவிகித நன்மையை தரும் இது ஒன்று மட்டுமே விதி விளக்கு .

E.மேஷ லக்ன ஜாதகருக்கு லக்னாதிபதி மீனத்தில் விரைய பாவம் சென்றதால்
தீமையான பலன் தருவார் என்று சொல்லலாமா?


பதில் : நிச்சயமாக 12 ல் அமரும் செவ்வாய் லக்கினம் மற்றும் எட்டாம் பாவக அமைப்பிற்கு தீமையான பலனை தரும் அமைப்பை தருவதில் ஆச்சரியம் இல்லை .

F. மேற்படி மேஷ லக்ன ஜாதகருக்கு 2,8,12 ல் அமர்ந்தால் மட்டுமே செவ்வாய்
தோஷம் என்று கூறலாமா?


பதில் : நான் சொல்ல வந்ததை சரியாக புரிந்து கொள்ள முயற்ச்சி செய்யுங்கள் அன்பரே செவ்வாய் கிரகம் ஒவ்வொரு லக்கினத்திற்கும் , மற்றவர்களால் தோஷம் தரும் அமைப்பு என்று சொல்லும் பாவகங்களில் அமரும் பொழுது தரும் நன்மை தீமை பலனை பற்றி மட்டுமே விளக்கம் தந்துள்ளோம் , இதை தாங்கள் செவ்வாய் தோஷம் என்று எடுத்துகொள்வது சரியான அணுகு முறை இல்லை என்பதை தெளிவு படுத்த விரும்புகிறது ஜோதிடதீபம் , செவ்வாய் கிரகம் தரும் நன்மை தீமை பலனை போன்றே , மற்ற கிரகமும் நன்மை தீமை பலனை தரும் , எனவே இதை செவ்வாய் தோஷம் என்று பார்த்தால் மற்ற கிரகங்களை வைத்தும் , குரு தோஷம் , சுக்கிர தோஷம் , சனி தோஷம் என்று பார்க்க வேண்டி வரும் , எனவே செவ்வாயும் மற்ற கிரகத்தை போன்றே நன்மை தீமை பலனை தருவதை பற்றி எழுதி இருக்கிறோம் , மற்றவர்கள் சொல்வது போல் செவ்வாய்க்கு தோஷம் எல்லாம் ஒன்றும் இல்லை அன்பரே !

மேற்படி செவ்வாயின் கெடு பலன்களை தவிர்க்க
1.சுப்பிரமணியர் வழிபாடு
2.செவ்வாய் வழிபாடு
என்ற பொது பரிகாரம் போதுமா? அல்லது லக்ன வாரியாக பாதிக்கப்பட்ட ஸ்தானம்
வாரியாக பரிகாரங்களை மேற்கொள்ளவேண்டுமா?
பதில்களை ஜோதிட தீபத்தில் எதிர்பார்க்கிறேன்.
நன்றிகளுடன்
ஜோதிடபித்தன்.

பதில் : ஒரு கிரகம் தர வேண்டியதை நிச்சயம் தரும் , கடவுள் வழிபாடு கிரகம் தரும் நன்மை தீமை பலனை ஏற்று கொள்ளும் மன பக்குவத்தை தரும் , கடவுள் வழிபாடு என்பது கிரகங்களின் பலனில் ஒரு சிறு மாற்றத்தையும் தந்து விட வாய்ப்பு இல்லை என்பது ஜோதிட தீபத்தின் கருத்து , முதலில் சரியான ஜோதிட பலனை சொல்வதற்கு எத்தனை ஜோதிடர்கள் இருக்கிறார்கள் அன்பரே ! இதுவே ஒரு ஜாதக பலனை நிர்ணயம் செய்வதில் பல குழப்பங்களை விளைவிக்கிறது , நன்மை பலன் நடை பெரும் பொழுது தீமை தருகிறது என்றும் , தீமையான பலன்கள் நடை பெரும் பொழுது நன்மை நடக்கிறது என்றும் ஜோதிட பலன்களை சொல்லி மற்றவர்களின் வாழ்க்கை தானே நமக்கு என்ன ? என்ற எண்ணமும் ஜோதிடத்தை பதம் பார்த்துகொண்டு இருக்கிறது அன்பரே ! மேலும் பரிகாரம் என்பது தான் செய்த வினை பதிவிற்கு உண்டான நன்மை தீமை பலனை அனுபவிப்பதே , இதை பற்றி சில பதிவுகளில் முன்பே எழுதி உள்ளோம் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக