ஞாயிறு, 25 நவம்பர், 2012

யோக அதிபதியான சனி தன் திசையில் தரும் அவயோக பலன்களும் , ஜாதகர் படும் துன்பமும் !




மேற்கண்ட துலாம் இலக்கின ஜாதகருக்கு லக்கினத்திற்கு 1 ) நான்காம் பாவகதிர்க்கும் , 2 ) ஐந்தாம் பாவகதிர்க்கும் அதிபதியான சனி பகவான் தனது திசையில் ஜாதகரை படுத்தி எடுத்து இருக்கிறார் , யோக அதிபதியான சனி தனது திசையில் ஜாதகருக்கு அவயோக பலனை தந்ததிற்கு என்ன காரணம் ? என்பதை பற்றி இந்த பதிவில் காண்போம் .

நடந்த சனி திசை ஜாதகருக்கு பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகமும் , லாபம் அதிர்ஷ்டம் எனும் பதினொன்றாம் பாவகமும் , லக்கினத்திற்கு பாதக ஸ்தானமான 11 ம் வீட்டுடன் தொடர்பு பெற்று பலனை தந்ததே இதற்க்கு காரணம் , மேலும் சனி திசை நடந்த காலகட்டத்தில் ஜாதகர் தனது பூர்வீகத்தில் குடியிருந்தது 200 சதவிகித தீமையான பலனை வாரி வழங்கியது ,  குறிப்பாக பெற்றோர் திடீர் இழப்பு ,சொத்து இழப்பு , பொருளாதார இழப்பு , காரிய தடைகள் என ஜாதகரை பல கோணங்களில் பாதித்திருப்பது கவலைக்குரிய விஷயமே , மேலும் தான் கற்ற கல்விக்கு உண்டான சரியான வேலை வாய்பை பெற முடியாமல் போனது ஜாதகரின் வாழ்க்கையில், பெரிய திருப்பு முனையாக அமைந்து விட்டது , ஜாதகர் எடுக்கும் முயற்ச்சிகள் அனைத்தும் தோல்வி மேல் தோல்வி தர ஆரம்பித்து ஜாதகரின் மன நிலையை விரக்த்தியின் உச்ச நிலைக்கே கொண்டு சென்றது தான் , யோக அதிபதியான சனி திசை தந்த யோக பலன் .

ஒரு ஜாதகருக்கு நடப்பு திசை பாதக ஸ்தான பலனை தரும் பொழுது ஜாதகர் எந்த வழியிலும் முன்னேற்றம் பெற முடியாது , இழப்புகளை தவிர்க்க இயலாது , எந்த வழிபாடுகளும் , பரிகாரங்களும் ஜாதகருக்கு பலனை தர வாய்ப்பு சிறிதும் இல்லை , மேலும் இந்த ஜாதகருக்கு பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம்  பாதக ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்றது மிகுந்த துன்பத்தை தரும் அமைப்பு , ஜாதகருக்கு உதவி செய்ய யாரும் முன் வர மாட்டார்கள் , நண்பர்கள் உறவினர்கள் அனைவரும் பகைவர்களாக மாற்றிவிடும் தன்மை உண்டாகும் , திசை தரும் பாதக ஸ்தான பலனை ஜாதகர் நிச்சயம் அனுபவித்தே தீர வேண்டும் , ஒரு வேலை ஜாதகர் தனது பூர்வீகத்தை விட்டு எல்லை தாண்டி தனியாக ஜீவனம் செய்தால் மட்டுமே சிறிது முன்னேற்றம் உண்டாகும் , அதுவும் சுய ஜாதகத்தில் சில பாவகங்கள் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே  , மேலும் ஜாதகர் தனது குல தேவதை வழிபாடும் , பித்ரு கர்மங்களையும்  முறையாக செய்து வந்தால் மட்டுமே , ஜாதகர் நல்ல நிலையில்  வாழ்வதற்கு வழிகாட்டும் , இல்லை எனில் ஜாதகரின் நிலை மிகவும்  பரிதாபமான நிலைக்கு ஆளாகும் சூழ்நிலையை ஏற்ப்படுத்தும் .

மேற்கண்ட சனி திசை பாதக ஸ்தான பலனை தந்ததால் ஜாதகர் அனுபவித்த இன்னல்கள் பின் வருமாறு , 1 கல்வியில் தடை , 2 தொழில் தடை , 3 பூர்வீக சொத்து  இழப்பு , 4 விபத்து , 5 ஜாதகர் தனது பெற்றோரை திடீர் என இழந்தது , 6 ஜாதகர் அனைத்ததையும் இழந்து தனது  பூர்வீகத்தை விட்டு வெளியேறியது , 7 மன குழப்பம்  விரக்தி ஆகியவற்றால் ஜாதகரின் முன்னேற்றம் தடை பெற்றது , 8 உதவி செய்ய யாரும் இல்லாமல் போனது , 9 திருமணம் செய்ய பல முயற்ச்சிகள்  செய்தும் பலன் தரமால் போனது , 10 நிலையான வருமானம் இல்லாமல் அதிக சிரமங்களை அனுபவித்தது என ஜாதகரை நடந்த யோக அதிபதி  திசை படுத்தி எடுத்து விட்டது .

எனவே ஒரு ஜாதகருக்கு நடப்பது எந்த கிரகத்தின் திசை என்றாலும் சரி , நல்ல  நிலையில் இருக்கும் பாவகங்களின் தொடர்பை பெற்று பலனை தர வேண்டும் அப்பொழுது தான்  ஜாதகர் வாழ்க்கையில் சகல நலன்களையும் பெற முடியும் இல்லையேல் அவர் லக்கினத்திற்கு அதிபதி என்றாலும் சரி , கேந்திர கோண அதிபதி  என்றாலும் சரி ஜாதகருக்கு சிறிதும் நன்மை செய்ய வாய்ப்பு இல்லை என்பதே  உண்மை குறிப்பாக நடப்பு திசை பாதக ஸ்தான பலனை செய்வது முற்றிலும்  அவயோக பலன்களையே வாரி வழங்கும் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன்   
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக