வியாழன், 8 நவம்பர், 2012

ராகு,கேது திரிகோண ஸ்தானங்களில் அமரும் போது அந்த பாவகத்தின் பலனைக் கெடுத்துவிடுமா ?



  
கேள்வி :   

அண்ணா,  பாவக்கிரகங்களின் வரிசையில் வரும் ராகு,கேது திரிகோண ஸ்தானங்களில் அமரும் போது அந்த பாவகத்தின் பலனைக் கெடுத்துவிடும் என்பது எப்படி?. பொதுவாக 5ல் அமர்ந்தால் பூர்வீகம் கிடையாது,பரதேச ஜீவனம்,புத்திரதோஷம் என்பது எந்த அடிப்படையில்?

பதில் : 

திரிகோண ஸ்தானம் என்று சொல்லும் லக்கினம் , ஐந்தாம் பாவகம், ஒன்பதாம் பாவகம் ஆகிய பாவகங்களில் , லக்கினத்தில் ராகு அல்லது கேது அமரும் பொழுது 100 சதவிகித நன்மையே வாரி வழங்குவார்கள் ( அது எந்த லக்கினம் என்றாலும் சரி ) மேலும் ஐந்து மற்றும் ஒன்பதாம் பாவகங்களுக்கு அதிபதியாக  குரு, சுக்கிரன், சூரியனுடன் சேராத புதன் , வளர் பிறை சந்திரனாக  இருப்பின் , அந்த பாவகத்தில் அமரரும் ராகு கேது 100 சதவிகித நன்மையை வாரி வழங்கும் இதில் எவ்வித சந்தேகமும் இல்லை தம்பி , ஆக திரிகோண ஸ்தானங்களில் அமரும் ராகுகேது நன்மையையும் செய்வார்கள் என்பதை இதில் இருந்து தாங்கள் தெளிவாக தெரிந்து கொள்ளலாம் .

கிரகங்களில் பாவ கிரகம் என்றும் , சுப கிரகம் என்றும் , நிர்ணயம் செய்யும் பொழுது சுய ஜாதகத்தை அடிப்படையாக வைத்து நிர்ணயம்  செய்வதே சால சிறந்தது , பொதுவாக பாவ கிரகம் , சுப கிரகம் என்று நிர்ணயம் செய்வது சரியான பலனை சொல்ல நிச்சயம் உதவி செய்யாது , பல ஜோதிடர்கள் சொல்வது போல் சூரியன் , தேய் பிறை சந்திரன் , சூரியனுடன் சேர்ந்த  புதன் , செவ்வாய் , சனி , ராகு கேது , ஆகிய கிரகங்கள் பாவ கிரகமென்றும் , வளர் பிறை சந்திரன் , சூரியனுடன் சேராத புதன் , குரு , சுக்கிரன் ஆகியவை சுப கிரகமென்றும் நிர்ணயம் செய்வது சுய ஜாதகத்தை வைத்து பலன் சொல்ல நிச்சயம் உதவாது, மேலும் பாரம்பரிய ஜோதிட முறையில் சரியான பலன் சொல்வதற்கு பல விஷயங்களை போட்டு குழப்பிக்கொண்டு இருக்க வேண்டும் ,இருப்பினும் ஜாதக பலனும் சரியாக வர வாய்ப்பில்லை , கிரகம் பாவகத்திர்க்கு தரும் நன்மை தீமை , பாவகம் ஜாதகருக்கு தரும் நன்மை தீமை , நடக்கும் திசை புத்திகள் தரும் பாவக பலன்கள் ஆகியவைகளை சரியாக சொல்ல இயலாது , மேலும் பாரம்பரிய முறையில் ஜோதிட பலன்களை நிர்ணயம் செய்யும் பொழுது , கோட்சார கிரக நிலை ( கோட்சார கிரகங்கள் நடக்கும் திசை பலன் தரும் பாவகதுடன் சம்பந்தம் பெற வில்லை என்றாலும் கூட ) தரும் பலன்கள் , நடப்பு திசை சுப கிரகத்தின் திசையா? பாவ கிரகத்தின் திசையா ? ( சம்பந்த பட்ட கிரகத்தின் திசை எந்த பாவகத்தின் பலனை தருகிறது என்று தெரியாவிட்டாலும் கூட ) ராசி நிலையை அடிப்படையாக கொண்டு பலன் சொல்லும் பொழுது , சொல்லும் பலன்கள் யாவும் பொது பலன்கள் என்ற அடிப்படையிலேயே நின்றுவிடும் என்பதே உண்மை .

கேள்வி :

நீங்களோ ராகு,கேது அமரும் வீட்டு அதிபதியைக்கூட கணக்கில் எடுக்க வேண்டாம்,இவர்கள் நன்மை செய்கின்றனரா? தீமை செய்கின்றனரா? எனப்பார்த்தால் போதும் என்கிறீர். அப்படியெனில் 12 பாவகங்களிலும்  ராகு,கேது தரும் நன்மை,தீமை பலனை எந்த அடிப்படையில் கணக்கில் கொள்வது. மற்ற கிரகங்கள் பார்வை,சேர்க்கையால் பாதிக்கப்படுவது போல் இவர்கள் பாதிக்கப்பட மாட்டனரா?.

பதில் :

ராகு கேது பற்றி பல விஷயங்களை நமது வலை பதிவில் எழுதியாகிவிட்டது தம்பி இருப்பினும் , தங்களுக்காக ஒருமுறை சொல்கிறோம் , ராகு கேது எந்த பாவகதில் அமருகிரார்களோ அந்த பாவகத்தின் பலனை முழுவதுமாக ஏற்றுகொள்வார்கள் எனும்பொழுது , அந்த பாவக அதிபதி எங்கு இருந்தால் என்ன ? எடுத்துகாட்டாக ஒரு நாட்டின் மன்னனை தன் வசபடுத்தி கொண்டு , அந்த நாட்டின் ஆட்சியை ராணுவம் நடத்துவதிற்கு ஒப்பான, சர்வதிகார  தன்மையை ராகு கேது  கிரகங்கள் பெற்றிருக்கிறது என்பதே உண்மை , இங்கே பாவக அதிபதிக்கு எவ்வித உரிமையும் இல்லை , பாவகதிர்க்கு அதிபதி என்ற பதவி மட்டுமே நன்மை தீமை பலன்களை நடைமுறையில் ராகு கேது கிரகங்களே தரும் .     

கேள்வி :

சுபக்கிரகங்கள் எனச்சொல்லப்படும் குரு,சுக்கிரன்,தனித்த புதன், வளர்பிறை சந்திரன் இந்தக் கிரகங்கள் மறைவு ஸ்தான நிலை பெற்றால் ஜாதகரின் வாழ்வு பெரும்பாடாகிவிடும் என்பதும்,பாவிக‌ள் ம‌றைவு ஸ்தான‌ம் ஏறினால் ஏற்ற‌மான வாழ்வு என்பதெல்லாம் எந்தளவு உண்மை?.

 பதில் :

 சுபக்கிரகங்கள் எனச்சொல்லப்படும் குரு,சுக்கிரன்,தனித்த புதன், வளர்பிறை சந்திரன் இந்தக் கிரகங்கள் மறைவு ஸ்தான நிலை பெறுவது லக்கினம் எனும் முதல் பாவகத்திர்க்கா ? தனது பாவகதிர்க்கா ? அல்லது சந்திரன் அமர்ந்த ராசிக்கா ? எதற்கு சுபகிரகங்கள் மறைவு  நிலை பெற்றால் தீமையை தரும் ? எடுத்து காட்டாக ஒரு கடக இலக்கின ஜாதகருக்கு நான்காம் அதிபதியாக வரும் , சுக்கிரன் தனது பாவகதிர்க்கு மறை பலம் அதாவது துலாம் ராசிக்கு 6,8,12 ல் மறைந்தால் மிகவும் சிறப்பான பலன்களை நான்காம் பாவக அமைப்பிற்கு செய்வார் எனவே இங்கே சுக்கிரன் சுப கிரகம் ஆனால் மறைவு தனது வீட்டிற்கும் லக்கினத்திற்கு மறைவு நிலை பெரும் பொழுது நன்மையை தரவில்லையா ?  ஒரு மேஷ  இலக்கின ஜாதகருக்கு லக்கினம் மற்றும் 6 ம் வீட்டிற்கு அதிபதியான புதன் ( சூரியனுடன் சேர்ந்த புதன் )  12 ல் மறையும் பொழுது எப்படி நன்மையை செய்ய முடியும் ? எனவே தாங்கள் கேட்ட கேள்விக்கு இதற்க்கு மேல் விளக்கம் சொல்ல என்னால் இயலவில்லை .

கேள்வி :

ஜாத‌க‌ங்க‌ளில் குறிப்பிட‌ப்ப‌டும் யோக‌ங்க‌ள் என்ப‌து ப‌ற்றிய‌ ஜோதிட‌தீப‌த்தின் க‌ருத்து என்ன‌?.(உதார‌ண‌ம் க‌ஜ‌கேச‌ரி,ப‌ஞ்ச‌ம‌கா புருஷ‌யோக‌ம்,இன்னும் பிற‌ யோக‌ங்க‌ள்)

பதில் : 

யோகங்கள் என்பது கிரகங்கள் கேந்திர,திரிகோண பாவகங்களில் சேர்க்கை பெறும் அமைப்பை வைத்து நிர்ணயம் செய்கின்றனர் , உண்மையில் சுய ஜாதகத்தில் ஒரு பாவகதிர்க்கு உட்பட்ட பாகைக்குள் அந்த கிரகங்கள் செர்ந்திருக்கின்றனவா ? என்று தெரிந்து கொள்ளாமல் நம்மால் நிச்சயம் யோக அமைப்பை பற்றி சொல்ல இயலாது , அப்படியே ஒரு யோக நிலை ஜாதகத்தில் இருந்தாலும் , அந்த பாவகத்தின் பலன்கள் நடக்கும் திசையில் பலன் தர வேண்டும் , அப்பொழுதுதான் ஜாதகருக்கு சம்பந்தபட்ட கிரக சேர்க்கையின் மூலம் நன்மை நடை பெறும் , மாறாக நடப்பு திசை புத்தியில் சம்பந்த பட்ட பாவகத்தின் பலன்கள் நடை முறைக்கு வரவில்லை என்றால் , ஜாதகத்தில் எந்த யோகம் மற்றும் கிரக சேர்க்கை இருந்தும் பயன் சிறிதும் இல்லை என்பதே உண்மை . ஆக யோக நிலையை பற்றி ஆய்வு செய்யும் பொழுது சுய ஜாதகத்தை அடிப்படையாக கொண்டு பலன் நிர்ணயம் செய்வதே சரியான பலன்கள் சொல்ல உதவும் .

கேள்வி :

ஒரு பாவ‌க‌ம் பாதிக்க‌ப்ப‌டுகிற‌து என்ப‌து எப்ப‌டி? விள‌க்க‌ம் தேவை.

பதில் :

ஒரு பாவகம் பாதிப்படைகிறது என்பதை லக்கினம் மற்றும் பாவகங்கள் ஆரம்பிக்கும் பாகையை அடிப்படையாக வைத்தே நிர்ணயம் செய்ய முடியும் , மேலும் சுய ஜாதக அமைப்பில் இருந்து மட்டுமே பாவகங்களின் நிலையை தெளிவாக தெரிந்து கொள்ள இயலும் , நடப்பு திசை தரும் நன்மை தீமை பலன்களையும் , சுய ஜாதக அமைப்பை வைத்தே நிர்ணயம் செய்ய இயலும் , பொதுவாக ஒரு பாவகம் நல்ல நிலையில் இருக்கிறது , பாதிக்க பட்டு இருக்கிறது என்று நிர்ணயம் செய்வது சற்றே கடினம் , இருப்பினும் ராகு கேது , பாவக அதிபதிகள் அமரும் இடம் ஆகியவை வைத்து சொல்லலாம் ஆனால் அவை பொது பலனாகவே இருக்கும் என்பதே உண்மை .


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
jothidadeepam@gmail.com  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக