ஞாயிறு, 25 நவம்பர், 2012

ஜோதிட ஆலோசனை : சுக்கிரன் திசை வழங்கும் சுபயோக பலன்கள் !



மேற்க்கண்ட ஜாதகிக்கு நடந்து கொண்டு இருக்கும் சுக்கிரன் திசை , லக்கினம் , சகோதர ஸ்தானம் , பூர்வ புண்ணியம் , லாப ஸ்தானம் எனும் பாவகங்கள் அனைத்தும் ஜீவன ஸ்தானமான 10 ம் பாவகதுடன் சம்பந்தம் பெற்று தனது பலனை நடத்தி கொண்டு இருப்பது ஜாதகிக்கு மிகுந்த நன்மையை வாரி வழங்கி கொண்டு இருக்கிறது .

 மேலும் ஜாதகியின் ஜீவன ஸ்தானம் என்பது கடக ராசியாக வருவது 100 சதவிகித நன்மையை தரும் அமைப்பாக கருதலாம்  , கடந்த 1996 ல் ஆரம்பித்த சுக்கிர திசை ஜாதகிக்கு கல்வியில் சிறந்து விளங்கும் தன்மையையும் , சுயமாக யாருடைய உதவியும் இன்றி முன்னேற்றம் பெரும் யோகத்தையும் , பொருளாதார வாழ்க்கையில் தன்னிறைவான அமைப்பையும் , பட்ட படிப்பு முடிந்த உடன் ஒரு சிறந்த நிறுவனத்தில் நல்ல வருமானத்துடன் பணியாற்றும் யோகத்தையும் , எதிர்காலத்தில் தனது விருப்பபடி சிறந்த வாழ்க்கை துணையை திருமணம் செய்துகொள்ளும் வாய்ப்பினையும் ஜாதகிக்கு நடந்து கொண்டு இருக்கும் சுக்கிரன் திசை தடையில்லாமல் வழங்கிக்கொண்டு இருக்கிறது .

இதற்க்கு காரணம் சுக்கிரன் திசை 1,3,5,11 ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10 ம் வீட்டுடன் தொடர்பு பெறுவதே மேலும் அந்த ஜீவன ஸ்தானம் சர நீர் தத்துவ ராசியாக இருப்பது ஜாதகிக்கு அதிர்ஷ்டங்களை வாரி வழங்கி கொண்டு இருக்கிறது , லக்கினம் ஜீவன ஸ்தானதுடன் சம்பந்தம் பெறுவது , ஜாதகியின் உடல்நிலை மன நிலை ஆகியவற்றையும் , ஜாதகியின் நல்ல குணத்தையும் , திறமை மிக்க அறிவாற்றலையும் தருகிறது வாழ்க்கையில் நல்ல அந்தஸ்தையும் கௌரவமான தொழில் முன்னேற்றத்தையும் தருகிறது , ஜாதகி நினைப்பதை அடையும் யோகத்தை தருகிறது .

 மூன்றாம் பாவகம் ஜீவன ஸ்தானதுடன் சம்பந்தம் பெறுவது , ஜாதகி எடுக்கும் முயற்ச்சிகள் , எண்ணங்கள் யாவும் வெற்றி பெற வழி வகுக்கிறது , நினைத்ததை சாதிக்கும் யோகத்தை தருகிறது , மேலும் பொருளாதாரத்தில் தன்னிறைவையும் , பெரியவர்களை மதிக்கும் பண்பினையும் , சிறந்த புத்தி கூர்மையையும் , உறவு நண்பர்கள் ஆதரவையும் வழங்குகிறது ,.

பூர்வ புண்ணியம் ஜீவன ஸ்தானதுடன் சம்பந்தம் பெறுவது கலைகளில் சிறந்து விளங்கும் ஆற்றலை  தருகிறது , சிறப்பாக பாடும் வல்லமையும் , இனிய  குரல் வளத்தையும் தந்து இருக்கிறது , வாழ்க்கையில் படிப்படியான முன்னேற்றத்தை  இந்த பாவகம் தொடர்ந்து வழங்கி கொண்டே இருக்கிறது , தான்  பெற போகும் குழந்தைகளாலும் ஜாதகி யோக அமைப்பினையே பெறுவார் , ஜாதகிக்கு குல தேவதை மற்றும் இறைநிலையின் அருள் எப்பொழுதும் நிறைந்து  நிற்கிறது .

லாப ஸ்தானம் ஜீவன ஸ்தானதுடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு தொழில் ரீதியாக  படித்து முடித்த உடன் சிறப்பான நல்ல வேலை வாய்ப்பினை பெற்று தந்தது , மேலும் எதிர்காலத்தில் அரசு துறையில் பணியாற்றும் யோகத்தையும் தரும் , தனது பெற்றோருக்கு மிகுந்த யோகத்தை இதுவரை ஜாதகி தந்து கொண்டு இருப்பது  ஒரு சிறப்பான விஷயம் , குறிப்பாக தந்து தாயிக்கு மிகுந்த  யோகத்தை  தரும் அமைப்பு இது .

இந்த பெண்ணிற்கு மூல நட்சத்திரம் என்றாலும் ஜாதக அமைப்பு மிகுந்த  யோக நிலையில் இருப்பதால் இந்த பெண்ணை மணந்து கொள்ளும் நபருக்கு  யோகமான வாழ்க்கையே காத்துகொண்டு இருக்கிறது என்பதே உண்மை .

பொதுவாக பெண்ணின் ஜாதகம் இதை போன்று இருப்பது ஜாதகி மற்றும் ஜாதகியை சார்ந்தவர்களுக்கு  மிகுந்த யோக பலன்களை வாரி வழங்கும் , மேலும் நட்சத்திரத்தால்  எவ்வித துன்பமும் வருவதிற்கு வாய்ப்பில்லை , மேலும் பிறந்த  நட்சத்திரம் ஒன்றை மட்டும் வைத்து பலன் காணுவது ஜாதக பலன்களை  சரியாக சொல்ல உதவாது .

மேற்கண்ட ஜாதகத்தில் யோக பலன்களை வாரி வழங்குவதில் முக்கிய பங்காற்றும் கிரகங்கள்  ராகு கேது என்றால் அது மிகையாகாது , காரணம் நான்காம்  பாவகத்தில் அமர்ந்த ராகுவும் , ஜீவன ஸ்தானத்தில் அமர்ந்த கேதுவும்  ஜாதகத்தில் தான் அமர்ந்த பாவக பலனை 100 சதவிகிதம் விருத்தி செய்வதே  இதற்க்கு காரணம், ஆக இந்த ஜாதக அமைப்பில் ராகு கேது இரண்டு கிரகமும்  மிகுந்த யோக பலன்களையே வழங்கிக்கொண்டு இருக்கிறது , இதன் காரணமாகவே   ஜாதகிக்கு நல்லவர்களின் அறிமுகமும் நடப்பும் வாழ்க்கையில்  கிடைக்கிறது , வாழ்க்கையில் பல முன்னேற்றங்களும் உண்டாகிறது  .

ஒருவருக்கு வாழ்க்கையில்  நல்ல நண்பர்கள் , நல்ல உறவினர்கள் , நல்ல மனிதர்களை இணைத்து வைப்பதில் ராகு கேது கிரகங்களுக்கு முக்கிய பங்கு உண்டு  , இந்த ஜாதகத்தில் அந்த அமைப்பு சுக ஸ்தானமான நான்காம் பாவகத்துடனும் , ஜீவன ஸ்தானமான பத்தாம் பாவக்துடனும் தொடர்பு அந்த பாவக வழியில் இருந்து  நல்லவர்கள் சேர்க்கையும் , முன்னேற்றத்தையும் தரும்  என்பதில் ஆச்சரியம் இல்லை .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

3 கருத்துகள்:

  1. குருவிற்கு வணக்கம்.
    பாதக ஸ்தானத்தின் பலனை தசா புக்தி நடத்தினால் ஜாதகர் செய்ய வேண்டியது என்ன? அதாவது எவ்வாறு விழிப்புணர்வுடன் நடந்து கொள்வது?

    சேர்மராஜ், சென்னை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல ஆன்மீக குருவிடம் தீட்சை பெறுவது சால சிறந்தது , தனது பெற்றோரிடம் மாதம் ஒரு முறை சென்று குறிப்பாக பௌர்ணமி நாள் அன்று அட்சதை மூலம் ஆசி பெறுவது சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும் , தனது குல தெய்வ வழிபாட்டினை ஆடி , தை , புரட்டாசி அமாவசை தினத்தன்று முன் பின் தெரியாத 20 நபர்களுக்கு தங்களது கையால் அண்ணதானம் செய்து வழிபடுவது மிகசிறந்த நன்மைகளை வழங்கும் , நடப்பு திசை பாதக ஸ்தான பலனை தருகிறது என்று வைத்துகொண்டால் எந்த பாவகதுடன் சம்பந்தம் பெற்று பலனை தருகிறது என்று சிறந்த ஜோதிடர் மூலம் ஆலோசனை பெற்று , அந்த பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை மனம் உவந்து ஏற்றுக்கொண்டு அந்த பாவக சம்பந்த பட்ட நபர்களுக்கு நன்மை செய்தீர்கள் என்றால் , நிச்சயம் பாதக ஸ்தான பலன்கள் குறையும் , எடுத்து காட்டாக சகோதர ஸ்தானதுடன் பாதக ஸ்தானம் சம்பந்தம் பெற்று பலனை தரும்பொழுது , ஜாதகர் தனது சகோதர அமைப்பில் இருந்து வரும் இன்னல்களை ஏற்றுகொள்வது ஜாதகருக்கு நன்மை தரும் . இவை அனைத்திலும் சிறந்தது அதிகாலை 5 மணிக்கு நீராடி சூரியன் வருவதற்கு முன் சூரிய நமஸ்காரம் செய்து வருவது அளவில்லா நன்மைகளை வாரி வழங்கும் .

      வாழ்க வளமுடன்
      ஜோதிடன் வர்ஷன்
      9443355696

      நீக்கு
  2. குருவிற்கு
    கோட்சார ரீதியாக ராகு கேது பெயர்ச்சி பலன்களை எவ்வாறு அறிவது? ஜெனன லக்கினத்தை அடிப்படையாக கொண்டு தான் கணிக்க வேண்டுமா?

    பதிலளிநீக்கு