பொதுவாக சுய ஜாதக அமைப்பில் லக்கினத்திற்கு 2 ,4 ,7 ,8 ,12 பாவகங்களில்
செவ்வாய் இருப்பின், அது செவ்வாய் தோஷம் என்று நிர்ணயம் செய்து ,
குறிப்பிட்ட ஜாதக அமைப்பை சார்ந்தவர்கள் இதே போன்றே செவ்வாய்
லக்கினத்திற்கு 2 ,4 ,7 ,8 ,12 பாவகங்களில் இருக்கும் ஜாதகத்தை
சார்ந்தவரையே திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்றும் பல ஜோதிடர்கள்
தீர்மானம் செய்கின்றனர் , இது எந்த அளவிற்கு உண்மை என்பதை பற்றி இந்த
பதிவில் சிந்திப்போம் . மேலும் ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் பகவான் தரும்
நன்மை தீமையை பற்றி விரிவாக 12 லக்கினத்தை அடிப்படையாக வைத்து
பார்ப்போம் .
சிம்ம லக்கினம் :
2 ம் பாவகம் கன்னியில் செவ்வாய்
அமர்வது , ஜாதகருக்கு லக்கினம் மற்றும் 4 ம் பாவகத்திர்க்கும் , 9 ம்
பாவகத்திர்க்கும் 100 சதவிகித நன்மையையே தரும் , ஜாதகர் தனது தாயார்
அமைப்பில் இருந்து அதிக யோக பலனை அனுபவிக்கு யோகம் உண்டாகும் , குறிப்பாக
நல்ல வண்டி வாகனம் , சொகுசான வீடு , சுயமாக சம்பாதித்து சொத்து, நகை
மற்றும் பொருட்கள் வாங்கும் யோகம் , எங்கு சென்றாலும் நல்ல மதிப்பு
மரியாதை ஆகியன கிடைக்க பெறுவார் நான்காம் பாவக அமைப்பிற்கு , ஒன்பதாம் பாவக
அமைப்பிற்கு செவ்வாய் பகவானால் ஜாதகர் சிறந்த ஒழுக்க சீலராகவும் , நல்ல
எண்ணம் கொண்ட மனிதராகவும் , இறையருளின் கருணையை பெரும் யோகமும் , பல ஆன்மீக
திரு தளங்களுக்கு சென்றுவரும் வாய்ப்பினையும் இந்த இடத்தில் அமரும்
செவ்வாய் பகவானால் ஜாதகர் பெறுவார் .
4 ம் பாவகம் விருச்சக ராசியில் அமரும் செவ்வாய் பகவான் லக்கினம்
மற்றும் 4 ம் பாவகத்திர்க்கும் , 9 ம் பாவகத்திர்க்கும் 100 சதவிகித
தீமையான பலனையே தருவார் என்பதில் சந்தேகமே இல்லை இந்த அமைப்பில் செவ்வாய்
நான்காம் வீட்டினை 100 சதவிகிதம் கெடுத்து விடுவார் , ஒன்பதாம் வீட்டிற்கு
மறைவு பலம் பெறுவதால் ஜாதகருக்கு நல்ல குணங்கள் அனைத்தும் பாதிக்க படும் ,
மற்றவரிடம் சகஜமாக பழகும் சூழ்நிலை பாதிக்க படும் , ஜாதகர் எவ்வளவு நன்மை
மற்றவருக்கு செய்தாலும் இறுதியில் அவ பெயரே உண்டாகும் , குறிப்பாக பெண்கள்
விஷயத்தில் அதிக கவனத்துடன் இருப்பது நன்மை தரும் .
7 ம் பாவகம் கும்பத்தில் அமரும் செவ்வாய் ஜாதகருக்கு லக்கினம்
மற்றும் 4 ம் பாவகத்திர்க்கும் , 9 ம் பாவகத்திர்க்கும் 100 சதவிகித
நன்மையையே தரும் , ஜாதகரின் அறிவாற்றல் மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும் ,
புதிய திட்டங்கள் , புதிய கண்டுபிடிப்புகள் , கட்டுமான துறையில் புதிய
தொழில் நுட்பங்களை புகுத்தும் தன்மை , காவல் துறையில் சிறப்பாக பணியாற்றும்
ஆற்றல் , எங்கும் வெற்றி எதிலும் வெற்றி என ஜாதகரை மிக சிறப்பான
இடத்திற்கு அழைத்து செல்லும் ஆற்றல் இங்கு அமரும் செவ்வாய் பகவானுக்கு
உண்டு மேலும் அரசு மரியாதை , அரசு கெளரவம் , அரசியலில் செல்வாக்கு , பெரிய
மனிதர்களில் ஆதரவு என மிகவும் யோகமான பலன்களை தரும் அமைப்பாக இது
காணப்படுகிறது , செவ்வாய் இங்கு அமர்வது சிம்மலக்கின ஜாதக அமைப்பை
பெற்றவருக்கு யோகமே .
8 ம் பாவகம் மீனத்தில் அமரும்
செவ்வாய் லக்கினம் மற்றும் நான்காம் பாவக அமைப்பிற்கு 100 சதவிகித
தீமையும் , ஒன்பதாம் பாவகத்திர்க்கு மட்டும் அதிக நன்மையையும் நிச்சயம்
தருவார் , குறிப்பாக ஜாதகருக்கு அதிக மன உளைச்சலையும் , மன நிம்மதி
இழப்பையும் தவறாமல் தந்துவிடுகிறார் , இதனால் ஜாதகர் கடும் கோபத்திற்கு
ஆளாகும் சூழ்நிலையும் , மற்றவரை புரிந்துகொள்ளும் ஆற்றல் குறைவாகவும் ,
தேவையற்ற விஷயங்களுக்காக மனதை வருத்திகொள்ளும் சொல்நிலைக்கு தள்ளப்படும்
நிலை வரலாம் , இருப்பினும் பொது மக்களிடம் நல்ல பெயரும் , ஊருக்கு
உழைக்கும் உத்தமர்கலாகவும் , பொதுவாழ்க்கையில் வெற்றி பெரும் அமைப்பை
கொண்டவராகவும் ஜாதகர் காணப்படுவார் , செவ்வாய் மீனத்தில் அமர்வது
சிம்மலக்கினத்திர்க்கு 9 ம் பாவகத்திர்க்கு மட்டும் 100 சதவிகித நன்மையை
செய்யும் .
12 ம் பாவகம் கடகத்தில் அமரும் செவ்வாய் லக்கினம்
மற்றும் 4 ம் பாவகத்திர்க்கும் , 9 ம் பாவகத்திர்க்கும் 100 சதவிகித
தீமையான பலனையே தருவார் காரணம் இங்கு அமரும் செவ்வாய் ஜாதகரை அதிக மன
உளைச்சலுக்கும் , சொத்து சுக இழப்பிற்கும் காரணமாக அமைந்து விடுவார் ,
மேலும் இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சி இன்மையும் , பொதுமக்களிடம் அவ பெயரை
சம்பாதிக்கும் நிலைக்கும் தள்ளிவிட கூடும் , குறிப்பாக ஜாதகர் மனம்போன
போக்கில் ஜாதகர் சென்றால் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிட வாய்ப்பு
உண்டு , எந்த விஷயத்தை செய்யுமுன்னர் ஜாதகர் பலமுறை யோசனை செய்து ,
செய்தால் மட்டுமே நன்மை பெற முடியும் இல்லை எனில் அதிக துன்பம்தான் ,
குறிப்பாக திருமண வாழ்க்கையில் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும்
விஷயத்தில் அதிக கவனம் தேவை , இல்லை என்றால் வாழ்நாள் முழுவதும் சிரம பட
வேண்டியதுதான் .
கன்னி லக்கினம் :
2 ம் பாவகம் துலாம் ராசியில் அமரும் செவ்வாய் , லக்கினம்
மற்றும் 3 ம் பாவகத்திர்க்கும் , 8 ம் பாவகத்திர்க்கும் 100 சதவிகித
தீமையான பலனையே தருவார், குறிப்பாக ஜாதகரின் வாழ்க்கையில் அதிக அவ பெயரை
சந்திக்க வேண்டிவரும் , ஜாதகரின் சிந்தனை ஆற்றல் , அறிவாற்றல் இரண்டையும்
குறைக்கும் தன்மை இங்கு அமரும் செவ்வாய் பகவானால் ஏற்ப்படும் , இதனால்
ஜாதகர் அதிக அவதிக்கு உள்ளாகும் சூழ்நிலை ஏற்ப்படும் , தேவையில்லாமல்
பிடிவாத குணத்தையும் , மற்றவரிடம் இதனால் கெட்ட பெயரை சம்பாதிக்கும்
சூழ்நிலையையும் ஏற்ப்படுத்தும் , குறிப்பாக அடிப்படை கல்வி காலங்களில் தடை
ஏற்ப்படகூடும் ,அனைவரிடமும் வெறுப்பை காட்டுவதால் ஜாதகரிடம் யாரும்
நெருங்கி பழகும் சூழ்நிலை கிடைக்காது , இதனால் ஜாதகரின் முன்னேற்றம்
வெகுவாக பாதிக்க படும் .
4 ம் பாவகம் தனுசு ராசியில் அமரும் செவ்வாய் , லக்கினம் மற்றும் 3 ம் பாவகத்திர்க்கும் , 8 ம் பாவகத்திர்க்கும் 100 சதவிகித தீமையான
பலனையே தருவார், ஜாதகர் மன நோய் பாதிப்பு ஏற்ப்பட வாய்ப்பு அதிகம் ,
அவசரப்பட்டு செய்யும்காரியங்கள் யாவும் தோல்வி ஏற்ப்படும் , கடுமையான
முயற்ச்சிகள் செய்வதாலும் வெற்றி பெற வாய்ப்பு குறைவு , தனது சகோதர வழியில்
இருந்து அதிக இன்னல்களை சந்திக்க வேண்டிவரும் , இந்த அமைப்பை
பெற்றுள்ளவர்கள் அனைவரும் தன்னை விட வயதில் மூத்தவர்களிடம் ஆலோசனை கேட்டு
நடப்பது வாழ்க்கையில் அதிக நன்மையை தரும் , சுயமாக முடிவெடுத்து அதிக
பதிப்பை சந்திக்காமல் இருக்க இது ஒன்றே வழி , கவனம் குறைந்தால் உயர் கல்வி
காலங்களில் தொடர்ந்து சில தோல்விகளை சந்திக்க வேண்டிவரும் , வீடு ,சொத்து
,நகை , வண்டி வாகனம் அனைத்தையும் தனது பெயரில் வைத்து கொள்ளாமல் இருப்பதே
சாலசிறந்தது .
7 ம் பாவகம் மீன ராசியில் அமரும் செவ்வாய் , லக்கினம் மற்றும் 3 ம் பாவகத்திர்க்கும் , 8 ம் பாவகத்திர்க்கும் 100 சதவிகித தீமையான
பலனையே தருவார், குறிப்பாக திடீர் இழப்புகளை ஜாதகரின் மன அமைப்பால்
சந்திக்க வேண்டிவரும் , உடல் ரீதியான பாதிப்பையும் , மன ரீதியான
பாதிப்பையும் ஜாதகர் அதிகம் சந்திக்க வேண்டி வரும் , ரத்த அழுத்தம் ,
இதயத்தில் கோளாறு , சுயமாக சம்பாதிக்கும் பொருட்களை இழக்கும் சூழ்நிலையும் ,
வெளிநாடு , வெளியூர் செல்வதால் அதிக துன்பங்களையும் சந்திக்க வேண்டி
வரலாம், அதிகம் மன நிலை பாதிப்பாலும் , பிடிவாத குணத்தாலும் தனது உடலை தானே
கெடுத்து கொள்ளும் சூழ்நிலை ஏற்ப்படும், எனவே செவ்வாய் இங்கு அமர்வது கன்னி லக்கின ஜாதக அமைப்பை பெற்றவருக்கு மிகுந்த சிரமத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை .
8 ம் பாவகம் மேஷ ராசியில்அமரும் செவ்வாய் லக்கினம் மற்றும் 3 ம் பாவகத்திர்க்கும் , 8 ம் பாவகத்திர்க்கும் 100 சதவிகித தீமையான
பலனையே தருவார், குறிப்பாக அவசரப்பட்டு சில முடிவுகள் எடுப்பதால் , அதிக
இன்னலுக்கு ஆளாக வேண்டி வரும் , இல்லற வாழ்க்கையில் அதிக துன்பமும் ,
மகிழ்ச்சி இல்ல வாழ்க்கையும் அமைய கூடும் , தன்னம்பிக்கை குறைய வாய்ப்பு
உண்டு , திருமண வாழ்க்கை தாமதமாக அமையும் , குழந்தை பாக்கிய அமைப்பிலும்
சிக்கல்கள் ஏற்ப்படும் , ஜீவன வழியில் அதிக பாதிப்புகளை சந்திக்க வேண்டி
வரும் , அடிக்கடி விபத்து உடல் தொந்தரவு போன்றவைகளால் பாதிக்க வாய்ப்பு
அதிகம் , பண விஷயங்களில் அதிக கவனமுடன் இருப்பது அதிக நன்மை தரும் இல்லை
எனில் தேவையின்றி அதிக சிக்கல்களை சந்திக்க வேண்டிவரும் , மேஷத்தில் அமரும்
செவ்வாய் கன்னி லக்கின ஜாதகரை அளவுக்கு அதிகமாக பாதிக்கும் என்பதே உண்மை .
12 ம் பாவகம் சிம்ம ராசியில் அமரும் செவ்வாய் லக்கினம் மற்றும் 3 ம் பாவகத்திர்க்கு அதிக நன்மைகளையும் ,8 ம் பாவகத்திர்க்கு100 சதவிகித தீமையான
பலனையே தருவார், குறிப்பாக ஜாதகர் உடல்நிலை நல்ல நிலையில் இருக்கும்
அமைப்பு , பூர்வீகத்தில் இருப்பதால் நன்மை , எடுக்கும் முயற்ச்சிகளில்
வெற்றி , சகோதர வழி ஆதரவு , கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் புலமை ,
அறிவாற்றல் மூலம் அனைத்தையும் பெரும் யோகம் , மக்கள் செல்வாக்கின் மூலம்
வாழ்க்கையில் வெற்றி பெரும் அமைப்பு , தன்னம்பிக்கை , வாழ்க்கையில் சுய
முன்னேற்றம் பெரும் யோகம் , பல இடங்களுக்கு சென்று வரும் யோகம் , புண்ணிய
ஸ்தல யாத்திரை செல்லும் யோகம் , வண்டிவாகன யோகம் , வெளிநாடுகளில் இருந்து
வரும் வருமானம் , போன்றவை சிறப்பாக அமைய பெறுவார் , எதிர்பாராத நேரங்களில்
சில விபத்துகளை சந்திக்க வேண்டி வரும் எனவே பாதுகாப்பாக பயணம்
மேற்கொள்ளுவது நலம் தரும் .