வெள்ளி, 30 நவம்பர், 2012

சுய ஜாதகத்தில் ஒரு பாவகம் பாதிக்கபட்டு இருக்கும்பொழுது , அந்த பாவக அமைப்பில் இருந்து ஜாதகர் நன்மை பெறுவது எப்படி ?



பொதுவாக ஒரு சில ஜாதகங்களில் சில பாவகங்கள் சிறிய பாதிப்பை பெற்று இருக்கும் அல்லது பெரிய பாதிப்பை பெற்று இருக்கும் , மேலும் 100 சதவிகிதம் கடுமையாக பதிப்பையும் பெற்றிருக்கும் , அப்பொழுது அந்த ஜாதகர் குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து இழப்புகளையும் ,கடுமையான பாதிப்பையும் சந்திக்க வேண்டி வரும் , குறிப்பாக அந்த பாவக பலன்களை நடை முறையில் நடை பெரும் திசை மற்றும் புத்திகள் நடத்தினால் .

அப்படி பட்ட திசை மற்றும் புத்திகள் தீமையான பலன்களை தந்து கொண்டு இருக்கும் பொழுது ஜாதகர் என்ன செய்தாலும் குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க இயலாது எனும் பொழுது ஜாதகர் அந்த பாவக வழியில் இருந்து நன்மை அடைய என்ன வழி , இதற்க்கு ஜோதிட சாஸ்திரம் என்ன ? சொல்கிறது என்பதை பற்றி நாம் இந்த பதிவில் காண்போம்.




மேற்கண்ட ஜாதக அமைப்பில் 1 ம் வீடு எனும் லக்கினம் மற்றும் 9 ம் வீடு எனும் பாக்கிய ஸ்தானம் ஆகியவை பாதக ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்று 200 சதவிகிதம் பாதிப்படைந்து இருக்கிறது , 4,6,10,12 வீடுகள் முறையே விறைய ஸ்தானமான 12 ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பாதிப்படைந்து இருக்கிறது.

தற்பொழுது நடக்கும் சந்திரன் திசை ஜாதகருக்கு 4,6,10,12 வீடுகள் முறையே விறைய ஸ்தானமான 12 ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் , 3,7 வீடுகள் களத்திர பாவகத்துடன் சம்பந்தம் பெறும் பலனை தந்து கொண்டு இருக்கிறது எனவே ஜாதகர்  3,7 வீடுகள் களத்திர பாவகத்துடன் சம்பந்தம் பெறும் அமைப்பில் இருந்து 100 சதவிகித நன்மைகளையும் , 4,6,10,12 வீடுகள் முறையே விறைய ஸ்தானமான 12 ம் பாவகத்துடன் சம்பந்தம் பெரும் அமைப்பில் இருந்து தீமையான பலன்களையும் அனுபவிக்க வேண்டி வரும்.

 எடுத்து காட்டாக :

ஜாதகருக்கு இருக்கும் நிலம் , இடம் , வண்டி வாகன அமைப்பில் இருந்தும் , கடன் கொடுத்தல் வாங்குதல் என்ற அமைப்பில் இருந்தும் , செய்யும் தொழில் அமைப்பில் இருந்தும் , அதிக முதலீடு செய்யும் அமைப்பில் இருந்து , விறைய பலன்களை எதிர்கொள்ள வேண்டி வரும் , ஆனால் இந்த ஜாதகத்தை சரியாக கணித்து உண்மையான பலன் சொல்லும் , புத்திசாலித்தனமான ஜோதிடன் நினைத்தால் ( இதற்க்கு ஜோதிடனின் ஜாதகத்தில் ராகு கேது அதிக வலிமையுடன் இருக்க வேண்டும் அப்பொழுதுதான் தன்னை நம்பி வருவோர்க்கு சரியான வழியை காட்ட இறை நிலை அருள் புரியும் )ஜாதகருக்கு சில அறிவுரை கூறுவதின் மூலமாகவும் ஜாதகரின் சில நடவடிக்கை எடுக்க வைப்பதின் மூலமாகவும்  மேற்க்கண்ட பாவக அமைப்பில் இருந்து ஜாதகரை நன்மை பெற செய்ய இயலும் .

எப்படி எனில் ஜாதகத்தில் தீமை தரும் பாவகமான 4,6,10,12 வீடுகள் வழியில் இருந்து நன்மை பெற , சுய ஜாதகத்திலும் , தற்பொழுது நடக்கும் திசை தரும் வீடுகள் அமைப்பிலும்  நல்ல நிலையில் இருக்கும் பாவகங்களை கவனிக்க வேண்டும்  , அப்படி கவனிக்கும் பொழுது சுய ஜாதகத்திலும் , தற்பொழுது நடக்கும் திசை அமைப்பிலும் 3,7 வீடுகள் களத்திர பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நன்மையை தருகிறது , 2,5,11 வீடுகள் லாப ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்று  நன்மையை தருகிறது இதில் அதிக வலிமையை 3,7 வீடுகள் களத்திர பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதாலும் களத்திர பாவகம் ஸ்திர ராசியாக இருப்பதாலும் , களத்திர பாவகமே பெறுகிறது .

எனவே ஜாதகர் 4,6,10,12 வீடுகள் வழியில் இருந்து நன்மை பெற தனது வாழ்க்கை  துணை , அல்லது கூட்டாளிகள் பெயரில் , வண்டி வாகனம் வாங்குவது , நிலம் வீடு , சொத்து வாங்குவது , கடன் பெறுவது , தான் நிர்வகிக்கும் தொழில்களை அவர்களை நிவகிக்க சொல்வதாலும் , அவர்கள் பெயரில்  முதலீடுகளை செய்வதாலும் மேற்கண்ட பாவக அமைப்பில் இருந்து 100 சதவிகித நன்மையை பெற முடியும் , இது நடை முறையில் கண்ட உண்மை , குறிப்பாக ஜாதகர் தனது வாழ்க்கை துணையின் பெயரில் மேற்கண்ட  விஷயங்களை செய்யும்பொழுது ஜாதகருக்கு களத்திர வழியில் இருந்து நன்மையையும் , அதன் வழியே மேற்கண்ட பாவக அமைப்பில் இருந்து 100 சதவிகித நன்மையையும் பெற முடியும் என்பது உறுதி .

ஆக ஜோதிட கலை ஜாதகரை எந்த ஒரு மோசமான நிலையில் இருந்தும் மீட்டு  எடுக்கும் , சரியான வழிகாட்டியாக அமையும் என்பது உறுதி , இதுவே ஜோதிட கலையின்  சிறப்பு .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


ஜோதிட ஆலோசனை : தொழில் விருத்தி பொருளாதார முன்னேற்றம் தரும் யோக ஜாதக நிலை !




ஜாதக பொது பலன்கள் 

ஜாதக அமைப்பில் நல்ல நிலையில் இருக்கும் பாவகங்கள் :

1,7 ம் வீடுகள் களத்திர ஸ்தானம் எனும் ஏழாம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது , ஜாதகருக்கு மிகுந்த யோக வாழ்க்கையை அளிக்கும் ஒரு சிறந்த அமைப்பாகும் , இதனால் ஜாதகருக்கு இருக்கும் எதிர்ப்புகள் அகலும் , நண்பர்கள் கூட்டாளிகள் மூலம் லாபம் ஏற்ப்படும் , தனது வாழ்க்கை துணையின் வழியில் இருந்து மிகுந்த யோக வாழ்க்கையை பெறுவார் , ஆண் பெண் நண்பர்களுடன் கலகலப்பாக பழகும் வாய்ப்பு உண்டாகும் , ஜாதகருக்கு மக்கள் ஆதரவு எப்பொழுதும் உண்டு , ஜாதகரின் தொழில் முறை கூட்டாளி மிகவும் சக்தி வாய்ந்தவராகவும் , பொருளாதரத்தில் தன்னிறைவு பெற்றவராகவும் திகழ்வார் , கூட்டு தொழில் செய்வதால் ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளே உண்டாகும் .

2 ம் வீடு குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகதுடன் சம்பந்தம் பெறுவது , வாழ்க்கையில் அளவற்ற செல்வத்தையும் , குடும்ப ஒற்றுமையும் , குடும்பத்தில் எப்பொழுதும் மகிழ்ச்சியும் , பொருளாதரத்தில் படிப்படியான முன்னேற்றத்தையும் தந்துகொண்டே இருக்கும் , ஜாதகருக்கு நல்ல உணவு எங்கு சென்றாலும் கிடைக்கும் , வருமானத்திற்கு எவ்வித பிரச்சனையும் வாழ்நாள்  முழுவதும் இருக்காது , வாழ்க்கை துணை வழியில் இருந்து அழகான குடும்ப வாழ்க்கை அமையும், நிம்மதியான குடும்ப வாழ்க்கை ஜாதகருக்கு நிச்சயம் உண்டு .

3,5,8 ம் வீடுகள் ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது , மூன்றாம் பாவக வழியில் இருந்து நிலையான முன்னேற்றம் , சுலப பொருள் வரவு , சகல சௌபாக்கியம் , இசையில் ஈடுபாடு , மின்துறை மற்றும் பொறியியல் துறைகளில் பணியாற்றும் யோகம் நினைத்ததை சாதிக்கும் பேராற்றல் , பெரியோரிடம் மதிப்பு மரியாதை , புத்தி கூர்மை , சாஸ்திர ஆராய்ச்சி , லாட்டரி யோகம் , வழக்கில்  வெற்றி , கோவில் தரிசனம் , வெளிநாடுகளில் செல்வ சேர்க்கை , புகழ் பணம் கிடைத்தல் , போன்ற நன்மைகளும் , ஐந்தாம் பாவக வழியில் கலைகளில் ஆர்வம் , சினிமா மற்றும் திரைப்பட துறையில் இருந்து மிகுந்த லாபம் , தனது குழந்தைகளால் யோக வாழ்க்கை , வியாபாரத்தில் மிகுந்த வெற்றி மற்றும் முன்னேற்றம் உண்டாகும்  தனது பூர்வீகத்தில் இருப்பதால் நன்மை உண்டாகும் , எட்டாம் பாவக வழியில் இருந்து , நல்ல அந்தஸ்தை வசதி வாய்ப்பினை விரைவில் அடைதல் , வசதியான  உத்தியோகம் , பதவி உயர்வு , தொழில் ரீதியான வெற்றிகள் , வெளிநாடுகளில் யோக வாழ்க்கை அமையும் .

4,9 ம் வீடு பாக்கிய ஸ்தானம் எனும் ஒன்பதாம் பாவகதுடன் சம்பந்தம் பெறுவது , ஜாதகரை உயர்கல்வி பயில்வதால் மிகப்பெரிய வெற்றிகளை தரும் , விஞ்ஞான ஆராய்ச்சி வெளிநாடுகளில் தொழில் செய்யும் யோகம் சமுதயத்தில் நல்ல மதிப்பு மரியாதை , ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் வெற்றிமேல் வெற்றி , பொது வாழ்க்கையில் சாதிக்கும் யோகம் தன்னம்பிக்கை  , சுய கட்டுபாடு என ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளையே வாரி வழங்கும் .

10 ம் வீடு ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் வீட்டுடன் தொடர்பு பெறுவது சுய தொழில் செய்வதால் மிக பெரிய வெற்றியை ஜாதகர் பெறுவார் காரணம் ஜீவன ஸ்தானம் கலபுருஷ தத்துவ அமைப்பிற்கும் , இலக்கின அமைப்பிற்கும் ஜீவன ஸ்தனமாகவே வருவதும் , ஜீவன ஸ்தானம் மகரத்தில் அமர்ந்து சர நில ராசியாக வருவது 200 சதவிகித வெற்றியை வாரி வழங்கும் , ஜாதகர்  செய்யும் தொழில்கள் யாவும் வெற்றி மேல் வெற்றி தரும் , பல தொழில் செய்யும் யோகம் உண்டாகும் , தங்களின் ஜாதக அமைப்பில் மேற்கண்ட பாவக அமைப்பில் இருந்து தாங்கள்  மிகுந்த நன்மைகளை பெறுவீர்கள் அன்பரே !

ஜாதக அமைப்பில் பாதிக்க பட்ட பாவகங்கள் :

6,11,12 ம் வீடுகள் ஆயுள் பாவகமான 8 ம் பாவகதுடன் சம்பந்தம் பெறுவது 6 ம் பாவக வழியில் இருந்து அதிக கோப உணர்வினையும் , மன உளைச்சலையும் ,தேவையில்ல விசயங்களை மனதில்  போட்டு குழப்பி கொண்டு மன நிம்மதியை கெடுத்து கொள்ளும் தன்மையை உருவாக்கும் , எதிரிகளால் சில நேரங்களில் அதிக இன்னல்களை சந்திக்க வேண்டி வரும் , உடல் நிலை கடுமையாக  பாதிக்க வாய்ப்பு உண்டு , குறிப்பாக வயிறு சம்பந்த பட்ட தொந்தரவுகள் ஏற்ப்பட வாய்ப்பு உண்டு , லாப ஸ்தான அமைப்பில் இருந்து ஜாதகர் கவனமாக இருக்க்க வில்லை  எனில் ஜாதகருக்கு வர வேண்டிய நன்மைகள் யாவும் மற்றவர்கள் தட்டி பறிக்க வாய்ப்பு உண்டு , அதிர்ஷ்ட வாய்ப்புகளை ஜாதகர் வீண் விரையம் செய்யும் தன்மை உண்டாகலாம் , வண்டி வாகனங்களில் செல்லும்பொழுது அதிக கவனமும் பாதுக்காப்பாகவும் பயணம் மேற்கொள்ளுவது அவசியம் , மேற்கண்ட பாவக அமைப்பில் இருந்து ஜாதகருக்கு தீமையான  பலன்கள் நடை பெற வாய்ப்பு உண்டு என்பதால் 8 ம் பாவக வழியில் ஜாதகர் அதிக கவனமாக இருப்பது நல்லது 8 ம் பாவகம் திடீர் இழப்பு , விபத்து , ஏமாற்றம் ,அதிக மன உளைச்சல்  , அதிக கோப உணர்வினை தரும் .

தற்பொழுது நடை பெரும் சுக்கிரன் திசை தரும் பலன்கள் : ( 03/10/2008 முதல் 03/10/2028 வரை )

1,7 ம் வீடுகள் களத்திர ஸ்தானம் எனும் ஏழாம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் ,10 ம் வீடு ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் வீட்டுடன் தொடர்பு பெற்றும் சுக்கிரன் திசை நன்மையான பலன்களையே  வாரி வழங்கி கொண்டு இருக்கிறது எனவே ஜாதகர் 7 ம் பாவக வழியிலும் 10 ம் பாவக வழியிலும் 100 சதவிகித நன்மையை பெரும் யோகம் உண்டாகும் , குறிப்பாக கூட்டு தொழில்  , சுய தொழில் , வெளிநாடுகளில் தொழில் அல்லது வேலை செய்வதால் வாழ்க்கையில் அளவில்லா முன்னேற்றம் , திருமணம் மூலம் யோக வாழ்க்கை , வாழ்க்கை துணையின்  வழியில் இருந்து  மிகுந்த நன்மைகளையும் , கூட்டு நண்பர்கள் வழியில் இருந்து அதிக நன்மைகளையும் பெரும் யோகம் உண்டாகும் , ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் ஜாதகருக்கு அபரிவிதமான  வளர்சியும் முன்னேற்றமும் உண்டாகும்  ஆக சுக்கிரன் திசை யோக பலன்களையே வாரி வழங்கி கொண்டு இருக்கிறது என்பது ஜாதகருக்கு மகிழ்ச்சியான விஷயம் வாழ்த்துகள்  அன்பரே !

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969


வியாழன், 29 நவம்பர், 2012

கோட்சார ரீதியாக ராகு கேது பெயர்ச்சி பலன்களை எவ்வாறு அறிவது?




கேள்வி :

கோட்சார ரீதியாக ராகுகேது பெயர்ச்சி பலன்களை எவ்வாறு அறிவது? ஜெனன லக்கினத்தை அடிப்படையாக கொண்டு தான் கணிக்க வேண்டுமா? 

பதில் :

நிச்சயமாக , ராகு கேது பெயர்ச்சி பலன்களை , ராசியை வைத்து பலன் காண இயலாது மேலும் ராசியை வைத்து பலன் காணுவது ஜாதகத்தில் சரியான , துல்லியமான பலன்களை காண நிச்சயம் உதவாது . 

சுய ஜாதக அமைப்பில்  கிரகங்களின் கோட்சார ரீதியான பலன்களை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும் எனில் முதலில் நமது ஜாதகத்தில் லக்கினம் என்ன வென்று தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும் , அதன் பிறகு , தற்பொழுது நடக்கும் திசை மற்றும் புத்தி என்ன வென்று தெரிந்து கொள்ள வேண்டும் , தற்பொழுது நடக்கும் திசை மற்றும் புத்தி எந்த பாவகத்தின்  பலனை நடத்துகிறது, அந்த பாவகத்துடன் கோட்சார கிரகங்களின்  தொடர்பு ஏற்ப்படுகிறத ? இல்லையா ? என்பதை தெரிந்து கொள்வது  சுய ஜாதக ரீதியான கோட்சார பலன்களை சரியாக காண உதவி புரியும் .

எடுத்துகாட்டாக :

ஒரு ரிஷப இலக்கின ஜாதகருக்கு தற்பொழுது குரு திசை நடை பெறுவதாக வைத்துகொண்டால் , நடை பெரும் குரு திசை ஜாதகருக்கு எந்த பாவகங்களின்  பலனை தருகிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும் , ரிஷப லக்கினத்திற்கு 6 மற்றும் 12 ம் பாவக பலனை தற்பொழுது நடத்துவதாக இருந்தால்  தற்பொழுது நடை பெற இருக்கும் ராகு கேது பெயர்ச்சி ஜாதகருக்கு  கோட்சார  ரீதியான பலன்களை தரும் , 12 ம் வீட்டுடன் தொடர்பு பெரும் கேது ஜாதகருக்கு  சர நெருப்பு தத்துவ அமைப்பில் இருந்து நன்மையான பலன்களை  வாரி வழங்கும் , ஏனெனில் 12 ம் பாவகம் ( இந்த இடத்தில் 12 ம் பாவகத்தை கேந்திர வீடாக  பாவிக்க  வேண்டும் ) கேந்திர அதிபதி செவ்வாய் பகவானின் வீடாக  வருவது அது கேந்திர பாவகமாக இருப்பதால் 12 ம் பாவக வழியில் இருந்து ஜாதகர்  100 சதவிகித யோக பலன்களை அனுபவிப்பார் , அதாவது ஜாதகர்  மூதலீடு செய்வதால் நிறைய வருமானம் பெற முடியும் , வெளிநாடுகளில் இருந்து  அபரிவிதமான செல்வாக்கு உண்டாகும் , திடீர் அதிர்ஷ்டத்தின்  மூலம் வாழ்க்கையில் ஜாதகர் செல்வந்தர் ஆகும் யோகம் உண்டாகும் .

அதே சமயம் ஜாதகருக்கு 6 ம் பாவகதுடன் சம்பந்தம் பெரும் ராகு மிகுந்த இன்னல்களை  தருவார் , ஏனெனில் 6 ம் பாவகம் கேந்திர பாவகம் இதன் அதிபதி கோண அதிபதியாக வருவதால் , 100 சதவிகித தீமையான பலன்களை தருவார் ராகு , ஒரு பக்கத்தில் கேது பகவானால் ஜாதகர் சுறு சுறுப்பாக பாடு பட்டு  சேர்த்த பொருளை , ராகு பகவான் 6 ம் பாவகதுடன் தொடர்பு பெரும் ராகு பகவானால்  இழந்து கொண்டு இருப்பார் , ஏனெனில் துலாம் ராசி சர காற்று ராசியாக வருவதால் , ஜாதகர் வீண் ஆடம்பரத்திலும் , கேளிக்கை , மற்றவரிடம்  ஏமாறும் சூழ்நிலையை தந்து விடும் , எனவே ஜாதகர் தான் ஈட்டும்  பொருள் வரவினை சேமித்து வைக்க வேண்டும் இல்லை எனில் இருக்கும் அனைத்தையும்  இழக்கும் சூழ்நிலையை தரும் , ஜாதகர் உடல் நிலையம் வெகுவாக  பாதிக்கும்.

ஒரு வேலை மேற்கண்ட ஜாதகருக்கு நடக்கும் குரு திசை 5 மற்றும் 11 ம் பாவக பலனை  செய்கிறது என்று வைத்துகொள்ளுங்கள் தற்பொழுது நடக்கும் ராகு  கேது பெயர்சி எவ்வித நன்மை தீமை பலனையும் செய்யாது , மேற்கண்ட 5,11 ம் பாவகத்துடன் சம்பந்தம் பெரும் கோட்சார கிரகங்களினால் வரும் நன்மை தீமை பலன்களை மட்டுமே  ஜாதகர் அனுபவிக்க நேரிடும் , எனவே ஒரு  திசை எந்த பாவகத்தின் பலனை தருகிறதோ அந்த பாவகதுடன் சம்பந்தம் பெரும்  கோட்சார கிரகங்கள் நன்மை தீமை பலனை செய்ய தகுதி உண்டு , அந்த பாவக்துடன் எவ்விதத்திலும் சம்பந்தம் பெறாத கிரகங்களினால் ஜாதகர் எவ்வித  நன்மை தீமை பலனையும் அனுபவிக்க மாட்டார் , எனவே நடை முறையில்  பலன் தந்து கொண்டு இருக்கும் பாவகதுடன் சம்பந்தம் பெறாதா கிரகங்களின் பெயர்ச்சியை பற்றி நாம் எவ்வித கவலையும் கொள்ள தேவை இல்லை  என்பதே உண்மை .

கிரகங்களின் பெயர்ச்சியை லக்கினத்தை அடிப்படையாக வைத்து பலன் காணும் பொழுது  பலன்கள் மிகவும் துல்லியமாக சரியாகவும் இருக்கும் , நன்மை நடக்கிறது என்றால் ஜாதகர் வரும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ளலாம் , தீமை நடக்கிறது என்றால் விழிப்புணர்வுடன் இருந்து கவனமாக வாழ்க்கையை நடத்தலாம் .


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

ஞாயிறு, 25 நவம்பர், 2012

ஜோதிட ஆலோசனை : சுக்கிரன் திசை வழங்கும் சுபயோக பலன்கள் !



மேற்க்கண்ட ஜாதகிக்கு நடந்து கொண்டு இருக்கும் சுக்கிரன் திசை , லக்கினம் , சகோதர ஸ்தானம் , பூர்வ புண்ணியம் , லாப ஸ்தானம் எனும் பாவகங்கள் அனைத்தும் ஜீவன ஸ்தானமான 10 ம் பாவகதுடன் சம்பந்தம் பெற்று தனது பலனை நடத்தி கொண்டு இருப்பது ஜாதகிக்கு மிகுந்த நன்மையை வாரி வழங்கி கொண்டு இருக்கிறது .

 மேலும் ஜாதகியின் ஜீவன ஸ்தானம் என்பது கடக ராசியாக வருவது 100 சதவிகித நன்மையை தரும் அமைப்பாக கருதலாம்  , கடந்த 1996 ல் ஆரம்பித்த சுக்கிர திசை ஜாதகிக்கு கல்வியில் சிறந்து விளங்கும் தன்மையையும் , சுயமாக யாருடைய உதவியும் இன்றி முன்னேற்றம் பெரும் யோகத்தையும் , பொருளாதார வாழ்க்கையில் தன்னிறைவான அமைப்பையும் , பட்ட படிப்பு முடிந்த உடன் ஒரு சிறந்த நிறுவனத்தில் நல்ல வருமானத்துடன் பணியாற்றும் யோகத்தையும் , எதிர்காலத்தில் தனது விருப்பபடி சிறந்த வாழ்க்கை துணையை திருமணம் செய்துகொள்ளும் வாய்ப்பினையும் ஜாதகிக்கு நடந்து கொண்டு இருக்கும் சுக்கிரன் திசை தடையில்லாமல் வழங்கிக்கொண்டு இருக்கிறது .

இதற்க்கு காரணம் சுக்கிரன் திசை 1,3,5,11 ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10 ம் வீட்டுடன் தொடர்பு பெறுவதே மேலும் அந்த ஜீவன ஸ்தானம் சர நீர் தத்துவ ராசியாக இருப்பது ஜாதகிக்கு அதிர்ஷ்டங்களை வாரி வழங்கி கொண்டு இருக்கிறது , லக்கினம் ஜீவன ஸ்தானதுடன் சம்பந்தம் பெறுவது , ஜாதகியின் உடல்நிலை மன நிலை ஆகியவற்றையும் , ஜாதகியின் நல்ல குணத்தையும் , திறமை மிக்க அறிவாற்றலையும் தருகிறது வாழ்க்கையில் நல்ல அந்தஸ்தையும் கௌரவமான தொழில் முன்னேற்றத்தையும் தருகிறது , ஜாதகி நினைப்பதை அடையும் யோகத்தை தருகிறது .

 மூன்றாம் பாவகம் ஜீவன ஸ்தானதுடன் சம்பந்தம் பெறுவது , ஜாதகி எடுக்கும் முயற்ச்சிகள் , எண்ணங்கள் யாவும் வெற்றி பெற வழி வகுக்கிறது , நினைத்ததை சாதிக்கும் யோகத்தை தருகிறது , மேலும் பொருளாதாரத்தில் தன்னிறைவையும் , பெரியவர்களை மதிக்கும் பண்பினையும் , சிறந்த புத்தி கூர்மையையும் , உறவு நண்பர்கள் ஆதரவையும் வழங்குகிறது ,.

பூர்வ புண்ணியம் ஜீவன ஸ்தானதுடன் சம்பந்தம் பெறுவது கலைகளில் சிறந்து விளங்கும் ஆற்றலை  தருகிறது , சிறப்பாக பாடும் வல்லமையும் , இனிய  குரல் வளத்தையும் தந்து இருக்கிறது , வாழ்க்கையில் படிப்படியான முன்னேற்றத்தை  இந்த பாவகம் தொடர்ந்து வழங்கி கொண்டே இருக்கிறது , தான்  பெற போகும் குழந்தைகளாலும் ஜாதகி யோக அமைப்பினையே பெறுவார் , ஜாதகிக்கு குல தேவதை மற்றும் இறைநிலையின் அருள் எப்பொழுதும் நிறைந்து  நிற்கிறது .

லாப ஸ்தானம் ஜீவன ஸ்தானதுடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு தொழில் ரீதியாக  படித்து முடித்த உடன் சிறப்பான நல்ல வேலை வாய்ப்பினை பெற்று தந்தது , மேலும் எதிர்காலத்தில் அரசு துறையில் பணியாற்றும் யோகத்தையும் தரும் , தனது பெற்றோருக்கு மிகுந்த யோகத்தை இதுவரை ஜாதகி தந்து கொண்டு இருப்பது  ஒரு சிறப்பான விஷயம் , குறிப்பாக தந்து தாயிக்கு மிகுந்த  யோகத்தை  தரும் அமைப்பு இது .

இந்த பெண்ணிற்கு மூல நட்சத்திரம் என்றாலும் ஜாதக அமைப்பு மிகுந்த  யோக நிலையில் இருப்பதால் இந்த பெண்ணை மணந்து கொள்ளும் நபருக்கு  யோகமான வாழ்க்கையே காத்துகொண்டு இருக்கிறது என்பதே உண்மை .

பொதுவாக பெண்ணின் ஜாதகம் இதை போன்று இருப்பது ஜாதகி மற்றும் ஜாதகியை சார்ந்தவர்களுக்கு  மிகுந்த யோக பலன்களை வாரி வழங்கும் , மேலும் நட்சத்திரத்தால்  எவ்வித துன்பமும் வருவதிற்கு வாய்ப்பில்லை , மேலும் பிறந்த  நட்சத்திரம் ஒன்றை மட்டும் வைத்து பலன் காணுவது ஜாதக பலன்களை  சரியாக சொல்ல உதவாது .

மேற்கண்ட ஜாதகத்தில் யோக பலன்களை வாரி வழங்குவதில் முக்கிய பங்காற்றும் கிரகங்கள்  ராகு கேது என்றால் அது மிகையாகாது , காரணம் நான்காம்  பாவகத்தில் அமர்ந்த ராகுவும் , ஜீவன ஸ்தானத்தில் அமர்ந்த கேதுவும்  ஜாதகத்தில் தான் அமர்ந்த பாவக பலனை 100 சதவிகிதம் விருத்தி செய்வதே  இதற்க்கு காரணம், ஆக இந்த ஜாதக அமைப்பில் ராகு கேது இரண்டு கிரகமும்  மிகுந்த யோக பலன்களையே வழங்கிக்கொண்டு இருக்கிறது , இதன் காரணமாகவே   ஜாதகிக்கு நல்லவர்களின் அறிமுகமும் நடப்பும் வாழ்க்கையில்  கிடைக்கிறது , வாழ்க்கையில் பல முன்னேற்றங்களும் உண்டாகிறது  .

ஒருவருக்கு வாழ்க்கையில்  நல்ல நண்பர்கள் , நல்ல உறவினர்கள் , நல்ல மனிதர்களை இணைத்து வைப்பதில் ராகு கேது கிரகங்களுக்கு முக்கிய பங்கு உண்டு  , இந்த ஜாதகத்தில் அந்த அமைப்பு சுக ஸ்தானமான நான்காம் பாவகத்துடனும் , ஜீவன ஸ்தானமான பத்தாம் பாவக்துடனும் தொடர்பு அந்த பாவக வழியில் இருந்து  நல்லவர்கள் சேர்க்கையும் , முன்னேற்றத்தையும் தரும்  என்பதில் ஆச்சரியம் இல்லை .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

யோக அதிபதியான சனி தன் திசையில் தரும் அவயோக பலன்களும் , ஜாதகர் படும் துன்பமும் !




மேற்கண்ட துலாம் இலக்கின ஜாதகருக்கு லக்கினத்திற்கு 1 ) நான்காம் பாவகதிர்க்கும் , 2 ) ஐந்தாம் பாவகதிர்க்கும் அதிபதியான சனி பகவான் தனது திசையில் ஜாதகரை படுத்தி எடுத்து இருக்கிறார் , யோக அதிபதியான சனி தனது திசையில் ஜாதகருக்கு அவயோக பலனை தந்ததிற்கு என்ன காரணம் ? என்பதை பற்றி இந்த பதிவில் காண்போம் .

நடந்த சனி திசை ஜாதகருக்கு பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகமும் , லாபம் அதிர்ஷ்டம் எனும் பதினொன்றாம் பாவகமும் , லக்கினத்திற்கு பாதக ஸ்தானமான 11 ம் வீட்டுடன் தொடர்பு பெற்று பலனை தந்ததே இதற்க்கு காரணம் , மேலும் சனி திசை நடந்த காலகட்டத்தில் ஜாதகர் தனது பூர்வீகத்தில் குடியிருந்தது 200 சதவிகித தீமையான பலனை வாரி வழங்கியது ,  குறிப்பாக பெற்றோர் திடீர் இழப்பு ,சொத்து இழப்பு , பொருளாதார இழப்பு , காரிய தடைகள் என ஜாதகரை பல கோணங்களில் பாதித்திருப்பது கவலைக்குரிய விஷயமே , மேலும் தான் கற்ற கல்விக்கு உண்டான சரியான வேலை வாய்பை பெற முடியாமல் போனது ஜாதகரின் வாழ்க்கையில், பெரிய திருப்பு முனையாக அமைந்து விட்டது , ஜாதகர் எடுக்கும் முயற்ச்சிகள் அனைத்தும் தோல்வி மேல் தோல்வி தர ஆரம்பித்து ஜாதகரின் மன நிலையை விரக்த்தியின் உச்ச நிலைக்கே கொண்டு சென்றது தான் , யோக அதிபதியான சனி திசை தந்த யோக பலன் .

ஒரு ஜாதகருக்கு நடப்பு திசை பாதக ஸ்தான பலனை தரும் பொழுது ஜாதகர் எந்த வழியிலும் முன்னேற்றம் பெற முடியாது , இழப்புகளை தவிர்க்க இயலாது , எந்த வழிபாடுகளும் , பரிகாரங்களும் ஜாதகருக்கு பலனை தர வாய்ப்பு சிறிதும் இல்லை , மேலும் இந்த ஜாதகருக்கு பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம்  பாதக ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்றது மிகுந்த துன்பத்தை தரும் அமைப்பு , ஜாதகருக்கு உதவி செய்ய யாரும் முன் வர மாட்டார்கள் , நண்பர்கள் உறவினர்கள் அனைவரும் பகைவர்களாக மாற்றிவிடும் தன்மை உண்டாகும் , திசை தரும் பாதக ஸ்தான பலனை ஜாதகர் நிச்சயம் அனுபவித்தே தீர வேண்டும் , ஒரு வேலை ஜாதகர் தனது பூர்வீகத்தை விட்டு எல்லை தாண்டி தனியாக ஜீவனம் செய்தால் மட்டுமே சிறிது முன்னேற்றம் உண்டாகும் , அதுவும் சுய ஜாதகத்தில் சில பாவகங்கள் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே  , மேலும் ஜாதகர் தனது குல தேவதை வழிபாடும் , பித்ரு கர்மங்களையும்  முறையாக செய்து வந்தால் மட்டுமே , ஜாதகர் நல்ல நிலையில்  வாழ்வதற்கு வழிகாட்டும் , இல்லை எனில் ஜாதகரின் நிலை மிகவும்  பரிதாபமான நிலைக்கு ஆளாகும் சூழ்நிலையை ஏற்ப்படுத்தும் .

மேற்கண்ட சனி திசை பாதக ஸ்தான பலனை தந்ததால் ஜாதகர் அனுபவித்த இன்னல்கள் பின் வருமாறு , 1 கல்வியில் தடை , 2 தொழில் தடை , 3 பூர்வீக சொத்து  இழப்பு , 4 விபத்து , 5 ஜாதகர் தனது பெற்றோரை திடீர் என இழந்தது , 6 ஜாதகர் அனைத்ததையும் இழந்து தனது  பூர்வீகத்தை விட்டு வெளியேறியது , 7 மன குழப்பம்  விரக்தி ஆகியவற்றால் ஜாதகரின் முன்னேற்றம் தடை பெற்றது , 8 உதவி செய்ய யாரும் இல்லாமல் போனது , 9 திருமணம் செய்ய பல முயற்ச்சிகள்  செய்தும் பலன் தரமால் போனது , 10 நிலையான வருமானம் இல்லாமல் அதிக சிரமங்களை அனுபவித்தது என ஜாதகரை நடந்த யோக அதிபதி  திசை படுத்தி எடுத்து விட்டது .

எனவே ஒரு ஜாதகருக்கு நடப்பது எந்த கிரகத்தின் திசை என்றாலும் சரி , நல்ல  நிலையில் இருக்கும் பாவகங்களின் தொடர்பை பெற்று பலனை தர வேண்டும் அப்பொழுது தான்  ஜாதகர் வாழ்க்கையில் சகல நலன்களையும் பெற முடியும் இல்லையேல் அவர் லக்கினத்திற்கு அதிபதி என்றாலும் சரி , கேந்திர கோண அதிபதி  என்றாலும் சரி ஜாதகருக்கு சிறிதும் நன்மை செய்ய வாய்ப்பு இல்லை என்பதே  உண்மை குறிப்பாக நடப்பு திசை பாதக ஸ்தான பலனை செய்வது முற்றிலும்  அவயோக பலன்களையே வாரி வழங்கும் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன்   
9443355696

வியாழன், 22 நவம்பர், 2012

ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் பாவகம் வழங்கும் யோக வாழ்க்கை : பகுதி 1



ஜீவனம்  எனும் தொழில் ஸ்தானம் ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் பல நெளிவு சுளிவுகளை கற்றுகொடுக்கும் இடம் , அடிப்படையில் கல்வி காலங்களில் இருந்து வரும் ஆண் மற்றும் பெண் அன்பர்கள் தனது வாழ்க்கையில் மனிதர்களை பற்றி அதிகம் தெரிந்து கொள்ள உதவும் ஒரு இடம் , போட்டிகள் நிறைந்த இந்த உலகில் ஒரு மனிதன் பொருளாதார ரீதியாக வெற்றி பெற இந்த தொழில் ஸ்தானமே உதவி செய்கிறது , குறிப்பாக கல்வி காலங்களில் எதை பற்றியும் அதிக கவலைகள் இல்லாமல் சுற்றி திரிந்த அன்பர்களுக்கு , வேலை நிமித்தமாக ஒரு இடத்திற்கு சென்று பணியாற்றும் பொழுது சம்பந்த பட்ட நபரின் வாழ்க்கையில் சூழ்நிலையே வேறு விதமாக அமைந்து விடுகிறது .

 அந்த இடத்தில் தான் ஒரு பணியாளன் என்ற எண்ணமும் , தனக்கு மேல் தன்னை கட்டுபடுத்த ஒரு நபர் இருக்கிறார் என்ற எண்ணமும் சம்பந்தபட்டவரின் சுதந்திரத்தை கட்டுக்குள் கொண்டு வந்து விடுகிறது , ஜாதகர் பொருளுக்காக ( வருமானம் ) சில சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி வருகிறது , அதிலும் தனது நேரத்தை பணத்திற்காக மற்றவருக்கு தாரை வார்க்க வேண்டி வருகிறது , அவர் எவ்வளவு பெரிய வருமானத்தை பெற்றாலும் சரி , எவ்வளவு பெரிய நிறுவனத்தில் பணியாற்றினாலும் சரி இந்த நிலையே, மேலும் ஜாதக அமைப்பில் ஜீவன ஸ்தானம் நல்ல நிலையில் இருக்கும் ஒரு நபர் மற்றவருக்காக பணியாற்றுகிறார் என்றால் அங்கே நடப்பது என்ன ? சம்பந்த பட்ட நபரின் ஜீவன ஸ்தானம் வலிமையாக வேலை செய்யும் அந்த நிறுவனத்தின் முதலாளிக்காக ( முதலாளியின் ஜாதக அமைப்பில் ஜீவன ஸ்தானம் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பது வேறு விஷயம் ), ஆனால் சம்பந்த பட்ட நபருக்கோ சிறு தொகை மட்டுமே கிடைக்கும், அதுவும் தனது உழைப்பிற்கு ஏற்ற அமைப்பில் இருக்கும் என்று சொல்ல இயலாது .

நமது நாட்டை பொறுத்தவரை ஒருவர் படிப்பு பின்பு ஒரு நல்ல வேலை என்ற முறையிலேயே  சிந்தனை ஓட்டம் செல்கிறது , தமக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது  என்றால் மற்றவரிடம் அடிமையாக இருப்பதில் தமக்கு எவ்வித அவமானமும்  இல்லை என்ற மனபக்குவத்தை தந்தது நமது நாட்டின் கல்வி முறையில்  இருக்கும் குறைபாடே , இது ஒரு சிறந்த எதிர்காலத்தை நமது இளைஞர்களுக்கு நிச்சயம் வழங்குவதற்கு உண்டான வாய்ப்பு சற்றே குறைவு, ஆக  நமது பெற்றோர்கள் தமது குழந்தைகளை சுயமாக சிந்திக்க என்று சுதந்திரம்  தருகிறார்களோ அன்றே இந்த சூழ்நிலை மாறும் .

இருப்பினும் ஒருவர் தனது ஜாதக ரீதியாக ஜீவன வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்ளலாம்  ? என்பதை பற்றி இலக்கின வாரியாக இனி நாம் பார்ப்போம் , ஒருவருக்கு சரியான வயதில் நல்ல ஜீவனம் அமைகிறது என்றால்  நிச்சயம் ஜாதகரும் ஜாதகரின் தகப்பனாருமே காரணமாக எடுத்துகொள்ள  இயலும் , ஏனெனில் ஒருவருக்கு தனது தகப்பனாருடன் நல்ல உறவு முறை இருக்கிறது என்றால் , அந்த ஜாதகருக்கு ஜீவனம் சிறப்பாக அமையும்  என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை , எனவே ஒருவருக்கு சுய ஜாதக  ரீதியாக ஜீவன ஸ்தானம் நல்ல வலிமையுடன் இருப்பது அவசியம் , இனி இலக்கின வாரியாக ஜீவன ஸ்தானம் மூலம் பெரும் நன்மை தீமைகளை பார்ப்போம் .

மேஷ லக்கினம் :

மேஷ லக்கினம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு , முதல் வீடாக வருவதால் லக்கினத்திற்கு  ஜீவன ஸ்தான அதிபதியாக சனி பகவான் வருகிறார் , மேலும் இந்த லக்கினத்திற்கு  சனி பகவான் எந்த எந்த ராசிகளில் அமர்ந்தால் ஜீவன வாழ்க்கையில்  மேன்மையும் , யோகத்தையும் தருவார் என்பதை பற்றி இனி பார்ப்போம் .

விதி விலக்கு :

மேஷ லக்கினத்திற்கு பத்தாம் பாவகமான மகரத்தில் ராகுவோ , அல்லது  கேதுவோ அமர்ந்தால் ஜீவன ஸ்தானம் 100 சதவிகிதம் வலிமை பெற்றுவிடும் , மேலும் ஜீவன ஸ்தானத்திற்கு அதிபதியான சனி பகவான் எந்த பாவகத்தில்  அமர்ந்திருந்தாலும் ஜீவன ஸ்தானத்திற்கு நன்மை தீமை பலனை தருவதற்கு தகுதி அற்றவர் ஆகிவிடுவார் , ஜீவன ஸ்தானம் மகரத்தில் அமரும்  ராகு அல்லது கேதுவே ஜீவன ஸ்தானத்திற்கு உண்டான முழு பலனையும் செய்வார்கள்  அதுவும் 100 சதவிகிதம் நன்மையாக, ஆக இங்கு மேஷ லக்கினத்திற்கு  ஜீவன ஸ்தானத்தில் அமரும் ராகு கேது கிரகத்தால் ஜாதகர் ஜீவன வழியில் யோக பலன்களையே அனுபவிப்பார் என்பதில் எவ்வித ஐயமும்  இல்லை .

மேஷத்தில் அமரும் சனி பகவானால் (லக்கினத்திலும் , ஜீவன ஸ்தானத்திற்கு நான்கிலும் அமரும் சனி ) ஜாதகர் மிகுந்த நன்மைகளையே பெறுவார் குறிப்பாக ஜாதகர் நெருப்பு சார்ந்த தொழில்கள் , கட்டுமான தொழில் , அரசு நிர்வாக தொழில்கள் , மின்னணு  உபகரண தொழில்கள் , கனரக வண்டி வாகன தொழில்கள் செய்தால்  சிறப்பான வெற்றிகளை தரும் .

ரிஷபத்தில் அமரும் சனி பகவானால் ( லக்கினத்திற்கு இரண்டிலும் ,ஜீவன ஸ்தானத்திற்கு ஐந்திலும்  அமரும் சனி ) ஜாதகருக்கு தொழில் ரீதியாக சில இன்னல்களை அனுபவிக்க வேண்டி வரும் , ஒருவேளை ரிஷபத்தில் நான்காம் பாவகத்தில் அமரும் சனிபகவானால்  யோகமே உண்டாகும் , இதனால் ஜாதகர் ஜீவன வழியில் நன்மை  பெரும் யோகம் உண்டு ஆனால் சனி ஐந்தில் அமருவது ஜீவன வழியில் அதிக  தீமையே செய்யும் .

மிதுனத்தில் அமரும் சனி பகவானால் ( லக்கினத்திற்கு மூன்றிலும் ஜீவன ஸ்தானத்திற்கு ஆறிலும் அமரும் சனி ) ஜாதகருக்கு அதிக நன்மைகள் தர சிறிதும் வாய்ப்பு இல்லை , மேலும் கடன் பட்டு செய்யும் தொழில்களில் ஜாதகர் வாழ்க்கையில்  அதிக இன்னல்களை சந்திக்க வேண்டி வரும் , இங்கு அமரும் சனி ஜாதகருக்கு ஜீவன வழியில் தீமையே செய்யும் ஜாதகரின் சிந்தனை ஜீவன அமைப்பில் படு குழியில் தள்ளிவிட வாய்ப்பு அதிகம் .

கடகத்தில் அமரும் சனி பகவானால் ( லக்கினத்திற்கு நான்கு, ஜீவன ஸ்தானத்திற்கு ஏழாம் வீட்டி அமரும் சனி கடகத்தில் பகை பெற்றாலும் கூட ) ஜாதகருக்கு  ஜீவன வழியில் கொடிகட்டி பறக்க வைத்துவிடுவார் , குறிப்பாக மக்களை  வாடிக்கையாளராக கொண்டு செய்யும் தொழில்களில் எல்லாம் வெற்றி மேல் வெற்றியே கிடைக்கும், வண்டி வாகனம் , நிலம் வீடு , உணவு பொருட்கள் விற்பனை , நீர்ம பொருட்கள் , மண்ணிற்கு கீழே கிடைக்கும் திரவ பொருட்கள்  போன்ற தொழில்களில் அபரிவிதமான முன்னேற்றம் உண்டாகும் .

சிம்மத்தில் அமரும் சனி பகவானால் ( லக்கினத்திற்கு ஐந்தில் , ஜீவன ஸ்தானத்திற்கு எட்டில் ) ஜாதகருக்கு ஜீவன வழியில் திடீர் இழப்பை தரும் , சுய  தொழில் அல்லது வேளையில் அதிக இன்னல்களை தரும், ஒருவேளை சிம்மத்தில்  ஏழாம் பாவகத்தில் சனி அமர்ந்தால் யோகமே ஏற்ப்படும் கடகத்தை  போன்றே அதிக நன்மைகளை தரும் , இருப்பினும் செய்யும் தொழில்களில்  மற்றம் உண்டாகும் அதாவது மருத்துவம் , மருந்து , உயிர்காக்கும்  தொழில்கள் என செய்யும் தொழில்களில் மாற்றத்தை தரும் இருப்பினும்  மக்கள் தொடர்பை ஏற்ப்படுத்தும் .

கன்னியில் அமரும் சனி பகவானால் ( லக்கினத்திற்கு ஆறில், ஜீவன ஸ்தான அமைப்பிற்கு  ஒன்பதில் ) ஜாதகருக்கு ஜீவன வழியில் பெரிய நன்மைகளை பெறுவதற்கு உண்டான வாய்ப்பு மிக மிக குறைவே , ஆனால் சிறப்பான அடிமை  தொழிலை தருவதற்கு உண்டான வாய்ப்பை ஏற்ப்படுத்தி தரும் , நல்ல  வேலை அமையும் ( அடிமை தொழில் ).

துலாம் ராசியில் அமரும் சனி ( லக்கினத்திற்கு ஏழாம் வீட்டிலும், ஜீவன ஸ்தானத்திற்கு  பத்திலும் அமரும் சனி ) ஜாதகருக்கு ஜீவன வழியில் வெற்றி மேல்  வெற்றியை தரும் சுய தொழில் செய்வதின் மூலம் ஜாதகர் மிகப்பெரிய வெற்றியை  பெரும் யோகம் உண்டாகும் , தனது அறிவாற்றலால் செய்யும் தொழில்களில்  எல்லாம் கோடி கட்டி பறக்கும் யோகம் உண்டாகும் , புதுமையான விஷயங்களை உலகிற்கு அறிமுகம் செய்யும் ஆற்றல் பெற்றவர்கள், ஜீவன அமைப்பில் மக்களுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டு இருப்பவர்கள்  , தன்னம்பிக்கை மற்றும் அறிவாற்றலை மட்டுமே முதலீடாக  கொண்டு தொழில் செய்யும் வல்லமை பெற்றவர்களா , எந்த ஒரு சூழ்நிலையிலும்  மனம் தளராமல் ஜீவன வழியில் மேன்மை பெரும் தன்மை பெற்றவர்கள் , இந்த அமைப்பை பெற்றவர்கள் செய்யாத தொழில்களே கிடையாது  என்று சொல்லலாம் ,குறிப்பாக ஆடை அலங்கார பொருட்கள் , சொகுசு  வண்டி வாகனங்கள் , தங்க நகை வியாபாரம் உலோகம் அலோகம் சார்ந்த தொழில்களில் வெற்றி மேல் வெற்றியே கிடைக்கும் , இது ஜீவன ஸ்தான  அமைப்பிற்கு மிகசிறப்பான இடம் மேஷ லக்கினத்திற்கு இங்கு அமரும் சனி தொழில் வெற்றியை வாரி வழங்கி விடுவார் .

விருச்சகத்தில் அமரும் சனி ( லக்கினத்திற்கு எட்டில் , ஜீவன ஸ்தானத்திற்கு பதினொன்றில்  அமரும் சனி ) ஜாதகருக்கு தொழில் ரீதியாக வெற்றிகளை வாரி வழங்கினாலும்  திருமண வாழ்க்கைக்கு பிறகே பெரிய அளவில் முன்னேற்றம்  உண்டாகும் , இருப்பினும் திடீர் இழப்புகளை தவிர்க்க இயலாது, இந்த அமைப்பை பெற்றவர்கள் தனது மனதை ஒருநிலை படுத்துவது  அவசியம் , மனம் போன போக்கில் சென்றால் சரிவுகளை தவிர்க்க இயலாது , இருப்பினும் ஜீவன வழியில் 100 சதவிகித நன்மைகளை வாரி வழங்கும் , குறிப்பாக ஆயுள் காப்பீடு , வெளிநாடுகளில் இருந்து அதிக வருமானம் , திடீர் அதிர்ஷ்டம் , புதையல் யோகம் , பண்ணை மற்றும் விவசாயம்  செய்வதால் நிறைய வருமானம் பெரும் யோகம் உண்டாகும் .

தனுசு ராசியில் அமரும் சனி ( லக்கினத்திற்கு ஒன்பதில் ஜீவன ஸ்தானத்திற்கு பனிரெண்டில் அமரும் சனி ) ஜாதகருக்கு அடிமை தொழிலை மட்டுமே சிறப்பாக அமைத்து  தரும் , மேலும் ஆசிரிய பணி , அரசு துறையில் பணியாற்றும்  யோகத்தை தர கூடும் , சுய தொழில் செய்ய ஏற்ற அமைப்பு இதுவல்ல  ஆனால் களத்திர பாவகம் நல்ல நிலையில் இருந்தால் கூட்டு தொழில் செய்யலாம் , சனி இங்கு அமர்வது பெரிய யோக பலனை தராது ஜீவன  அமைப்பிற்கு .

மகரத்தில் அமரும் சனி ( லக்கினத்திற்கு பத்திலும், ஜீவன ஸ்தான அமைப்பிற்கு  ஒன்றிலும் அமரும் சனி ) ஜீவன ஸ்தானத்தை 100 சதவிகிதம் கெடுத்து விடும்  இங்கே சனி ஆட்சி பெற்றாலும் யோக பலன் இல்லை தனது பாவகத்தை  கெடுக்க இவரே காரணமாக அமைந்துவிடுவார் , ஒரு வேலை சூரியனுடன் சேர்ந்த புதன் இங்கு அமர்ந்தால் ஜீவன ஸ்தானம் வலிமை பெரும் இதன் வழி நன்மைகள் கிடைக்க வாய்ப்பு அதிகம், ஆக சனி இங்கு அமருவது 200 சதவிகித தீமையை தரும் ஜீவன அமைப்பிற்கு .

கும்பத்தில் அமரும் சனி ( லக்கினத்திற்கு பதினொன்றிலும் , ஜீவன ஸ்தான அமைப்பிற்கு இரண்டிலும் அமரும் சனி ) ஜாதகருக்கு ஜீவன வழியில் சிரமம் தரும் அமைப்பாகவே இதையும் கருத வேண்டி வருகிறது தனது வீட்டிற்கு இரண்டில் மறையும் சனியால் ஜீவன அமைப்பிற்கு எவ்வித நன்மையையும் தர  இயலாது ஒரு வேலை சூரியனுடன் சேர்ந்த புதன் இங்கு அமர்ந்தால் ஜீவன ஸ்தானம் வலிமை பெரும் இதன் வழி நன்மைகள் கிடைக்க வாய்ப்பு அதிகம்.

மீனத்தில் அமரும் சனி ( லக்கினத்திற்கு பனிரெண்டிலும் , ஜீவன  ஸ்தானத்திற்கு மூன்றிலும் அமரும் சனி ) ஜாதகருக்கு ஜீவன வழியில் எளிதான  வெற்றிகளை வாரி வழங்கி விடுவார் , தொழில் ரீதியாக எவ்வித சிரமும்  இன்றி முன்னேற்றம் பெரும் யோகம் உண்டாகும் , குறிப்பாக பங்கு வர்த்தக தொழில்களில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும் , மேஷ லக்கினத்திற்கு  சனி இங்கு அமர்வது ஜாதகரை சுகபோகியாக மாற்றிவிடும் தன்மை பெற்றது , பணம் என்பது ஜாதகருக்கு ஒரு பெரிய விஷயமாகவே இருக்காது , ஏதாவது ஒரு வழியில் செல்வம் வந்துகொண்டே இருக்கும் .

மேற்க்கண்டவை பொது பலன்கள் என்றாலும் , சுய ஜாதகத்தை வைத்தே ஜீவன  பாவக வலிமையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது ஜோதிட தீபத்தின் கருத்து .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969

புதன், 21 நவம்பர், 2012

கேள்வி பதில் : செவ்வாய் தோஷ நிர்ணயம் , விளக்கம் !




ஐயா வணக்கம்,

தங்களின் செவ்வாய் தோஷ நிர்ணயமும் செவ்வாய் வழங்கும் நன்மையும் தீமையும்
பகுதி 1 ஐ படித்தபோது எழுந்த ஐயங்கள் இவை.

A.மேஷ லக்ன ஜாதகருக்கு 2ல் அமரும் செவ்வாயால் 100% தீமையே என்று
கூறியுள்ளீர்கள்.ரிஷபத்தில் செவ்வாய் சமம் என்ற நிலையில் உள்ளபோதும்
தீமைதான் ஏற்படுத்துவாரா?
வேறு கிரக பார்வை அல்லது சேர்க்கையால் இந்த நிலை மாறக்கூடுமா?


பதில் : மேஷ லக்கினத்திற்கு லக்கினாதிபதி என்ற முறையில் லக்கினத்திற்கு இரண்டில் மறைவது லக்கினத்திற்கும் , இரண்டாம் பாவகத்திர்க்கும் தீமையை தரும் , மேலும் எந்த ஒரு பாவக அதிபதி என்றாலும் சரி அந்த பாவகத்திர்க்கு 2,6,8,12 வீடுகளில் மறைவு பெறுவது சம்பந்த பட்ட பாவக அமைப்பிற்கு தீமையான பலனை தர கூடும் , இது பாவக அமைப்பிற்கு சில மாற்றங்களை தரவும் அதாவது ( நன்மை தீமை ) செய்யும் .

B.மேஷ லக்ன ஜாதகருக்கு 4ல் கடகத்தில் அமரும் செவ்வாய் 100% நன்மை
செய்வார் என்று கூறியுள்ளீர்கள்.கடகத்தில் செவ்வாய் நீசமாயிற்றே. பூமி
காரகன் என்ற முறையில் தன் பலமிழந்ததால் பூமி,வீடு,நிலம் போன்றவைகளால்
ஜாதகருக்கு ஆதாயம் அடையமுடியாது என்று கூறுவது சரியா?

பதில் : லக்கினத்திற்கு லக்கினாதிபதி என்ற முறையில் அதிக நன்மைகளை கடகத்தில் அமரும் செவ்வாய் நிச்சயம் தருவார் , இந்த இடத்தில் நான்காம் வீட்டுக்கு அதிபதியான சந்திரன் வளர்பிறை சந்திரனா ? தேய்பிறை சந்திரனா ? என்று நிர்ணயம் செய்த பிறகு அவர் கடகத்திற்கு எந்த வீட்டில் அமர்ந்திருக்கிறார் என்பதை வைத்து நான்காம் பாவகத்திர்க்கு செவ்வாய் தரும் நன்மை தீமை பலனை நிர்ணயம் செய்யவேண்டும் என்பதே உண்மை .

C.மேஷ லக்ன ஜாதகருக்கு 7ல் துலாமில் செவ்வாய் நன்மை செய்வார்
என்றுள்ளீர்கள்.இங்கும் செவ்வாய் சம நிலை.மேஷத்திலும் சம நிலை .இரண்டும்
சுக்கிரனின் வீடு.சோ ரிஷபத்தில் தீமையையும் துலாமில் நன்மையையும்
செய்யும் ரகசியம் என்ன?

பதில் : துலாம் ராசியில் அமரும் செவ்வாய் பகவானால் மேஷ லக்கினம் 100 சதவிகித நன்மையை பெரும் , இதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை , ஆனால் களத்திர பாவகமான துலாம் ராசியின் நிலையை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள சுக்கிரன் எங்கு அமர்ந்து இருக்கிறார் என்பதை வைத்தே நிர்ணயம் செய்ய வேண்டும் , பொதுவாக சர காற்று தத்துவ துலாம் ராசியில் நெருப்பு நன்றாக எறிவது போல் ( காற்று வேகமாக அடித்தால் பற்றி எரியும் நெருப்பின் தீவிரம் அதிகமாகும் ) இந்த இடத்தில் செவ்வாய் சுக்கிரனின் கூட்டு தொடர்பு மிகவும் சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும் . ரிஷபத்தில் அமரும் செவ்வாய் மேற்கண்ட அளவிற்க்கு நன்மையை தர வாய்ப்பில்லை காரணம் ரிஷபம் ஸ்திர மண் ராசி எனவே ( எரியும் நெருப்பின் மீது கொட்டப்படும் மண் நெருப்பை அனைத்து விடும் நெருப்பின் தன்மை மட்டுப்படும் ) இங்கே அமரும் செவ்வாய் நன்மையான பலனை வழங்க வலிமை அற்றவர் ஆகிவிடுகிறார் , மேற்கண்ட உதராணம் தங்களுக்கு விளக்கம் தரவே, இதுவே ஜாதக பலனாக நிர்ணயம் செய்ய இயலாது சுய ஜாதக அமைப்பை வைத்தே நன்மை தீமை பலனை நிர்ணயம் செய்யவேண்டும்  அன்பரே !

D.மேஷ லக்ன ஜாதகருக்கு 8ல் செவ்வாய் மறைவு என்பதால் தீமையை செய்கிறார் எனலாமா?
ஆனால் அங்கே அவர் ஆட்சி பலமாக உள்ளாரே.லக்னாதிபதி அஷ்டமாதிபதி என்ற
முறையில் ஆட்சி பலமாகத்தானே உள்ளார்,பிறகு ஏன் தீமை செய்யவேண்டும்?


பதில் : மேஷ லக்கினத்திற்கு 8 ல் மறைவு பெரும் செவ்வாய் லக்கினத்திற்கும் தீமை செய்வார் , மறைவு கேந்திரமான 8 ம் பாவக அதிபதி என்ற முறையில் இங்கு அமரும் செவ்வாய் 8 ம் பாவகத்தை 200 சதவிகிதம் கெடுத்து விடும் தன்மை பெற்றவர் ஆகிறார் . ஆக இங்கு அமரும் செவ்வாய் லக்கினம் எட்டாம் பாவகம் இரண்டு பாவகத்தையும் கடுமையாக பாதித்துவிடும் அபாயம் உண்டு ,இப்படி அமைந்த ஜாதகத்தில் லக்கினத்திலோ , அல்லது எட்டாம் பாவகத்திலோ ராகு அல்லது கேது அமர்ந்தால் லக்கினம் அல்லது எட்டாம் பாவகம் 100 சதவிகித நன்மையை தரும் இது ஒன்று மட்டுமே விதி விளக்கு .

E.மேஷ லக்ன ஜாதகருக்கு லக்னாதிபதி மீனத்தில் விரைய பாவம் சென்றதால்
தீமையான பலன் தருவார் என்று சொல்லலாமா?


பதில் : நிச்சயமாக 12 ல் அமரும் செவ்வாய் லக்கினம் மற்றும் எட்டாம் பாவக அமைப்பிற்கு தீமையான பலனை தரும் அமைப்பை தருவதில் ஆச்சரியம் இல்லை .

F. மேற்படி மேஷ லக்ன ஜாதகருக்கு 2,8,12 ல் அமர்ந்தால் மட்டுமே செவ்வாய்
தோஷம் என்று கூறலாமா?


பதில் : நான் சொல்ல வந்ததை சரியாக புரிந்து கொள்ள முயற்ச்சி செய்யுங்கள் அன்பரே செவ்வாய் கிரகம் ஒவ்வொரு லக்கினத்திற்கும் , மற்றவர்களால் தோஷம் தரும் அமைப்பு என்று சொல்லும் பாவகங்களில் அமரும் பொழுது தரும் நன்மை தீமை பலனை பற்றி மட்டுமே விளக்கம் தந்துள்ளோம் , இதை தாங்கள் செவ்வாய் தோஷம் என்று எடுத்துகொள்வது சரியான அணுகு முறை இல்லை என்பதை தெளிவு படுத்த விரும்புகிறது ஜோதிடதீபம் , செவ்வாய் கிரகம் தரும் நன்மை தீமை பலனை போன்றே , மற்ற கிரகமும் நன்மை தீமை பலனை தரும் , எனவே இதை செவ்வாய் தோஷம் என்று பார்த்தால் மற்ற கிரகங்களை வைத்தும் , குரு தோஷம் , சுக்கிர தோஷம் , சனி தோஷம் என்று பார்க்க வேண்டி வரும் , எனவே செவ்வாயும் மற்ற கிரகத்தை போன்றே நன்மை தீமை பலனை தருவதை பற்றி எழுதி இருக்கிறோம் , மற்றவர்கள் சொல்வது போல் செவ்வாய்க்கு தோஷம் எல்லாம் ஒன்றும் இல்லை அன்பரே !

மேற்படி செவ்வாயின் கெடு பலன்களை தவிர்க்க
1.சுப்பிரமணியர் வழிபாடு
2.செவ்வாய் வழிபாடு
என்ற பொது பரிகாரம் போதுமா? அல்லது லக்ன வாரியாக பாதிக்கப்பட்ட ஸ்தானம்
வாரியாக பரிகாரங்களை மேற்கொள்ளவேண்டுமா?
பதில்களை ஜோதிட தீபத்தில் எதிர்பார்க்கிறேன்.
நன்றிகளுடன்
ஜோதிடபித்தன்.

பதில் : ஒரு கிரகம் தர வேண்டியதை நிச்சயம் தரும் , கடவுள் வழிபாடு கிரகம் தரும் நன்மை தீமை பலனை ஏற்று கொள்ளும் மன பக்குவத்தை தரும் , கடவுள் வழிபாடு என்பது கிரகங்களின் பலனில் ஒரு சிறு மாற்றத்தையும் தந்து விட வாய்ப்பு இல்லை என்பது ஜோதிட தீபத்தின் கருத்து , முதலில் சரியான ஜோதிட பலனை சொல்வதற்கு எத்தனை ஜோதிடர்கள் இருக்கிறார்கள் அன்பரே ! இதுவே ஒரு ஜாதக பலனை நிர்ணயம் செய்வதில் பல குழப்பங்களை விளைவிக்கிறது , நன்மை பலன் நடை பெரும் பொழுது தீமை தருகிறது என்றும் , தீமையான பலன்கள் நடை பெரும் பொழுது நன்மை நடக்கிறது என்றும் ஜோதிட பலன்களை சொல்லி மற்றவர்களின் வாழ்க்கை தானே நமக்கு என்ன ? என்ற எண்ணமும் ஜோதிடத்தை பதம் பார்த்துகொண்டு இருக்கிறது அன்பரே ! மேலும் பரிகாரம் என்பது தான் செய்த வினை பதிவிற்கு உண்டான நன்மை தீமை பலனை அனுபவிப்பதே , இதை பற்றி சில பதிவுகளில் முன்பே எழுதி உள்ளோம் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி, 17 நவம்பர், 2012

ஜாதகத்தில் செவ்வாய் தோஷ நிர்ணயம்,செவ்வாய் பகவான் வழங்கும் நன்மை ! தீமை ? பகுதி 6


 

பொதுவாக சுய ஜாதக அமைப்பில் லக்கினத்திற்கு 2 ,4 ,7 ,8 ,12  பாவகங்களில் செவ்வாய் இருப்பின், அது செவ்வாய் தோஷம் என்று நிர்ணயம் செய்து , குறிப்பிட்ட ஜாதக அமைப்பை சார்ந்தவர்கள் இதே போன்றே செவ்வாய் லக்கினத்திற்கு 2 ,4 ,7 ,8 ,12  பாவகங்களில் இருக்கும் ஜாதகத்தை சார்ந்தவரையே திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்றும் பல ஜோதிடர்கள் தீர்மானம் செய்கின்றனர் , இது எந்த அளவிற்கு உண்மை என்பதை பற்றி இந்த பதிவில் சிந்திப்போம் . மேலும் ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் பகவான் தரும் நன்மை தீமையை பற்றி விரிவாக 12 லக்கினத்தை அடிப்படையாக வைத்து  பார்ப்போம் . 

ஐந்தாம் பகுதியின் தொடர்ச்சி ...


கும்ப லக்கினம் :

2 ம் பாவகம்  மீனத்தில் அமரும் செவ்வாய் , லக்கினம் மற்றும் ஜீவன ஸ்தானம் , சகோதர ஸ்தானம் என்ற அமைப்புகளுக்கு சற்றே சிரமத்தை தர கூடும் , தனது சகோதர வழியில் இருந்து சிறு சிறு இன்னல்களையும் , கருத்து வேறுபாட்டினையும் , மன ரீதியான போராட்டத்தையும் தர கூடும் , மேலும் எடுக்கும் முயற்ச்சிகளில் பல தடைகளையும் , தாமதத்தையும் தர கூடும் , நடை பெரும் நிகழ்வுகள் ஜாதகரின் மன நிலையையும் , உறக்கத்தையும் வெகுவாக பாதிக்கும் , மேலும் தனது தகப்பனார் வழியில் இருந்து அதிக சிரமங்களை எதிர்கொள்ள  வேண்டி வரும் , ஜீவன வழியில் பல சிரமங்களை அனுபவிக்க வேண்டி வரும் , செய்யும் தொழில்களில் அடிக்கடி தடைகளும் , முன்னேற்றம் அற்ற நிலையம் உருவாக  வாய்ப்பு அதிகம் உண்டு , ஜாதகர் நினைக்கும் காரியங்கள் அனைத்தையும் நடை முறையில் கொண்டு வர பல சிரமங்களை அனுபவிக்க வேண்டி வரும் , தன்னம்பிக்கை  வெகுவாக குறையும் , பயணங்களால் அதிக இன்னல்களுக்கு ஜாதகர் ஆளாகும் சூழ்நிலை வரலாம் , ஜாதக அமைப்பில் லக்கினத்திற்கு களத்திர பாவகம் நல்ல நிலையில் இல்லை எனில் ஜாதகர் சுய தொழில் மற்றும் கூட்டு தொழில் செய்வதால் தோல்வியை தழுவ வேண்டி வரும் , கும்ப லக்கினத்திற்கு 2 ல் மீனத்தில் அமரும் செவ்வாய்  லக்கினம் , சகோதர ஸ்தானம் , ஜீவன ஸ்தானம் ஆகிய அமைப்பிற்கு தீமையான பலனையும் , குடும்ப ஸ்தானம் , வருமானம் போன்ற அமைப்பிற்கு நன்மையான பலனையும் வாரி வழங்குவார் , எனவே செவ்வாய் மீனத்தில் அமர்வது கும்பலக்கினத்திர்க்கு அவ்வளவு நன்மையை தர வாய்ப்பில்லை .

4 ம் பாவகம் ரிஷபத்தில் அமரும் செவ்வாய் , சகோதர ஸ்தானத்திற்கும் , நான்காம் பாவகத்திர்க்கும் சில சிரமங்களை தந்த போதிலும் , லக்கினம் , ஜீவன ஸ்தான அமைப்பிற்கு மிகுந்த யோக  பலனையே வாரி வழங்குவார் , ஜாதகர் சுய தொழில் செய்வதால் வெற்றி மேல் வெற்றி கிட்டும் , நல்ல வாழ்க்கை துணை அமையும் , தனது தகப்பனார் வழியில் இருந்து  அதிக நன்மைகளை ஜாதகர் பெறக்கூடும் , ஜாதகர் இயற்கையாகவே வலி தாங்கும் உடல் அமைப்பை பெற்றிருப்பார் , செய்யும் தொழில் திடீர் அதிர்ஷ்டத்தின் மூலம் வெற்றி பெறும் யோகம்  உண்டாகும் , பொருளாதார வசதியில்  ஜாதகருக்கு எவ்வித குறையும்  இருக்காது, நீண்ட ஆயுளை வாரி வழங்கி விடும் , ஆனால் உடலில் வடு தழும்பு ஏற்ப்படும்  அளவிற்கு காயத்தை உண்டு பண்ணும் , பயணங்களில் அதிக பாதுகாப்பாக இருப்பது ஜாதகருக்கு நன்மையை தரும் , குறிப்பாக வண்டி வாகனம் தனது பெயரில் வைத்திருப்பதை தவிர்ப்பது நல்லது , மேலும் சொந்தமாக வீடு கட்டும் முன் சரியான ஜோதிட ஆலோசனை பெற்று வீடு கட்டுவது நல்லது , ஜாதகருக்கு ஏற்ற சரியான திசை  அமைப்பில்  வீடு அமைய வில்லை எனில் ஜாதகர் பாடு படு திண்டாட்டமாக அமைந்துவிடும் , மேலும் பயணங்களில் ஜாதகருக்கு பல இன்னல்களே ஏற்ப்படும் , ஒரே இடத்தில் அமர்ந்துகொண்டு செய்யும் தொழிலாக ஜாதகர் தேர்ந்தெடுப்பது நல்லது , ஆக கும்ப லக்கினத்திற்கு நான்கில் அமரும் செவ்வாய் , லக்கினம் , ஜீவனம் ஆகிய அமைப்பிற்கு நன்மையையும் , மூன்றாம் பாவகம் , நான்காம் பாவக அமைப்பிற்கு தீமையும் தரும் .

7 ம் பாவகம் சிம்மத்தில் அமரும் செவ்வாய் லக்கினம் , மூன்றாம் பாவகம் , களத்திர பாவகம் , ஜீவன ஸ்தானம் ஆகிய அனைத்து அமைப்பிற்கு 100 சதவிகித , நன்மையே வாரி நிச்சயம் வாரி வழங்கும் , ஜாதகர் எடுக்கும் அனைத்து காரியங்களும் வெற்றி மேல் வெற்றி கிட்டும் , முயற்சிகளில் நல்ல வெற்றி வாய்ப்பை தரும் , சகோதர அமைப்பில் இருந்து ஜாதகர் அதிக நன்மைகளை பெரும் யோகம் உண்டாகும் , சக்தி வழிபாட்டில் சிறந்து விளங்கும் தன்மை உண்டாகும் , இறை அருளின் ஆற்றல் ஜாதகருக்கு எப்பொழுதும் நிறைந்து நிற்கும் , மக்கள் ஆதரவு ஜாதகருக்கு பரிபூரணமாக கிடைக்கும் , ஜாதகர் நினைப்பதை நடத்தி காட்டும் ஆற்றல் இயற்கையாக அமைந்துவிடும் , தனது வாழ்க்கை துணையின் வழியில் இருந்து சகல யோகமும் ஜாதகர் நிச்சயம் பெறுவார் , மேலும் தனது தொழில் முறை கூட்டாளிகள் , நண்பர்கள் , பொதுமக்கள் ஆதரவு என ஜாதகருக்கு அனைத்து வழியில் இருந்தும் நன்மையான பலன்களே நடைபெறும் , கும்ப லக்கினத்திற்கு 7 ல் சிம்மத்தில் அமரும் செவ்வாய் பகவான் , லக்கினம் , மூன்றாம் பாவகம் , களத்திர பாவகம் , ஜீவன ஸ்தானம் என்ற அமைப்பிற்கு 100 சதவிகித நன்மைகளை வாரி வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை .

8 ம் பாவகம் கன்னியில் அமரும் செவ்வாய் , லக்கினம் , மூன்றாம் பாவகம் , எட்டாம் பாவகம் , ஆகிய அமைப்பிற்கு தீமையன பலன்களையும் , ஜீவன ஸ்தானத்திற்கு 200 சதவிகித நன்மை மற்றும் வெற்றியை வாரி வழங்கும் , ஜாதகர் எடுக்கும் முயற்ச்சிகள் சில நேரங்களில் தோல்வியை தரக்கூடும் , தனது சகோதர அமைப்பில் இருந்து அதிக இன்னல்களை எதிர்கொள்ள வேண்டி வரும் , தொலை தொடர்பு விஷயங்களில் தோல்வியை தரும் , ஜாதகர் சில நேரங்களில் எதிர்பாராத இழப்புகளை தவிர்க்க இயலாது , உடல் ரீதியான தொந்தரவுகளும் ஜாதகரை அதிகமாக பாதிக்க கூடும் , குறிப்பாக வயிறு சம்பந்தபட்ட பிரச்சனைகளால் ஜாதகர் அதிகம் பதிக்க கூடும் , உடலில் சத்து பற்ற குறையினால் உடல் ரீதியான பிரச்சனைகள் அடிக்கடி வர கூடும் , இலக்கின அமைப்பிற்கு ஜாதகருக்கு அதிக கோப உணர்வை தூண்டி விடும் , இதனால் மன ரீதியான பிரச்சனைகளையும் ஜாதகர் அனுபவிக்க வேண்டி வரும் , ஆனால் ஜீவன வழியில் சகல நன்மைகளையும் வாரி வழங்கும் , செய்யும் தொழில் அடிக்கடி நல்ல முன்னேற்றத்தை தரும் , தொழில் அபிவிருத்தி என்பது ஜாதகருக்கு  வாழ்நாள் முழுவதும் இருந்துகொண்டே இருக்கும் , அல்லது அரசு துறையில் பணியாற்றும் யோகம் உண்டாகும் , பதவியில் அடிக்கடி உயர்வினை பெரும் யோகம் உண்டாகும் , வருமானம் என்பது ஜாதகருக்கு எப்பொழுதும் நிற்காமல் வந்துகொண்டே இருக்கும் , கும்ப லக்கினத்திற்கு கன்னியில் அமரும் செவ்வாய் ஜீவன ஸ்தானத்திற்கு மட்டும்  அதிக நன்மைகளை செய்வார் .

12 ம் பாவகம் மகரத்தில் அமரும் செவ்வாய் லக்கினம், சகோதர ஸ்தானம் ஜீவன ஸ்தானம் 12 ம் பாவகம் ஆகிய அனைத்து பாவாக அமைப்பிற்கும் நன்மைகளையே வாரி வழங்குவார், இலக்கின அமைப்பிற்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும் , சிறப்பான வளரும் சூழ்நிலையையும் , கல்வியில் நல்ல முன்னேற்றத்தையும் , சிறந்த நிர்வாக திறனையும் , அரசு பணியில் சிறப்பான முன்னேற்றத்தையும் வாரி வழங்கும் , மேலும் ஜாதகரின்  முயற்ச்சிகள் யாவும் வெற்றி மேல் வெற்றியை தரும் , மேலும் சிறப்பான தொழில் முன்னேற்றத்தை வாரி வழங்கும் , நல்ல சொத்து சுக சேர்க்கை ஜாதகருக்கு உண்டாகும் , தன்னம்பிக்கை மிகும் , ராணுவம் , காவல் துறை , அரசியல் , அரசு நிர்வாக பணிகளில் சிறந்து விளங்கும் தன்மை இந்த செவ்வாய் பகவானால் ஏற்ப்படும் , நல்ல மன நிம்மதியான வாழ்க்கை அமையும் , நல்ல உறக்கமும் சிறப்பாக சிந்திக்கும் ஆற்றலும், ஜாதகருக்கு இயற்கையாக அமைந்து விடும் , உண்மையில் கும்ப இலக்கின ஜாதக அமைப்பை பெற்றவர்களுக்கு செவ்வாய் பகவான் மகரத்தில் 12 ல் அமர்வது சகல நன்மைகளையும்  வாரி வழங்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.


மீன லக்கினம் :

 2 ம் பாவகம் மேஷத்தில் அமரும் செவ்வாய் இரண்டாம் பவகத்தை 100 சதவிகிதம் கெடுத்து விடுவார் , இங்கே செவ்வாய் ஆட்சி பெற்றாலும் , இரண்டாம் பாவகத்திர்க்கு கடுமையான பாதிப்பையே தரும் , ஜாதகரின் பேச்சு பல இன்னல்களை தரும் , வருமானம் மற்றும்  குடும்பம் சிறப்பாக அமைய வாய்ப்பு ரொம்ப குறைவு , மேலும் இலக்கின அமைப்பில் இருந்து உடல் ரீதியான சிறு சிறு பிரச்சனைகளை கொடுக்க கூடும் , மேலும் வருமானம் என்பது எவ்வளவு வந்தாலும் பற்றா குறையான நிலையையே தரும் , குடும்ப வாழ்க்கையில் ஜாதகர் சற்றே கவனாமா இல்லையெனில் பல இன்னல்களை சந்திக்க வேண்டி வரும் , மன நிம்மதி கெடும் , ஆனால் பொது வாழ்க்கையில் ஜாதகருக்கு அபரிவிதமான வெற்றியை தரும் , பொதுமக்கள் ஆதரவினால் நல்ல பதவிகளை அலங்கரிக்கும் தன்மை ஏற்ப்படும் , மேலும் ஜாதகரின செயல்பாடுகள் யாவும் மக்களிடம் நற்ப்பெயரை  பெற்று தரும் , அரசியலில் திடீர் என சிறப்பான பதவிகளை பெற்று தரும் யோகம் உண்டாகும் , மீன லக்கினத்திற்கு 2ல் மேஷத்தில் அமரும் செவ்வாய் பொதுவாழ்க்கையில் வெற்றியை  தந்தாலும் , குடும்ப வாழ்க்கையில் பல இன்னல்களை தரும் , இலக்கின அமைப்பிற்கு தீமையே செய்யும் .

4 ம் பாவகம் மிதுனத்தில் அமரும் செவ்வாய் , லக்கினம் மற்றும் நான்காம் பாவக அமைப்பிற்கு மிகவும் சிறப்பான நன்மைகளை வழங்கும் , நல்ல குடும்பம் , சொத்து சுக சேர்க்கை , நல்ல வசதி மிக்க வண்டி வாகனம் , அனைத்து வசதிகளும் கொண்ட வீடு , தனது அறிவாற்றல் மூலம் சகல வசதிகளையும் பெரும் ஆற்றல் , கமிஷன் , ஒப்பந்த  தொழில்களில் வெற்றியையும் , புதிய அறிமுக தொழில்களில் வெற்றியை தரும் , இரு சக்கர , நான்கு சக்கர வாகனங்களில் இருந்து நல்ல வருமானம் , சுகமான வாழ்க்கை முறை , விவசயம் பண்ணை தொழில்கள் செய்வதால் நல்ல முன்னேற்றமும் , வெற்றியும் கிடைக்கும் , ஆனால் பாக்கிய ஸ்தான அமைப்பிற்கு அதிக தீமையான பலன்களையே வாரி வழங்கும், சரியான வாழ்க்கை பாதையை தேர்ந்தெடுக்க வில்லை என்றால் ஜாதகர் அதிக அவ பெயரை சந்திக்க வேண்டி வரும் , பொது வாழ்க்கையில் தோல்வியை தரும், மக்கள் ஆதரவின்மையை தரும் , எனவே ஜாதகர் தான் உண்டு தன் வேலை உண்டு இருப்பது சகல நன்மைகளையும் வழங்கும் .

7 ம் பாவகம் கன்னியில் அமரும் செவ்வாய் , இலக்கின அமைப்பிற்கும் , ஜீவன ஸ்தான அமைப்பிற்கும் 100 சதவிகித நன்மையை தரும் , ஆனால் களத்திர ஸ்தான அமைப்பிற்கு அதிக கெடுதலை  தரும் ஜாதகருக்கு நீண்ட ஆயுள் , செய்யும் காரியங்களில் வெற்றி , தன்னம்பிக்கை , சுய கட்டுப்பாடு , ஒழுக்கம் , தெளிவான சிந்தனை ஆகியவற்றை கொடுத்தாலும்  , களத்திர வழியில் இருந்து அதிக இன்னல்களை தரும் , நண்பர்களாலும் , பொதுமக்களாலும் அதிக இன்னல்களுக்கு ஆளாகும் சூழ்நிலை உண்டாகும் , பொது வாழ்க்கையில் அதிக அவ பெயரை பெற்று தரும் , வெளிநாடுகள் , வெளியூர் செல்வது ஜாதகருக்கு அவ்வளவு நன்மையை தர வாய்ப்பு சிறிதும் இல்லை சொந்த ஊரில் நல்ல வாழ்க்கையை தரும் , ஆனால் வெளியூரில் கடுமையான தீமையை தரும் இழப்புகளை தவிர்க்க இயலாது , முன்னேற்றமும் தடை படும் , மக்களை தொடர்பு படுத்தி செய்யும் தொழில்களில் அதிக இடையூறுகளை தர கூடும் , எனவே மீன இலக்கின ஜாதகருக்கு கண்ணியில் அமரும் செவ்வாய் லக்கினம் , ஜீவன ஸ்தான அமைப்பிற்கு அதிக நன்மைகளையும் , களத்திர பாவக அமைப்பிற்கு அதிக தீமையையும் தர கூடும் .

8 ம் பாவகம் துலாம் ராசியில் அமரும் செவ்வாய் மீன இலக்கின ஜாதகருக்கு குடும்ப ஸ்தான அமைப்பிற்கு மிகவும் சிறப்பான பலன்களை வாரி வழங்கும் , கை நிறைவான வருமானமும்  அழகான குடும்பமும் அமையும் , சிறப்பான அடிமை தொழில் அமைவத்தர்க்கு உண்டான வாய்ப்பை தரும் , எவ்வித சிரமமும் இன்றி நிறைய வருமானத்தை வாரி வழங்கும் , தனது அறிவாற்றலின் காரணமாக ஜாதகர் அதிக யோக பலன்களை அனுபவிக்கும் தன்மை உண்டாகும் , நிலையான வருமானம் ஜாதகருக்கு சிறப்பாக அமைந்து விடும்  இதில் எவ்வித சந்தேகமும் இல்லை , உடல் ரீதியான தொந்தரவுகள் ஜாதகருக்கு கடுமையாக பாதிக்கும் , சரியான வாழ்க்கை துணை ஜாதகர் தேர்ந்தெடுக்க வில்லை எனில்  ஜாதகரின் வாழ்க்கை பல சிரமங்களை சந்திக்க வேண்டி வரும் , குடும்ப ஸ்தான அமைப்பிற்கு மட்டும் நன்மை தரும் செவ்வாய் , லக்கினம் , பாக்கிய ஸ்தானம் ஆகிய அமைப்பிற்கு  அதிக தீமையை வழங்குவார் , மற்றவர்கள் விஷயத்தில் ஜாதகர் மூக்கை நுழைக்காமல் இருப்பது நல்லது , மற்றவர் விஷயங்களில் ஜாதகர் தலையிட்டால் ஜாதகரின் வாழ்க்கை  கேள்வி குறியாக மாறிவிட வாய்ப்பு அதிகம் .

12 ம் பாவகம் கும்பத்தில் அமரும் செவ்வாய் மீன இலக்கின அமைப்பிற்கு லக்கினம் , பாக்கியம் , 12 ம் பாவகம் ஆகிய மூன்று அமைப்பிற்கும் சகல நன்மைகளையும் வாரி வழங்குவார் , ஜாதகர் நல்ல வளரும் சூழ்நிலை , கல்வியில் முன்னேற்றம் , உடல் ஆரோக்கியம் , தொழில் முறையில் நல்ல வெற்றி , கூட்டு தொழில் செய்தால் நல்ல லாபம் , மன நிம்மதியான வாழ்க்கை முறை , சிறப்பு மிக்க பதவி , மக்கள் செல்வாக்கு , அளவில்லா சொத்து சுகம் வண்டி வாகன யோகம் , நினைத்ததை முடிக்கும் ஆற்றல் , ஆன்மீக வாழ்க்கையில்  மிக பெரிய வெற்றி , மக்கள் ஆதரவின் மூலம் சமுதயத்தில் பல மாற்றங்களை கொண்டுவரும் யோகம் , தனது சுய சிந்தனையால் நீடித்த நன்மை தரும் காரியங்கள்  , பரந்த மனப்பான்மை , தியாக குணம் , வாழ்க்கையில் எவரிடமும் அடிபணியாத நிலை , தனக்கென்று தனி பாதையை அமைத்துக்கொண்டு அதில் வெற்றி காணுதல்  , என ஜாதகருக்கு கும்பத்தில் அமரும் செவ்வாய் சகல நன்மைகளையும் வாரி வழங்குவார் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வெள்ளி, 16 நவம்பர், 2012

இயல் இசை நாடகம் மற்றும் கலை துறையில் சிறந்து விளங்கும் ஜாதக அமைப்பு !




ஒருவருடை ஜாதகத்தில் லக்கினம் சர ராசியில் அமைந்து , லக்கினத்திற்கு ஐந்தாம் பாவகமான பூர்வ புண்ணியம் ஸ்தானம் ஜீவன ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்றால் , ஜாதகர் கலை துறையில் சிறந்து விளங்கும் யோகம் உண்டாகும் அல்லது ஜீவன ஸ்தானம் பூர்வ புண்ணிய ஸ்தானம் எனும் ஐந்தாம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றாலும் மேற்கண்ட அமைப்பில் கலை  சிறந்து விளங்கும் யோகம் உண்டாகும்.

இந்த முறையில் பூர்வ புண்ணியம் ஜீவன ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்று ஜீவன ஸ்தானம் மேஷ ராசியாக இருப்பின் , ஜாதகர் சிறந்த இயக்குனாராக இருக்க வாய்ப்பு அதிகம் , மேலும் தனது படைப்பாற்றல் மூலம் மற்றவர்களிடம் இருந்து தனித்து தெரியும் தன்மை  உண்டாகும் , சிறந்த கதை அம்சம் கொண்ட திரை படத்தையோ , நாடகத்தையோ ஜாதகர் தனக்கே உரிய பாணியில் எடுக்கும் ஆற்றல் அதிகமாக இருக்கும் , அந்த படைப்புகள் அனைத்தும் மக்களிடையே மிகவும் சிறப்பாக பேசப்படும் , மேலும் மக்கள் மனதில் தெளிவான சிந்தனையையும் , விழிப்புணர்வையும் நிச்சயம் ஏற்ப்படுத்தும் , சிறந்த முறையில் கட்சி அமைப்புகளுக்காக இடப்படும் செட்டுகளை சிறப்பாக வடிவமைக்கும் திறமையை ஜாதகர் பெற்றிருப்பார் , சண்டை கட்சிகளை வடிவமைப்பதில் சிறந்து விளங்கும் தன்மை பெற்றவர்களின்,  ஜாதக அமைப்பிலும் மேற்கண்ட பூர்வ புண்ணியம் ஜீவன ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்று இருக்கும் , இதன் மூலம் ஜாதகருக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் வந்து குவியும் , இயக்கம் சம்பந்த பட்ட துறையில் ஜாதகர் சிறந்து விளங்குவதை மேற்கண்ட பாவக தொடர்பு இருப்பின் நிச்சயம் அந்த ஜாதகர் சிறந்த இயக்குனராக வருவார் என்பதில் சந்தேகம் இல்லை .

இதுவே பூர்வ புண்ணியம் ஜீவன ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்று ஜீவன ஸ்தானம் கடக  ராசியாக இருப்பின் , ஜாதகருக்கு இயற்கையாகவே இசை ஞானம் அமைந்திருக்கும் , இசை துறையில் சாதிக்கும் அன்பர்களின் ஜாதக அமைப்பில் நிச்சயம் இந்த நிலை இருக்கும் , குறிப்பாக வாத்தியங்களில் சிறந்து விளங்கும் தன்மை உண்டாகும் , இசை கருவிகளை சிறப்பாக கையாளும் தன்மை  ஜாதகருக்கு இயற்கையாக அமையபெரும் , நல்ல கற்பனை வளம் ஜாதகருக்கு சிறப்பாக அமைந்து விடும் , கவி புனையும் திறமை , இசை கோர்க்கும் தனி திறமை , தனது இனிமையான குரலின் தன்மையால் மக்களை கட்டி போடும் தன்மை , சங்கீதத்தில் சிறந்து விளங்கும் ஆற்றல் , தனது கற்பனையால் மக்கள் விரும்பும் படைப்புகளை சிறப்பாக வடிவமைக்கும் ஆற்றல் , நகை சுவை திறமையால் மக்களை மகிழ்ச்சி அடைய செய்யும் ஆற்றல் , கலை நயம் மிக்க படைப்பாற்றல் மூலம் மக்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும்  ஆற்றல் என திரை இசை துறையில் உலக புகழ் பெரும் அளவிற்கு  ஜாதகரை மிக பெரிய இடத்திற்கு எடுத்து செல்லும் அமைப்பாக இருக்கும் மேற்கண்ட பாவக தொடர்பு  இருந்தால் .  

இதுவே பூர்வ புண்ணியம் ஜீவன ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்று ஜீவன ஸ்தானம் துலாம் ராசியாக இருப்பின் , ஜாதகர் தனது நடிப்பு ஆற்றலினால் உலக மக்கள் அனைவரையும்  கவரும் தன்மை ஏற்ப்படும் , நடிப்பு மற்றும் நடன திறமையினால் மக்களை தன்பால் ஈர்க்கும் வல்லமை பெற்றவராக ஜாதகர் இருப்பார் , மேலும் நடிப்பில் பல பரிமாணங்களை காட்டும் திறமை இயற்கையாக  ஜாதகரின் பிறவியிலேயே அமைத்து விடும் , கலை துறைக்காக தன்னை அர்ப்பணிக்கும் ஆற்றல் கொண்டவர் , ஜாதகர் செய்யும் ஒவ்வொரு புதிய விஷயங்களும் பொது மக்களால்  விரும்பப்படும் , ஜாதகரின் நடிப்பு திறமைக்கு பல விருதுகளை பெரும் யோகம் உண்டாகும் , இதன் மூலம் ஜாதகருக்கு அபரிவிதமான செல்வாக்கும் , முன்னேற்றமும் உண்டாகும்  , காலங்கள் மறைந்தாலும் , ஜாதகரின் புகழ் என்றும் மறையாமல் நிலைத்து நிற்கும் யோகம் உண்டாகும் , மேலும் இது துலாம் ராசியாக இருப்பதால் ஜாதாகர் எப்பொழுதும் புதுமை  விரும்பியாக காணப்படுவார் , புதிய விஷயங்களை மக்களுக்கு எடுத்து செல்வதில் ஜாதகருக்கு எப்பொழுதும் அதிக ஆர்வம் மேலோங்கி நிற்கும் .

இதுவே பூர்வ புண்ணியம் ஜீவன ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்று ஜீவன ஸ்தானம் மகர  ராசியாக இருப்பின் , ஜாதகர் திரை துறை சார்ந்த தொழில்கள் அனைத்தும் செய்யும் யோகம் பெற்றவர்  , பொழுது போக்கு விஷயங்களை வைத்து பணம் ஈட்டுவதில் வல்லவராக காணப்படுவார் , கலைத்துறை சம்பந்தபட்ட அனைத்து விஷயங்களையும் நிர்வாகிக்கும் ஆற்றல் ஜாதகர் பெற்றிருப்பார்  , இருப்பினும் நேர்மை மாறாமல் நடந்து கொள்ளும் சுபாவம் ஜாதகருக்கு இயற்கையாக அமைத்திருக்கும் , கலை துறையில் அதிக முதலீடுகளை செய்து அளவில்லா  வருமானத்தை குறுகிய காலங்களில் பெரும் யோகம் ஜாதகருக்கு நிச்சயம் சுய ஜாதகத்தில் அமைந்திருக்கும் , வெளிநாடு , மற்றும் வெளியிடங்களில் சென்று திரை காவியங்களை  படைக்கும் ஆற்றல் ஜாதகருக்கு உண்டு , மேலும் வியாபார யுக்தி ஜாதகருக்கு மற்றவரிடம் இருந்து சற்றே வித்தியாசமாக காணப்படும் , தோல்வி நிலையில் இருக்கும் திரை படங்களை  கூட ஜாதகர் தனது வியாபார யுக்தியினால் மிகப்பெரிய வெற்றியை பெறும் அளவிற்கு செய்யும் ஆற்றல் பெற்றவராக கானப்படுவார் மேலும் இவற்றை நம்பி வருபவர்கள்  அனைவரும் நன்மையே அடைவார்கள் என்பது உறுதி .

மேற்கண்ட பலன்கள் எல்லாம் சுய ஜாதகத்தில் ஜாதகருக்கு சரியான வயதில் பலனை தர வேண்டும் அப்பொழுதுதான் , மேற்கண்ட பலன்கள் நடை முறைக்கு வரும் , ஒரு ஜாதகருக்கு மேற்கண்ட யோக அமைப்புகள்  இருந்தாலும் பலன்கள் திசை புத்தி அந்தரம் சூட்சமத்தில் நடை முறைக்கு வரவில்லை என்றால் நிச்சயம் எவ்வித பலன்களும் நடை பெறாது , எனவே நடப்பு திசை  மேற்கண்ட வீடுகளின் பலனை நடத்தினால் , சம்பந்த பட்ட ஜாதகர் திரை துறையில் சிறந்து விளங்கும் யோகம் நிச்சயம் உண்டு .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969

வெள்ளி, 9 நவம்பர், 2012

எண்கணித முறையில் குழந்தைக்கு பெயர் வைப்பது யோக வாழ்க்கையை தருமா ?



ஐயா வணக்கம்,


பிறந்த ஒரு குழந்தைக்கு பெயர் வைக்கும் முறை பற்றி ஜோதிடம் என்ன சொல்கிறது? தற்கால நடைமுறையில் ஜோதிடர்கள் ஜன்ம நக்ஷத்திரங்களின் நாம எழுத்துக்களை பரிந்துரைக்கிறார்கள்.இது எந்த அளவிற்கு சரியாகும்?ஏனெனின் புராணங்களில் வரும் ராமர்,கிருஷ்ணர் போன்றோர்களுக்கு இந்த முறைப்படி பெயர் வைத்ததாக தெரியவில்லையே மேலும் தர்ம சாஸ்திரங்களும் அவரவர் முன்னோர் அல்லது கடவுளின் பெயரை வைக்குமாறு சொல்கிறது . இதில் எது சரி? மேலும் நேமாலஜி என்ற ஒரு பிரிவே உள்ளது.இது எங்கிருந்து வந்தது? தெளிவுபடுத்தினால் நன்று.

நன்றிகளுடன்,
ஜோதிடப்பித்தன்


வணக்கம் அன்பு நண்பரே !

ஜென்ம நட்சத்திரத்தின் அடிப்படையில் பெயர் வைப்பதும் , பெயர் எண் சாஸ்திரம் அடிப்படையில் பெயர் வைப்பதும் அவரவர் விருப்பத்தை பொறுத்தே , ஆனால் பெயர் ஒன்றே எல்லா வசதி வாய்ப்பினையும் , வெற்றியினையும் தந்துவிடும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை , சில பெயரியல் சாம்ராட்டுகள் சொல்வது போல் பெயரில் சிறு மற்றம் செய்தால் போதும் ,  கூரையை பிய்த்து கொண்டு கொண்டும் என்பதெல்லாம் , முற்றிலும் நகைப்பிற்கு உரியதாகவே  காணப்படுகிறது , இதையும் நம்பிக்கொண்டு மக்கள் அவர்களை நாடி சென்று பொருள் செலவு செய்வதை நினைத்து மன வேதனையே ஏற்ப்படுகிறது , ஒருவருடைய விதியை பெயர் மாற்றிவிடும் என்பதில்  எனக்கு சிறுதும் நம்பிக்கை இல்லை , அதை ஒரு மனிதன் செய்து தருகிறான் என்று மக்கள் செல்வதை பார்க்கும் பொழுது சிரிப்பே வருகிறது.

மக்களுக்கு அல்லது ஒரு தனிபட்ட நபருக்கு  ( புதிய தலைமுறை நபர்களுக்கு ஏற்வாரோ , புதுமையில் விருப்பம் கொண்டவராகவோ இருப்பின் ) பிடித்த மாதிரி பெயரை வைத்து கொள்வதில் எவ்வித தவறும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை ,  ஆனால் பெயரியல் நிபுணர்கள் சொல்வது போல் அந்த பெயர் ஜாதகருக்கு அனைத்து நன்மையையும் வாரி வழங்கும் என்று சொல்வது கொஞ்சம் அதிகமாகவே படுகிறது , எமக்கு தெரிந்தவரை கடவுளின் பெயரை வைப்பதை தவிர்க்க வேண்டும் என்பதே  எனது கருத்து , நல்ல தமிழ் பெயரை வைக்கலாம் , நாம் வைக்கும் பெயரில் ஒரு அர்த்தம் இருப்பது சம்பந்தபட்ட நபருக்கு நலம் தரும் .

முன்னோர்களின் பெயரை வைப்பதில் எவ்வித தீமையும் வர வாய்ப்பில்லை , ஒருவருக்கு நல்ல பெயர் அமைகிறது என்றால் அதற்க்கு காரணம் அவரது சுய ஜாதக அமைப்பில் லக்கினம் மற்றும் இலக்கின அதிபதி மிகவும் நல்ல நிலையில் இருப்பார் என்பதில் ஆச்சரியம் இல்லை , மேலும் பிறந்த குழந்தைக்கு பெயர் வைக்கும் பொழுது அந்த குழந்தையின் ஜாதகத்தில் வலிமையாக இருக்கும் பாவகதிர்க்கு சம்பந்தம் பெற்ற உறவு நிலையில் இருக்கும் நபர் அந்த குழந்தைக்கு பெயரினை தேர்ந்தெடுக்கலாம் , உதரணமாக நான்காம் பாவகம் நல்ல நிலையில் இருந்தால் தாயும் பத்தாம் பாவகம் நல்ல நிலையில் இருந்தால் தகப்பனும் குழந்தைக்கு  பெயரை தேர்ந்தெடுக்கலாம். அப்படி  தேர்ந்தெடுக்கும் பெயர் அந்த குழந்தைக்கு மிகுந்த நன்மையை வாரி வழங்கும் , ஒரு வேலை மேற்க்கண்ட பாவகம் பாதிக்க பட்டு இருந்தால் பெற்றோர்கள் பெயரை தேர்ந்தெடுக்காமல் இருப்பது நலம் தரும் , மேலும் குழந்தையின் ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவகதிர்க்கு உரிமையுள்ள உறவு சம்பந்தபட்ட நபர் பெயரை தேர்ந்தெடுப்பது குழந்தைக்கு யோக பலன்களை வாரி வழங்கும் .  

எது எப்படி என்றாலும் சுய ஜாதகத்தில் என்ன இருக்கிறதோ அதுவே நடை முறையில் பலன் தரும் , ( அதாவது சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் )  எனவே பெயரில் எவ்வித நன்மை தீமையும் வந்துவிட போவதில்லை , எனக்கு தெரிந்து பெயர் மாற்றம் செய்துகொண்டவர்கள் , எவ்வித ராஜயோக பலன்களையும் பெற்றதாக நினைவில்லை , சுய ஜாதகத்தில் என்ன இருக்கிறதோ அந்த பலன்களே நடைமுறையில் நடந்து கொண்டு இருக்கிறது  என்பதே உண்மை .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696