ஞாயிறு, 27 அக்டோபர், 2013

10 பொருத்தம் அமைந்தும் திருமண வாழ்க்கை சிறப்பாக அமையாததிர்க்கு காரணம் என்ன ?



கேள்வி :

திருமணம் செய்வதற்க்கு ஆலோசனை கேட்ட போது ....இரண்டு ஜாதகத்துக்கும் 10 பொருத்தம் உள்ளது.வசிய பொருத்தம் உள்ளது..அருமை பெருமை என்று சொன்னார்கள் ஜோதிடர்கள். அது மட்டும் இல்லாமல் ஆண் ஜாத்கத்தில் 7 வது இடத்தில் சனி உள்ளது பெண் ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் சனி உள்ளது..செம பொருத்தம் என்று சொன்னார்கள்.

கல்யாணம் முடிந்து ஒரு வருடம் ஆகி விட்டது...வசிய பொருத்தம் எல்லாம் ஒரு 60 நாள் தான் வேலை செய்தது. ஏக பட்ட முரண் பாடுகள். வாழ்க்கையே வெறுத்து விட்டது...இத்தனைக்கும் என் சித்தப்பா 5,6 இடங்களில் ஜோதிடம் பார்த்தார், உண்மையில் இரு ஜாதகத்தில் யாரிடம் தான் பிரச்சினை உள்ளது.? தயவு செய்து விளக்கவும்

பதில் :

 பொதுவாக நட்சத்திர பொருத்தம் என்பது இல்லற வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் பரிபூர்ண நலன்களையும் வாரி வழங்குவதில்லை, குறிப்பாக சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் வலிமை பெற்று அமையாத பொழுது, வரன் வதுவின் ஜாதகத்தில்  நட்சத்திர பொருத்தம் 10க்கு 10 அமைந்தாலும் இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைய சிறிதும் வாய்ப்பில்லை, தம்பதியரின் ஜாதக அமைப்பில் இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைய அடிப்படையில் குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் வீடும், களத்திர ஸ்தானம் எனும் ஏழாம் வீடும் வலிமை பெற்ற பாவக தொடர்பை பெற்று மிகவும் நல்ல வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, ( குறிப்பாக திருமணம் நடைபெறும் தருணத்தில் சுய ஜாதகத்திலும் சரி, கோட்சார அமைப்பிலும் சரி ) அது மட்டுமல்ல இல்லற வாழ்க்கையில் இணைந்த பிறகு தம்பதியருக்கு நடைமுறையில் வரும் நவகிரகங்களின்  திசை மற்றும் புத்திகள், இருவருக்கும் சுய ஜாதக அமைப்பில் வலிமை பெற்ற பாவக பலனை  ஏற்று நடத்துவது நடத்துவது தாம்பத்திய வாழ்க்கையில் வெற்றியையும் மிகுந்த யோகத்தை தரும் .

இன்றைய பதிவில் தங்களது ஜாதகத்தையும், தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தையும் இந்த ஆய்வுக்கு எடுத்து கொள்வோம் :

தங்களது ஜாதக நிலை 

தங்களது ஜாதக அமைப்பில் நல்ல நிலையில் இருக்கும் பாவகங்கள் :

2,5,8,11ம் வீடுகள் அதிர்ஷ்டத்தை குறிக்கும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், தங்களது ஜாதக அமைப்பில் நல்ல நிலையில் இருக்கும் பாவகங்கள் ஆகும்.

தங்களது ஜாதக அமைப்பில் பதிக்க பட்ட நிலையில் இருக்கும் பாவகங்கள் :

1,6,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 3,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் அதிக தீய பலன்களை வழங்கும் அமைப்பாக கருதலாம்.

தங்களது ஜாதகத்தில் தற்பொழுது நடக்கும் சுக்கிரன் திசை தரும் பலன்கள் :

4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நன்மையான பலனையே செய்துகொண்டு இருக்கிறது.



தங்களது வாழ்க்கை துணையின் ஜாதக நிலை 

தங்களது வாழ்க்கை துணையின் ஜாதக அமைப்பில் நல்ல நிலையில் இருக்கும் பாவகங்கள் :

1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 2,3,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் ஜாதகத்தில் சிறந்த அமைப்பு.

தங்களது வாழ்க்கை துணையின் ஜாதக அமைப்பில் பதிக்க பட்ட நிலையில் இருக்கும் பாவகங்கள் :

6ம் வீடு எதிரி ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 5,8,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் கடுமையான பாதிப்பை தரும் அமைப்பாக கருதலாம்.

தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் தற்பொழுது நடக்கும் சுக்கிரன் திசை தரும் பலன்கள் :

3,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தருவது சிறப்பான அம்சம், ஆனால் தற்பொழுது நடந்துகொண்டு இருக்கும் கோட்சார பலன்கள் சிறப்பாக இல்லை.



மேற்கண்ட இரண்டு ஜாதக அமைப்பில் தங்களது ஜாதக அமைப்பில் லக்கினம் என்ற பாவகம் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தங்களது வாழ்க்கையில்  மன நிம்மதியை குலைக்கும் விதமான பலன்களை வழங்கும், 6ம் வீடு விரைய பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தேவையில்லாத விஷயங்கள் தங்களுக்கு எதிராக உருவெடுத்து தங்களது மன நிம்மதியை பதம் பார்க்கும், 10ம் வீடு விரைய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜீவன வழியில் இருந்து வரும் இன்னல்களை அதிகரிக்கும், 12ம் வீடு விரைய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது இல்லற வாழ்க்கையையும் அதனால் வரும் பிரச்சனைகளால், மன நிம்மதியை குறைக்கும்.

3,9ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது 200 மடங்கு தீமையை தரும் அமைப்பாக கருதலாம் எடுத்துகாட்டாக, 9ம் பாவக வழியில் இருந்து தேவையில்லாமல் மற்றவர்களிடம் அவ பெயரை பெற்று தரும், 3ம் பாவக வழியில் இருந்து எடுக்கும் முயற்சிகள் யாவும் தோல்வியை தரும் .

தங்களது வாழ்க்கை துணையின் ஜாதக அமைப்பில் 5ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது குல தேவதை சாபத்தையும், திருமண வாழ்க்கையில் நிம்மதி அற்ற நிலையை தரும்.

8ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது தனது வாழ்க்கை துணையின் அமைப்பில் இருந்து வரும் இன்னல்களையும், இழப்புகளையும் தரும்.

11ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது தனது வாழ்க்கையில் வரும் அதிர்ஷ்டங்களை, நல்ல வாய்ப்புகளை தவிர்க்கும் தன்மையை தரும்.

6ம் வீடு எதிரி ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது உடல் ரீதியான பிரச்சனைகளையும், வயிறு சம்பந்தபட்ட தொந்தரவுகளையும் தரும் ( தனது வாழ்க்கை துணையை சிறப்பாக வைத்திருக்க உதவுவது 6ம் பாவகமே, இந்த 6ம் பாவகம் பாதிப்பது நல்லதல்ல )

12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மன நிம்மதியையும், திருமண வாழ்க்கையில் அதிக இன்னல்களையும் தரும் .

தற்பொழுது தங்களது வாழ்க்கை துணையின் ஜாதக அமைப்பில் தற்பொழுது நடக்கும் திசையில், கோட்சார பலன்கள் மிகவும் தீய பலன்களை தந்து கொண்டு இருப்பது நல்லதல்ல இது எதிர் வரும் 06/11/2014 வரையில் நடை முறையில் உள்ளது .

தங்களது இருவரது ஜாதக அமைப்பிலும் முக்கியமான பாவகங்கள் பாதிக்க பட்டு இருப்பது மிகுந்த பாதிப்பை தரும் அமைப்பாக கருதலாம், குறிப்பாக எந்த ஒரு பாவகமும் பாதக ஸ்தான பலனை தருவது 200 மடங்கு தீமையை செய்யும்.

சனியை வைத்தெல்லாம் திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்ய இயலாது, உண்மையில் தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் துலாம் ராசியில் உள்ள 6ம் பாவகத்தில் சனி பகவன் அமர்ந்திருக்கிறார்.

மேற்கண்ட ஜாதகங்களின் முழு பலன்களையும் தெளிவாக தெரிந்து கொள்ளவும், ஜாதக ரீதியான சரியான தீர்வை பெறவும், அலைபேசியில் முன் அனுமதி பெற்று ஜோதிட ஆலோசனை பெற்று கொள்ளுங்கள் .

ஒருவருடைய திருமண வாழ்க்கையை சிறப்பாக அமைத்து வைப்பது 10 பொருத்தம் அல்ல, நல்ல நிலையில் அமைந்திருக்கும் பாவக வலிமையே என்றால் அது மிகையில்லை, நட்சத்திர பொருத்தம் பார்த்து திருமணம் செய்யும் பொழுது இது மாதிரியான பாதிப்புகள் வருவது இயற்கையே, ஜாதகத்தில் பாவக வலிமையை கருத்தில் கொண்டு திருமணம் செய்தால் திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
 jothidadeepam@gmail.com

1 கருத்து: