செவ்வாய், 14 அக்டோபர், 2014

காதலிலும் திருமண வாழ்க்கையிலும் தோல்வியை சந்தித்தித்த ஜாதக அமைப்பு !

  


 காதல் மற்றும் திருமண வாழ்க்கையிலும், தோல்வியை சந்தித்த கிழ்கண்ட ஜாதகி தனது வாழ்க்கையில் பல எதிர்ப்புகளையும், இன்னல்களையும் இதுவரையும் சந்தித்துக்கொண்டு இருப்பதற்கு உண்டான காரணத்தை ஜாதக ரீதியாக இன்றைய பதிவில் சிந்திப்போம் அன்பர்களே ! பொதுவாக ஆண்களின் காதல் தோல்வி என்பது அவர்களின் நண்பர்களுக்கு தெரியும் பொழுது சில ஆறுதல்களும் தேறுதல்களும் ஜாதகருக்கு கிடைக்கும், ஜாதகர் தனது காதல் தோல்வியில் இருந்து மீண்டு வருவதற்கு உண்டான சிறு சந்தர்ப்பமாவது கிடைக்கும், மேற்கண்ட ஜாதகிக்கு அந்த வாய்ப்பும் இல்லை என்பது வருத்தத்திற்கு உரிய ஒன்றாகவே ஜோதிடதீபம் கருதுகிறது.


லக்கினம் : மிதுனம் 
ராசி : மிதுனம் 
நட்சத்திரம் : புனர்பூசம் 2ம் பாதம் 

முதலில் ஜாதகி தனது காதலில் தோல்வி அடைந்ததிற்கு காரணம் என்ன? என்பதை ஆய்விற்கு எடுத்துகொள்வோம், ஜாதகியின் லக்கினம் மிதுனம், மிதுனம்  உபய லக்கினம் என்பதால் இதற்க்கு பாதக ஸ்தானம் 7ம் பாவகம் இந்த பாதக ஸ்தானமான 7ம் பாவக தொடர்பை குடும்ப ஸ்தானமான 2ம் பாவகமும், களத்திர ஸ்தானமான 7ம் பாவகமும் பெறுவது ஜாதகியின் காதல் தோல்விக்கு அதிமுக்கிய காரணமாக அமைந்தது, பொதுவாக பெண்களின் ஜாதகத்தில் 2,7ம் பாவகங்கள் பாதக ஸ்தான தொடர்பை பெறுவது அவ்வளவு, நல்லதல்ல அப்படிப்பட்ட ஜாதக அமைப்பை பெற்றவர்கள், தனது வாழ்க்கையை தானே நிர்ணயம் செய்வது கண்ணை கட்டிக்கொண்டு கிணற்றில் விழுவதற்கு ஒப்பானதாக அமைந்துவிடும்.

 ஜாதகி மேற்சொன்ன தவறையே செய்தார், இதன் காரணமாக குறுகிய காலத்தில் ஜாதகி காதலில் விழுந்து தவறான ஒரு நபரை தேர்ந்தெடுத்து தனது வாழ்க்கைக்கு தானே குழிபறித்து கொண்டார், ஆதாவது விபரம் தெரியாத வயதில் ஒருவரை நம்பி வீட்டை விட்டு வெளியேறி அவருடன் சிலமாதங்கள் வாழ்க்கையை மேற்கொண்டார், சில நாட்களிலேயே அது கசந்துவிட மீண்டும் தான் பிறந்த இடத்தை நோக்கியே வரவேண்டிய சூழ்நிலையை ஜாதகிக்கு தந்தது, வந்த பிறகும் ஜாதகியின் வாழ்க்கையில் விதி விளையாட ஆரம்பித்தது, ஜாதகியின் விருப்பம் அறியாமலே ஜாதகிக்கு எந்த ஒரு வாய்ப்பையும் தராமல் குறுகிய காலத்தில் அவர்களது உறவினர் ஒருவரை அவசர கதியில் ஜாதகிக்கு திருமணம் செய்து வைத்தனர், இந்த திருமண  வாழ்க்கையிலும் ஜாதகி சிறப்பாக வாழ இயலவில்லை, முதலில் ஜாதகியே தனது வாழ்க்கையை கெடுத்துகொண்டார்.

இரண்டாவதாக பெரியவர்களால் அவசர கதியில் செய்த திருமண வாழ்க்கையில் வந்த கணவனின் பழக்கவழக்கங்கள் காலம் செல்ல செல்லவே அனைவருக்கும் தெரிய ஆரம்பித்தது, பெரியவர்கள் தேர்ந்தெடுத்த வாழ்க்கை துணையான கணவன் ஒரு குடி நோயாளி என்பதும், அனைத்து தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையானவன் என்பதும், இரண்டாவது திருமண வாழ்க்கை சிலகாலங்களியே  மணமுறிவுக்கு வித்திட்டது, இந்த நிலையில் ஜாதகிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து இருப்பது ஜாதகியை மீளா துயரத்தில் ஆழ்த்தியது, அடிப்படையில் இங்கே ஜாதகியின் குடும்ப ஸ்தானமும், களத்திர ஸ்தானமும் ஜாதகியின் வாழ்க்கையை வெகுவாக பதம் பார்த்ததிற்கு முக்கிய காரணம், மேற்கண்ட பாவகங்கள் பாதக ஸ்தான தொடர்பை பெறுவதும், ஜாதகிக்கு தற்பொழுது நடைபெறும் சனி திசை பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவதே என்றால் அது மிகையில்லை அன்பர்களே!

ஜாதகிக்கு குடும்ப வாழ்க்கை சரியாக அமையாததிர்க்கு, தானும் பெரியோர்களும் தேர்ந்தெடுத்த இரண்டு வாழ்க்கை துணையும் ஜாதகிக்கு நல்ல வாழ்க்கையை தர இயலாத காரணம் என்ன? என்பதை இனி பார்ப்போம் அன்பர்களே , ஜாதகியின் லக்கினத்தின் அடிப்படையில் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகம்  பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றதும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் வீடான ரிஷபம் விரைய ஸ்தானம் மற்றும் மனநிம்மதியினமையை குறிக்கும் 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றது ஜாதகியின் குடும்ப வாழ்க்கையை வெகுவாக கெடுத்தது, குடும்பத்தில் மன நிம்மதியற்ற வாழ்க்கையை தந்தது, குடும்ப வாழ்க்கை என்பது விரைவில் பிரிவை தந்ததிற்கும் இதுவே முக்கிய காரணம்.

மேலும் ஜாதகியின் களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகமும் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றதும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் வீடான துலாம் ராசி திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகமான  8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் ஜாதகிக்கு அமைந்த இரண்டு வாழ்க்கை துணையும் சிறிதும் பொருத்தம் இல்லாத வண்ணம் வாழ்க்கையில் இணைத்து வைத்தது எனலாம், மேலும் இரு வாழ்க்கை துணை வழியில் இருந்தும் ஜாதகி கடுமையான துன்பங்களையும், மனோரீதியான போராட்டங்களையும் சந்திக்கும் சூழ்நிலையை தந்தது, ஜாதகியின் சுய ஜாதகத்தில் நடைமுறையில் உள்ள சனி திசையும் பாதக ஸ்தான பலனையே வலுத்து தருவதால், ஜாதகி சனிபகவான் தரும் பாதக ஸ்தான பலனில் இருந்து தப்பிக்க இயலவில்லை, காதலில் தோல்வியும், திருமண வாழ்க்கையில் திடீர் பிரிவையும் சந்திக்கும் சூழ்நிலையை தந்தது, மேற்கண்ட ஜாதகம் காதல் தோல்விக்கும், திருமண வாழ்க்கையில் ஏற்ப்படும் பிரிவுக்கும் சிறந்த உதாரணமாக அமைந்ததிர்க்கு இறை அருளே பதில் சொல்ல வேண்டும்.

ஜாதகியின் சுய ஜாதகத்தில் லக்கினம் மற்றும் ஜீவனம் எனும் 1,10ம் பாவகங்களை தவிர மற்ற அனைத்து பாவகமும் கடுமையாக பாதிக்கபட்டு இருப்பது விதி பயனே, இருப்பினும் ஜாதகி லக்கினம் மற்றும் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று இருப்பது ஜாதகி நல்லவர் என்பதும், ஜாதகி ஏதாவது ஒரு தொழிலை மேற்கொண்டால் அதிர்ஷ்டம் அவர் பக்கம் இருக்கும் என்பதும், செய்யும் தொழில் வெற்றி என்பது அபரிவிதமானதாக இருக்கும் என்பது கவனிக்க பட வேண்டிய விஷயம், ஒருவேளை இனி வரும் காலங்களில் ஜாதகியோ அல்லது ஜாதகியின் உறவினர்களோ திருமண செய்து வைக்கலாம் என்று முடிவு செய்யும் பொழுது, மன மகனின் சுய ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானங்கள் மிகுந்த வலிமையுடன் இருக்கும் ஜாதகமாக தேர்வு செய்து வாழ்க்கை அமைத்து தருவது ஜாதகியின் வாழ்க்கையில் சகல நலன்களையும் வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக