ஞாயிறு, 5 ஏப்ரல், 2015

சாயா ( ராகு கேது ) கிரகங்களுடன் சேர்ந்த கிரகங்கள் வழங்கும் யோகபலன்கள் !


 சாயா கிரகங்களுடன் சேர்க்கை பெரும் கிரகங்கள் பெரும்பாலும் தீமையான பலன்களையே தரும் என்பது பல ஜோதிடர்களின் கருத்தாக உள்ளது, மேலும் ராகு கேது கிரகங்களுடன் தொடர்பு பெரும் கிரகங்கள் ஜாதகருக்கு அவயோக பலன்களை தருவதில் எவ்வித விதிவிலக்கும் கிடையாது என்பது ஒரு சாராரின் கருத்து, ராகு கேதுவுடன் சேர்ந்த கிரகங்கள் வழங்கும் பலன்களை நிர்ணயம் செய்யும் முன், சாயா கிரகங்கள் அமர்ந்த பாவக நிலையை கருத்தில் கொள்வது மிக துல்லியமான பலன்களை சரியாக சொல்ல உதவும், ஏனெனில் சாயா கிரகங்கள் தான் அமர்ந்த பாவகத்தின் தன்மைக்கு ஏற்ப்பவே, யோக அவயோக பலன்களை வழங்குவார்கள் என்பது கவனிக்க தக்கது, இதை ஒரு உதாரண ஜாதகம் கொண்டு காண்போம்.



லக்கினம் : சிம்மம் 
ராசி : சிம்மம் 
நட்சத்திரம் : மகம் 3ம் பாதம் 

ஜாதகி சிம்ம லக்கினம் லக்கினத்திற்கு 3,9ம் பாவகங்கள் முறையே சாயா கிரகங்களான ராகு கேது அமர்ந்திருப்பது சிறப்பான யோக நிலையை தரும் அமைப்பு, ஜாதகிக்கு விருச்சிகத்தில் 3ம் பாவகத்தில் அமர்ந்த ராகு பகவான் திடீர் அதிர்ஷ்டங்களையும், சிறந்த வாய்ப்புகளையும் வாரி வழங்குகிறார், தான் நினைக்கும் காரியங்களை நினைத்த வண்ணம் நிறைவேறும் யோகத்தை தருகிறார், விருச்சிகம் ஸ்திர  நீர் ராசியாக அமைவதால், ஜாதகியின் நிலையான மன உறுதியையும், சரியான முடிவுகளை எடுக்கும் தன்மையை வாரி வழங்குவது வரவேற்க தக்கது, மேலும் ஜாதகி விளையாட்டு துறையிலும், வியாபர துறையிலும் சிறந்து விளங்கும் வல்லமையை  தருவது ராகு பகவானே, 3ம் பாவகத்தில் அமர்ந்த ராகு பகவான் ஜாதகிக்கு 100% யோக பலன்களை தான் அமர்ந்த பாவக வழியில் இருந்து சிறப்பாக தருகிறார் என்பது இந்த ஜாதகிக்கு கிடைத்த வரபிரசாதம் என்றே சொல்லாம், மேலும் ஜாதகிக்கு சகோதர வழியில் இருந்து 100% நன்மைகள் நடைபெறும் என்பது கூடுதல் யோகமாக கருதலாம்.

9ம் பாவகத்தில் ரிஷப ராசியில் அமர்ந்த கேது பகவானுடன் சேர்ந்த கிரகங்கள் சூரியன் மற்றும் புதன் எனும் இரண்டு கிரகங்களின் தன்மையை தானே ஏற்று கேது பகவானே பலன்களை வாரி வழங்குவது கண்கூடான விஷயம், ( சுக்கிரன் ரிஷபத்தில் உள்ள 10ம் பாவகத்தில் அமர்ந்திர்ருக்கிறார் ) மேலும் கேது அமர்ந்திருக்கும் 9ம் பாவகத்தை 100% வலிமை பெற செய்து சூரியன் மற்றும் புதன் கிரகங்களின் தன்மையை தானே ஏற்று நடத்துவது ஜாதகியை கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் தன்மையை தரும், படிப்பில் முதல் இடத்தை ஜாதகி மிக எளிதாக கை பற்றுவார், குறிப்பாக ஜாதகியின் அறிவு திறன் மற்றவர்கள் அனைரையும் பிரமிக்க வைக்கும், தான் கற்ற கல்வியின் மூலம் அபரிவிதமான வருமான வாய்ப்பை ஜாதகி தங்குதடையின்றி  பெறுவார், சமுதாயத்தில் பெரியவர்கள் போற்றும் குணவதியாக  திகழும் தன்மையை கேது பகவான் வழங்குவது கவனிக்க தக்கது.

9ம் பாவகத்தில் அமர்ந்த சூரியன்,புதன் இரு கிரகங்களின் தன்மையை கேது பகவானே ஏற்று நடத்துவதால், சூரியன் அமைப்பில் இருந்து ஜாதகி அதிகார பதவிகளையும், நிர்வாகத்திலும் சிறந்து விளங்கும் யோகம் உண்டு, புதன் அமைப்பில் இருந்து புத்தி கூர்மையான செயல்பாடுகள் மூலம் தான் எடுத்த காரியங்களை செவ்வனே செய்து முடிக்கும் தன்மையை தரும், ஜாதகியுடன் சேரும் அன்பர்கள் அனைவரும் மிகசிறந்த பெரிய மனிதர்களும், கல்வியாளர்களும், ஆன்மீக பெரியவர்களாகவும் திகழ்வார்கள், இவர்களது ஆசியுடன் ஜாதகியின் வாழ்க்கை மிக மிக உயர்ந்த நிலைக்கு எடுத்து செல்லும் என்பது கேது பகவானால் நிகழும் யோக அமைப்பே என்றால் அது மிகையில்லை, லக்கினாதிபதி 2,11க்கு  உடையவர்களின் ( பாரம்பரிய முறைப்படி) சேர்க்கையை பெற்ற கேது பகவான் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்தில் வலிமை பெற்று அமர்ந்ததால் மேற்கண்ட யோக பலன்கள் ஜாதகிக்கு தங்குதடையின்றி நடைபெறும் என்பது மட்டும் உறுதி.

குறிப்பு :

எந்த ஒரு ஜாதகத்திலும் சாயா கிரகங்களான ராகு கேதுவுடன் சேர்ந்த கிரகங்கள் வழங்கும் பலனை நிர்ணயம் செய்யும் பொழுது, ராகுகேது ஜாதகருக்கு லக்கினத்தில் இருந்து எந்த பாவகத்தில் அமர்ந்து இருக்கின்றனர், அமர்ந்த பாவகத்திர்க்கு யோக பலனை தருகின்றனரா ? அவயோக பலனை தருகின்றனரா ? என்பதை தெளிவாக தெரிந்து கொண்டு பலன் காண்பதே,  குறிப்பிட்ட ஜாதகருக்கு சாயா கிரகங்களுடன் சேர்ந்த கிரகங்கள் தரும் பலனை மிக துல்லியமாக கணிதம் செய்ய இயலும், பொதுவாக ராகுகேதுவுடன் சேர்ந்த கிரகங்கள் தீமையை செய்யும் என்பது முற்றிலும் ஜோதிட கணித உண்மைக்கு புறம்பான விஷயமாகவே " ஜோதிடதீபம் " கருதுகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக