புதன், 19 அக்டோபர், 2016

காலசர்ப்ப தோஷம் மற்றும் ராகு கேது தோஷ பரிகாரம் !


சாய கிரகங்களான ராகுகேது ஒருவரது சுய ஜாதகத்தில் பாதிக்கப்படுவது, சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சிறு வயது முதல், வாழ்வின் இறுதிவரையிலான காலகட்டம் வரை அதிக அளவில் இன்னல்களை தரும் அமைப்பாகும், குறிப்பாக ஒரு ஜாதகரின் வாழ்க்கையில் யோகப்பலன்களையும், அவயோகபலன்களையும் நடைமுறைக்கு கொண்டுவரும் அன்பர்களின் சந்திப்பை நிகழ்த்துவது சாய கிரகங்களான ராகுகேது என்றால் அது மிகையில், சுய ஜாதகத்தில் சாய கிரகங்கள் வலிமையுடன் இருப்பின் அவருடன்  சேர்க்கை பெரும் நண்பர்கள், கூட்டாளிகள், அறிமுகம் இல்லாத புதிய நபர்கள், வாழ்க்கை துணை, பொதுமக்கள், வேலையாட்கள், வெளியூர் அல்லது வெளிநாடு சார்ந்த அன்பர்கள் அனைவரும் ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளையும் வாழ்க்கையில் சிறப்பான நல்ல திருப்பத்தையும் வாரி வழங்கும் நபர்களாக திகழ்வார்கள், சுய ஜாதகத்தில் சாய கிரகங்கள் வலிமை அற்று இருப்பின் மேற்கண்ட பலாபலன்களுக்கு நேர் எதிராக அமைந்துவிடும்.

ஜாதகர் தமது வாழ்க்கையில் சந்திக்கும் அன்பர்கள் அனைவராலும் இன்னல்களையும் துன்பங்களையும் சந்திக்கும் சூழ்நிலைக்கு ஆளாக்கும், உறவுகளுடனும் சுமூக போக்கை ஜாதகர் கையாள முடியாது, நல்ல நண்பர்கள் ஜாதகருக்கு கிடைப்பது அரிது, ஜாதகருக்கு அறிமுகமாகும் அன்பர்கள் அனைவரின் வழியில் இருந்தும் துன்பங்களையும் இன்னல்களையும் சந்திக்கும் நிலைக்கு தள்ளப்படுவர், இதனால் ஜாதகரின் முன்னேற்றம் வெகுவாக பாதிக்கப்படும், குறிப்பாக ராகு கேது வலிமை அற்று குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானங்களில் இருப்பின் ஜாதகரின் வாழ்க்கையில் இல்லற துணை ஜாதகரை வெகுவான பாதிப்புகளுக்கு ஆளாக்கும் சூழ்நிலையை தரும், குடும்ப ஸ்தானம் சாய கிரங்கங்களால் பாதிக்கப்படும் பொழுது ஜாதகரின் வாழ்க்கை துணை, ஜாதகருக்கு தனது வாக்கு மற்றும் குடும்ப வாழ்க்கையில் இருந்து இன்னல்களை தரகூடும், வருமானம் வெகுவாக பாதிக்கும், களத்திர ஸ்தானம் சாய கிரங்கங்களால் பாதிக்கப்படும் பொழுது ஜாதகரின் வாழ்க்கை துணை ஜாதகருக்கு பொருத்தமற்று அமைவதால், அவர் வழியில் இருந்து ஜாதகர் வெகுவான இன்னல்களை சந்திக்கும் நிலைக்கு ஆளாக்கும், மேலும் களத்திர ஸ்தானம் ஜாதகருடன் சேரும் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளை குறிப்பதால், நல்ல நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் அமைவது சிரமம், மேலும் மேற்கண்ட நபர்களால் ஜாதகர் பெரும் இன்னல்களுக்கு ஓர் அளவு என்பதே இருக்காது, ஜாதகரின் முன்னேற்றம் வெகுவாக பாதிக்கப்படும்.

எனவே எந்த ஒரு ஜாதகத்திலும் சாயகிரகங்கள் என்று அழைக்கப்படும் ராகு கேது வலிமை அற்று இருப்பது ஜாதகருக்கு உகந்தது அல்ல, மேலும் 2,5,7 ம் பாவகங்களின் அமர்ந்து வலிமை அற்று ஜாதகருக்கு இன்னல்கள் தரும் அமைப்பில் இருப்பது ஜாதகரின் வாழ்க்கையில் கடுமையான பாதிப்புகளை வாரி வழங்கிவிடும், மேலும் அந்த பாதிப்பில் இருந்து ஜாதகர் விடுபடுவது சற்று கடினமான விஷயமாகும், 2,5,7ம் வீடுகள் வழியில் இருந்து ஜாதகர் தனது வாழ்க்கையில் நல்ல வருமானம், குடும்பம், இனிமையான பேச்சு திறன், சேமிப்பு மற்றும் இல்லற வாழ்க்கையில் இன்பம் என்ற அமைப்பிலும், தான் கற்ற கல்வி, கல்வி வழியில் இருந்து ஜாதகர் பெற்ற அறிவு, நல்ல பூர்வீகம், நிறைந்த அறிவு திறன், மற்றவர்களின் உதவி, நல்ல குழந்தைகள், தமக்கு வரும் இன்னல்களில் இருந்து விடுதலை பெரும் யோகம், அனைத்தையும் சாதிக்கும் வல்லமை என்ற அமைப்பிலும், நல்ல நண்பர்கள், பொருத்தமான  வாழ்க்கை துணை, சிறந்த கூட்டாளிகள் என்ற அமைப்பில் யோக பலன்களை வாரி வழங்கும் எனவே மேற்கண்ட பாவகங்கள் மிக வலிமையுடன் இருப்பது ஜாதகருக்கு மிகுந்த யோகங்களை வழங்கும், மேற்கண்ட பாவகங்கள் பாதிக்கப்படும் பொழுது ஜாதகர் இன்னல்களையும், மேற்கண்ட  பாவகங்கள் ராகுகேது எனும் சாயகிரகங்களால் பாதிக்கப்படும் பொழுது கடுமையான பாதிப்புகளையும் இன்னல்களையும் சந்திக்கும் சூழ்நிலையை ஜாதகருக்கு வழங்கும்.

மேற்கண்ட சாயகிரகங்களின் பாதிப்புகளில் இருந்து விடுபட ஜாதகர் தனது பெற்றோர்களின் பெற்றோர்களுக்கு ( தாய் வழி தாய்தந்தையர், தகப்பன் வழி தாய் தந்தையர் ) தம்மால் இயன்ற உதவிகளை செய்வதே ( வஸ்த்திர தானம், பொருள் தானம், அவர்களின் ஆசிர்வாதம் பெறுவதற்கு உண்டான வாய்ப்புகளை ஜாதகரே முன் வந்து ஏற்று கொண்டு செயல்படுதல்) சாலச்சிறந்தது, மேலும் அவர்களுக்கு உண்டான  உணவு,ஆடை,இருப்பிடம் ஆகியவற்றை சிறப்பாக செய்து கொடுப்பது பாதிக்கப்பட்ட சாயாகிரகங்களின் தாக்கத்தில் இருந்து ஜாதகரை மீட்டு எடுக்கும், மேற்கண்ட வாய்ப்பை இழந்தவர்கள், தம்மால் இயன்ற அளவு முதியோர் ஆதரவற்ற  அன்பர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை பிரதிபலன்  பார்க்காமல் செய்யலாம், சாய கிரகங்களின் ஜீவகாந்த அலைகள் அதிக அளவில் வெளிப்படும் திருத்தலங்களான, திரு காலகஸ்த்தி, திருநாகேஷ்வரம், கீழப்பெரும்பள்ளம், தம்பிக்கலை அய்யன் கோவில் போன்ற இடங்களுக்கு சென்று பச்சை கற்ப்பூர அபிஷேகம் செய்து  வழிபடலாம், மேற்கண்ட கோவில் வழிபாடு செய்வதே தனது பாட்டன் பாட்டி, அப்பிச்சி அம்மாயி ஆகியோருடன் ஜாதகர் நெருக்கமான பாசத்தை பகிர்ந்து  கொண்டு, சாய கிரகங்களின் வழியில் இருந்து வரும் இன்னல்களில் இருந்து விடுபடவே அன்றி,  பரிகாரம் மட்டுமே ஜாதகருக்கு நன்மையை வழங்கி விடும் என்ற தவறான கருத்தை விதைக்க அல்ல என்பதை அனைவரும் கருத்தில்  கொள்ளவும் அன்பர்களே!

மேலும் சுய ஜாதகத்தில் சாயகிரகங்கள் பாதிக்கப்பட்ட பாவக வழியிலான உறவுகளுக்கு உதவிகளை செய்து ஜாதகர், சாய கிரகங்களின் பாதிப்பில் இருந்து விடுபடலாம், உதாரணமாக சாயாகிரகங்கள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்தை பாதிக்க செய்யும் பொழுது பெற்ற தாய்க்கு சேவைகளை செய்து சுப யோகங்களை பெறலாம், ஜீவன ஸ்தானமான 10ம் பாவத்தை பாதிக்க செய்யும் பொழுது பெற்ற தந்தைக்கு சேவைகளை செய்து சுபயோகங்களை பெறலாம், பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவத்தை பாதிக்க செய்யும் பொழுது தனது குழந்தைகளுக்கும், குல தேவதைக்கும் சேவைகள் செய்து நன்மைகளையும் யோகங்களையும் பெறலாம், ஒருவர் சுய ஜாதகத்தில் சாய கிரகங்கள் பாதிக்கப்படும் பொழுது, பாதிக்கப்பட்ட பாவக வழியிலான உறவுகள் வழியில் துண்டிப்பையும், தொடர்பு இனிமையையும் தரும், இதை தெளிவாக உணர்ந்து ஜாதகர் மேற்கண்ட கோவில்களுக்கு ஜாதகர் சென்று சர்ப்பசாந்தி பரிகாரம் மேற்கொள்ளும் பொழுது  பாதிக்கப்பட்ட பாவக வழியிலான உறவுகள் தொடர்பையும், அவர்களின் மூலம் நன்மையையும் பெரும் நிலையை தரும், எனவே சுய ஜாதகத்தில் சாய கிரகங்களின் வலிமையை தெளிவாக உணர்ந்து நலம் பெறுவது அவசியமாகிறது.

சுய ஜாதகத்தில் சாய கிரகங்கள் வலிமையுடன் இருப்பின், தான் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு யோகங்களையும் நன்மைகளையும் வாரி வழங்கும், இந்த அமைப்பை பெற்ற ஜாதகர்கள் யாதொரு பரிகாரமும் செய்ய தேவையில்லை, அதாவது சாய கிரகங்கள் 1,2.5,6,7,8,12ம் பாவகங்களில் அமர்ந்து இருப்பினும், அமர்ந்த பாவகத்திற்கு வலிமை சேர்க்கும் விதத்தில் இருப்பின் மேற்கண்ட பாவக வழியில் இருந்து நன்மைகளும் யோகங்களுமே நடைமுறைக்கு வரும் என்பதை கருத்தில் கொள்க, சாய கிரகங்கள் 1,2.5,6,7,8,12ம் பாவகங்களில் அமர்ந்து அந்த பாவகத்தை பாதிக்க செய்யும் பொழுதே மேற்கண்ட பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு  இன்னல்களும் அவயோகங்களும் நடைமுறைக்கு வரும், அப்படி பட்ட ஜாதக அமைப்பை பெற்றவர்கள் மட்டுமே மேற்கண்ட பரிகாரங்களை மேற்கொண்டு வாழ்க்கையில் சகல நலன்களும் பெறுக.


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக