ஞாயிறு, 18 டிசம்பர், 2016

சனி பெயர்ச்சி பலன்கள் ( 2017 - 2020 ) லக்கினம் ரிஷபம்!


  சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் என்று வர்ணிக்கப்படும் இலக்கின பாவகாத்திற்க்கே முதல் உரிமை உண்டு, மேலும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் சுய ஜாதகத்திற்கு பலன் காணும் பொழுது துல்லியமான பலாபலன்களை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக தெளிவாக கூற இயலும், எனவே நவ கிரகங்களின் பெயர்ச்சியை சுய ஜாதக  பாவக வலிமையின் அடிப்படையில் கணிதம் செய்து பார்க்கும் பொழுது சம்பந்தம் பட்ட ஜாதகருக்கு நவ கிரகங்களின் பெயர்ச்சியினால் வரும் நன்மை தீமை பலாபலன்களை பற்றி துல்லியமாக கணிதம் செய்ய இயலும், ( 2017 முதல் 2020 வரை )  கால புருஷ தத்துவத்திற்கு பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான்,  தனது சஞ்சார நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு தரும் யோக அவயோக நிகழ்வுகளை பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

ரிஷப லக்கினம் :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு இரண்டாம் ராசியான ரிஷப ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, இந்த சனி பெயர்ச்சி, ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார், சஞ்சாரம் செய்யும் இரண்டறை வருட காலத்திற்கு சஞ்சார நிலையில் இருந்தும், 6,7,10 என்ற திருஷ்டி நிலையில் இருந்தும், மேஷ லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலன்களை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், பொறுமையின் சிகரமாக விளங்கும் ரிஷப லக்கின அன்பர்களுக்கு, இதுவரை களத்திர பாவகத்தில் சஞ்சாரம் செய்த சனி பகவான் தங்களுக்கு மிகுந்த அளவில் இன்னல்களை கடந்த காலங்களில் வழங்கி இருக்க கூடும், குறிப்பாக வாழ்க்கை துணை, எதிர்ப்பால் இனம், பொதுமக்கள் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் என்ற வகையில் இன்னல்களை தந்து இருக்க அதிக வாய்ப்பு உண்டு, தற்போழுது ஆயுள் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் சனிபகவான் தங்களுக்கு முழு முதல் யோகங்களை நல்கும் வல்லமையை பெறுவதால் யாதொரு துன்பமும் நிகழ வாய்ப்பு இல்லை மேலும், ஜீவன ஸ்தான அதிபதி தனது பாவகத்திற்கு 11ல் சஞ்சாரம் செய்வது அளவில்லா யோகங்களை வாரி வழங்கும் அமைப்பை தரும், இது வரை தொழில் மற்றும் ஜீவன வழியில் இன்னல்களை சந்தித்து கொண்டு இருந்த அன்பர்களுக்கு, அளவில்லா யோகங்களை வாரி வழங்குவர், கவுரவம் மற்றும் சுய மரியாதை அதிகரிக்கும், தொழில் வளர்ச்சி என்பது மிக பெரிய அளவில் அமையும், வேலைவாய்ப்பு அற்ற அன்பர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி தன்னிறைவான ஜீவன முன்னேற்றத்தை வாரி வழங்கும், திடீர் முன்னேற்றம் மற்றும் அதிர்ஷ்டங்கள் தங்களை தேடிவரும், சமூகத்தில் நற்பெயரும் அந்தஸ்தும் அதிகரிக்கும், பொதுவாழ்க்கையில் உள்ள அன்பர்களுக்கு ஏற்றமிகு யோககாலமாக இந்த சனி பெயர்ச்சி அமையும், தடைபெற்ற காரியங்கள் யாவும் தங்களுக்கு தடையின்றி நடைபெறும், தெளிவான சிந்தனையும், திட்டமிட்ட செயல்பாடுகளும், தங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய நன்மைகளை வாரி வழங்கும், வாழ்க்கை துணை வழியில் இருந்து பெரிய சொத்துக்களும், தனசேர்க்கையும் வந்து சேரும், வாழ்க்கை துணை, உறவுகள், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியில் இருந்து வரும் ஆதரவு தங்களின் வாழ்க்கையில் எதிர்பாராத சுகபோகங்களை வாரி வழங்கும், தங்களின் வாழ்க்கையை மதிப்பு மிக்கதாக மாற்றும் வல்லமை இந்த சனி பெயர்ச்சிக்கு உண்டு என்பதை நினைத்து மகிழ்ச்சி கொள்ளலாம்.

1ம் பாவகத்தை தனது 6ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் (ரிஷபம் ராசி மற்றும் சுக்கிரன் ) ஒரே வர்க்கம் என்பதனால் ரிஷப லக்கின அன்பர்களுக்கு, மிதம்மிஞ்சிய கடமை உணர்வை வழங்குவார், பொறுப்புணர்வுடன் செயல்பட்டு அனைத்து காரியங்களிலும் வெற்றியை பெரும் யோகத்தை நல்குவார், உடல் ஆரோக்கியம், மன நலம் மேம்படும், புதிய சிந்தனை மற்றும் புதிய யுக்திகள் தங்களின் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்யும் , சுய மரியாதை, புகழ் கீர்த்தி என தங்களின் பெயருக்கு அதிக வலு சேர்க்கும், தன்னம்பிக்கை அதிகரிக்கும், விழிப்புணர்வு மற்றும் சுறுசுறுப்பு  தங்களின் முன்னேற்றத்தை உறுதி செய்யும், பண புழக்கம் அதிகரிக்கும், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும், உறவுகள் வழியில் தன உதவிகளையும் பெரிய அளவில் கிடைக்க பெரும், தங்களின் வார்த்தைகளுக்கு நல்ல மதிப்பு மரியாதை இருக்கும், வாக்கு வன்மை அதிகரிப்பதால் அனைவரிடமும் நன்மதிப்பு உண்டாகும், திடீர் திருமணம் நடைபெற வாய்ப்பு அதிகம் உண்டு என்பதால், சுப செலவுகள் அதிக அளவில் ஏற்படக்கூடும், கல்வி காலங்களில் உள்ள மாணவ மாணவியருக்கு சிறப்பான திடீர் வெற்றிகளை வாரி வழங்கும், புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும், புதிதாக துவங்கும் தொழில் வழியில் இருந்து நல்ல  வருமான வாய்ப்புகள் வந்து சேரும், உறவுகள் வழியில் இருந்து ஒற்றுமையும், உதவிகளும் தேடிவரும், தங்களின் ஆசைகள் யாவும் திடீரென நிறைவேறும், ஆன்மீக பெரியோர்களின் ஆசிர்வாதம் தங்களின் புகழ் மிக்க யோக வாழ்க்கையை சிறப்படைய செய்யும், பல புண்ணிய திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகம் உண்டாகும்.

2ம் பாவகத்தை தனது  7ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் (மிதுன ராசி மற்றும் புதன் )  ஒரே வர்க்கம் என்பதனால் ரிஷப லக்கின அன்பர்களுக்கு, கை நிறைவான வருமானங்களை வாரி வழங்குவர், வியாபர விருத்தி எதிர்பாராத யோகங்களை நல்கும், தனிப்பட்ட தேவைகள் யாவும் நிறைவேறும், அதிக செல்வ சேர்க்கை, சௌபாக்கியம் தேடிவரும், எதிர்ப்புகள் அனைத்தும் களைந்து தங்களின் வாழ்க்கையில் வெற்றிகளை வாரி குவிக்கும் வாய்ப்புகளை இந்த சனி பெயர்ச்சி நல்கும், குறிப்பாக தரகு, கமிஷன், ஏஜென்ட் போன்ற விஷயங்களில் ஜீவனம் செய்யும் அன்பர்களுக்கு குறைவில்லா  வருமான வாய்ப்புகளை வாரி வழங்குவார், அறிவார்ந்த செயல்களில் ஈடுபாடும், ஆர்வமும் அதிகரிக்கும், புதிய கண்டுபிடிப்புகள் மூலம் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களை சந்திக்கும் யோக காலமாக கருதலாம் , அனைவரிடத்திலும் சகஜமாக பழகும் யோகத்தை நல்கும், அடிப்படையில் இருந்து தங்களின் ஜீவன வாழ்க்கை மாற்றம் தரும், தேர்வு, தேர்தல், போட்டி பந்தயங்கள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி உண்டாகும், திருமண தடைகளை சந்தித்து கொண்டு இருந்த அன்பர்களுக்கு நல்லதொரு இடத்தில் இருந்து வாழ்க்கை துணை அமையும், பொதுமக்கள் ஆதரவு தங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை வாரி வழங்கும், செய்யும் செயல்கள் யாவிலும் வெற்றியே உண்டாகும், திரை துறை, கலை துறையில் உள்ள  அன்பர்களுக்கு ஏற்றமிகு யோக வாழ்க்கையை இந்த சனி பெயர்ச்சி நல்கும் , தெளிவான சிந்தனையுடன் வரும் நல்ல வாய்ப்புகளை ரிஷப லக்கின  அன்பர்கள் அனைவரும் பெற்று நலம் பெற வேண்டிய நேரம் இது என்றால்  அது மிகையில்லை.

5ம் பாவகத்தை தனது  10ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் (கன்னி ராசி மற்றும் புதன் )  ஒரே வர்க்கம் என்பதனால் ரிஷப லக்கின அன்பர்களுக்கு சிறு சிறு நன்மைகளை தந்த போதிலும், புத்திர ஸ்தான வழியில் இருந்து கடுமையான இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும், குறிப்பாக தங்களின் குழந்தைகள் மற்றும் வாரிசுகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை காட்டவேண்டிய நேரமிது, அவர்களின் ஒவ்வொரு அசைவிலும் தங்களின் கவனம் மிக அதிகம் இருப்பது நல்லது, அவர்களுக்கு வரும் உடல் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்கு  உடனடி தீர்வு காணவில்லை எனில் தங்களுக்கு பொருள் இழப்பும், மன நிம்மதியும் வெகுவாக பாதிக்கும், எனவே இந்த சனி பெயர்ச்சி காலத்தில் தங்களது குல தேவதைக்கு செய்ய வேண்டிய முறைகளை சிறப்பாக செய்து, தங்களுக்கும் தங்களது குழந்தைகளுக்கும் வர இருக்கும் இன்னல்களில் இருந்து விடுபட " ஜோதிடதீபம் " அறிவுறுத்துகிறது, மேலும் தங்களின் சிந்தனை ஆற்றல்  வெகுவாக குறையும் என்பதாலும், சோம்பேறித்தனம் அதிகரிக்கும் என்பதாலும் அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்து வருவது தங்களுக்கும், தங்களை சார்ந்தவர்களுக்கும் மிகுந்த நன்மைகளை தரும், தங்களின் பூர்வீக சொத்துக்களை முறையாக பராமரிப்பதுடன், வீண் விரையம் செய்யாமல் காப்பாற்றுவது தங்களுக்கு நல்லது, மேலும் மற்றவர்கள் ஆலோசனைகள் பேரில் செய்யும் காரியங்கள் யாவும் தங்களின் வாழ்க்கையில் பெரும் இழப்பை தரும் என்பதால், சுய முடிவில் அதிக அக்கறை கொள்வது நல்லது இல்லை எனில் ஏமாற்றங்களை தவிர்க்க இயலாது, கடன் சார்ந்த இன்னல்களில் இருந்து தாங்கள் விலகி இருக்க வேண்டிய நேரம் இது, ஆன்மிகம் மற்றும் தெய்வீகத்தில் அதிக நாட்டம் கொள்வது தங்களுக்கு சிறப்புகளை வாரி வழங்கும், தாங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் பலமுறை ஆலோசனையின் பேரில் நடைமுறைப்படுத்துவதே, தங்களின் வாழ்க்கைக்கு உகந்த நன்மைகளை வழங்கும், பொருள் விரயங்களை தவிர்க்கவும், விபத்துகளை தவிர்க்கவும் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணங்களை மேற்கொள்வது தங்களுக்கு நல்லது, ஆன்மீக பெரியோரின் ஆசி தங்களுக்கு வரும் இன்னல்களை  வெகுவாக குறைக்கும், நல்ல மன நிம்மதியை தரும்.

குறிப்பு :

 ரிஷப லக்கின அன்பர்களுக்கு தற்போழுது நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 8,1,2,5ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 8,1,2,5ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் ரிஷப லக்கின அன்பர்களுக்கு மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

சனி பகவான் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் காலங்கள் :

( 26/01/2017 முதல் 21/06/2017 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும்.

( 21/06/2017 முதல் 26.10.2017 ) வரை
சனி பகவான் மீண்டும் வக்கிரக கதியில் விருச்சிக ராசியிலும்.

( 26/10.2017 முதல் 24/01/2020 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும் சஞ்சாரம் செய்கின்றார்.


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக