சனி, 21 ஜனவரி, 2017

வாஸ்து சாஸ்த்திரமும் சுய ஜாதக பாவக வலிமையும் !


" எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் " என்பதற்கு இணங்க சுய ஜாதகத்தில் லக்கினமே அடிப்படையாக விளங்குகிறது, மேலும் பனிரெண்டு பாவகங்களின் வலிமை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு யோக வாழ்க்கையை நல்கிறது, இதில் ஒருவர் வசிக்கும் வீடு வாஸ்து சாஸ்த்திர முறைப்படி இருப்பின், சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு யாதொரு இன்னல்களும் வர வாய்ப்பில்லை என்பதும், ஜாதகர் சுய ஜாதக ரீதியாக வரும் இன்னல்களில் இருந்து விடுபடுவார் என்பதும் ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்றாகவே " ஜோதிடதீபம் " கருதுகிறது, " அவனின்றி ஓர் அணுவும் அசையாது " என்ற இறைஅருளின் கருணைக்கு இணங்க ஒருவரின் வாழ்க்கையில் நடைபெறும் சகல நிகழ்வுகளையும் சுய ஜாதக வலிமையே நிர்ணயம் செய்கின்றது, சுய ஜாதகத்தில் ஒருவருக்கு சுக ஸ்தானம் எனும் 4ம் பாவகமும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 4ம் ராசியான கடகமும் மிகவும் வலிமையுடன் இருப்பின், சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு குடியிருப்பதற்கு, நிறைவான வசதி மற்றும் சரியான வாஸ்து  கொண்ட வீடு இயற்கையாகவே அமைந்துவிடும்.

 எனவே ஒருவருக்கு நல்ல வாஸ்து அமைந்த வீடு கிடைப்பதற்கு, சுய ஜாதக பாவக வலிமையே அடிப்படையாக விளங்குகிறது, சுய ஜாதகத்தில் இல்லாத ஓர் விஷயத்தை வாஸ்து முறைப்படி அமைந்த வீடு கொடுத்துவிட வாய்ப்பு இல்லை, அனைத்திற்கும் மூலஆதரமாக அமைவது சுய ஜாதக வலிமையே என்றால் அது மிகையில்லை, மேலும் சுய ஜாதகத்தில் 4ம் பாவகம் பெரும் வலிமையின் அடிப்படையிலும், 4ம் வீடு தொடர்பு பெரும்  பாவகம் குறிப்பிடும் திசை சார்ந்த வாயிற்படி கொண்ட வீடுகளில் குடியிருப்பது, சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் சகல நலன்களையும் வாரி வழங்கும், தனக்கு உகந்த திசை அற்ற வாயிற்படி கொண்ட வீடுகளில் குடியிருக்கும் அன்பர்களுக்கு ( சம்பந்தப்பட்ட வீடு வாஸ்து பிரகாரம் அமைந்து இருப்பினும் ) கடுமையான நெருக்கடிகளையும் அதிக அளவிலான இன்னல்களையும் வாரி வழங்கி விடும், ஜாதகர் தமது வாழ்க்கையில் சுய ஜாதகப்படி அனுபவிக்க வேண்டிய இன்னல்களில் இருந்து வாஸ்து நன்றாக அமைந்த வீடு நிச்சயம் காப்பாற்ற வழியில்லை, ஏனெனில் சுய ஜாதக வலிமையின் அடிப்படையிலேயே நாம் குடியிருக்கும் வீடுகளையும், நாம் புதிதாக கட்டும் வீடுகளையும் நிர்ணயம் செய்வது சாலச்சிறந்தது, இதை கருத்தில் கொண்டே நமது முன்னோர்கள் 2 தலைமுறைக்கு பிறகு வீடுகளை மாற்றி அமைத்துக்கொண்டு இருந்தனர் அல்லது புதிய வீடுகளை தமது சந்ததிகளுக்கு அவர் அவர்களுக்கு உகந்தபடி புதிதாக கட்டி கொடுத்தனர், இதனால் யாதொரு இன்னல்களும் இன்றி அவர்களது சந்ததிகளும், அவர்களும் சுகபோக வாழ்க்கையில் யாதொரு நெருக்கடியும் இன்றி சிறப்பாக வாழ்ந்தனர்.

 தகப்பனாருக்கு உகந்த கிழக்கு திசை வாயிற்படி மகனுக்கு ஏற்றதாக இல்லை எனில் சம்பந்தப்பட்ட குடும்பத்தில் மகனின் ஆதிக்கமும் வெற்றியும் தட்டி பறிக்கப்படும், மகனின் உழைப்பு திறமை யாவும் குடத்தில் இட்ட விளக்குபோல் பயனற்றதாக மாறிவிட அதிக வாய்ப்பு உண்டு, எனவே சுய ஜாதகத்தில் 4ம் பாவக வலிமையை அடிப்படையாக கொண்டு, அவரவருக்கு உகந்த திசை கொண்ட வீடுகளில் குடியிருப்பதே சகல நன்மைகளையும் தரும், ஜாதகரின் உழைப்பும் வீணாகாது, சகல விதங்களில் இருந்தும் நன்மைகளை பெறலாம், தனக்கு பொருத்தம் இல்லாத வீடுகளில் ( அது அரண்மனையாக இருந்தாலும் கூட ) குடியிருப்பது சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் 100% சதவிகித இன்னல்களையே வாரி வழங்கும், வாஸ்து சாஸ்த்திரத்தை தனக்கு உகந்த வகையில் ( சுய ஜாதக வலிமைக்கு ஏற்ப )  பயன்படுத்திக்கொண்ட அன்பர்களே, வாழ்க்கையில் சகல யோகங்களையும் மிகசிறந்த  முன்னேற்றங்களையும் பெற்று உள்ளனர்.

உதாரணமாக ஒருவரது சுய ஜாதத்தில் லக்கினம் மற்றும் நான்காம் பாவகம் களத்திர  ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் மேற்கு திசை சார்ந்த வாயிற்படி கொண்ட வீட்டில் குடியிருப்பது சகல யோகங்களையும் வாரி வழங்கும், மேலும் தனது ஜீவனம் சார்ந்த விஷயங்களை மேற்கு திசை சார்ந்த வாயிற்படி கொண்ட அலுவலகமாக பார்த்துகொள்வது சிறப்பு மிக்க ஜீவன முன்னேற்றத்தை தரும், மேற்கண்ட விஷயம் சர லக்கினத்தாருக்கும், ஸ்திர லக்கினத்தாருக்கும் பொருந்தும் ஆனால் உபய லக்கினத்தாருக்கு முற்றிலும் பொருந்தாது, ஏனெனில் உபய லக்கினத்தாருக்கு 7ம் பாவகம் பாதக ஸ்தானமாக அமையும் என்பதால், சுய ஜாதகத்தில் உபய லக்கினம் பெற்றவர்களுக்கு 1,4ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பின் அவர்கள் மேற்கு திசை சாந்த வீடுகளில் குடியிருப்பது உகந்தது அல்ல ஏனெனில் 200% சதவிகித இன்னல்களையும் துன்பங்களையும் தரும்.

சுய ஜாதகத்தில் 4ம் பாவகம் தொடர்பு படுத்தும் திசை சார்ந்த வீடு மற்றும் அலுவலகங்களை பயன்படுத்தும் பொழுது சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் சகல நன்மைகளும் தேடிவரும், இதில் யாதொரு மாற்றமும் இல்லை ஆனால் தொடர்பு பெரும் வீடு பாதக ஸ்தானமாக அமைந்து, பாதக ஸ்தானம் குறிக்கும் திசையில் குடியிருப்பது சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையை கடுமையாக பாதிப்பிற்கு ஆளாக்கும்.

பொதுவாக சுய ஜாதகத்தில் சுக ஸ்தானம் என்கின்ற 4ம் பாவகமும், காலபுருஷ தத்துவத்திற்கு  4ம் ராசியான கடகமும் வலிமை பெற்று இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகர் வாஸ்து சார்ந்த கவலைகளை விட்டுவிடலாம், ஏனெனில் இயற்கையாகவே அவர்களுக்கு வசிப்பதற்கு சரியான வாஸ்து அமைந்துள்ள வீடு கிடைத்துவிடும், சுய ஜாதகத்தில் 4ம் பாவகம் பாதிக்கப்பட்டும் காலபுருஷ தத்துவத்திற்கு 4ம் ராசியான கடகமும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் மட்டுமே மிகுந்த எச்சரிக்கையாக தான் குடியிருக்கும் வீட்டினை தேர்வு செய்ய வேண்டி வரும், சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவகம் குறிப்பிடும் திசை சார்ந்த வீடுகளை தேர்வு செய்து வசிப்பது, பாதிக்கப்பட்ட 4ம் பாவாக கெடுதல்களை வெகுவாக குறைக்கும், யோக வாழ்க்கைக்கு சரியான வழிகாட்டும்.

குறிப்பு :

ஒருவருக்கு சரியான வாஸ்து அமைந்த வீடு கிடைப்பதும் சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையே, எனவே சுய ஜாதக வலிமையை அடிப்படையாக கொண்டு தமக்கு உகந்த வீட்டை தேர்வு செய்வதே சாலச்சிறந்தது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக