புதன், 15 பிப்ரவரி, 2017

நேரம் நல்ல நேரம்


நேரம் நல்ல நேரம்



நல்ல நேரம் என்பது ஒருவருக்கு எப்படி பலன் தருகிறது என்பதை சற்று சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே! சுப காரியங்களை செய்ய நாம் நல்ல நேரம் பார்த்தே செய்கின்றோம், குறிப்பாக நல்ல முகூர்த்தம்,நல்ல ஹோரை சிலர் இன்னும் ஒரு படி மேலே சென்று பஞ்ச பட்சி பார்த்து செயல்படுவது உண்டு, சிலர் அபிஜித் முகூர்த்தத்தை பயன்படுத்துவது உண்டு, தமிழக முன்னாள் முதல்வர் மேற்கண்ட நல்ல நேரத்தை பயன்படுத்தி பதவி ஏற்று கொண்டார், அபிஜித் முகூர்த்தத்தை பயன்படுத்தி பதவி ஏற்றால் அவருக்கு வெற்றிகள் நிச்சயம் என்று பரிந்துரை செய்ததாக செய்தி, அதன் பிறகு முன்னாள் முதல்வர் நிலை என்ன ஆனது என்பதை தமிழகமே அறியும், அடுத்து முதல்வர் ஆசையில் பல பகிரதன முயற்சிகளை மேற்கொண்ட நபருக்கு தற்பொழுது என்ன நடந்தது என்ன என்பதும் நேற்றே உலகம் முழுவது அறிந்திருக்கும், மேலும் தற்பொழுது முதல்வர் பதவியை அடைய முயற்சி செய்யும் அன்பர்கள் படும் பாடு உலகே அறியும்.


முன்னாள் முதல்வர் நல்ல நேரத்தை பயன்படுத்தி, முதல்வராக நீடிக்க முடியாத நிலை ஏன் ஏற்ப்பட்டது? முதல்வர் ஆசையில் பகிரதன முயற்சி செய்த நபருக்கு சிறைவாசம் சென்றது ஏன் ? தற்பொழுது முதல்வர் பதவிக்கு முயற்சிக்கும் அன்பருக்கு இன்னும் நல்ல செய்தி வாராமல் இருப்பதற்கு என்ன காரணம் ? என்பதை இன்றைய சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !

நல்ல நேரம் என்பது என்ன ?

பொதுவாக அன்றைய நாளில் நல்ல நேரம் பார்க்கும் அன்பர்கள், தமது சுய ஜாதக வலிமையை பற்றி எவ்வித கவனமும் கொள்வதில், குறிப்பாக தமது ஜாதக வலிமை எப்படி இருந்தாலும், நல்ல நேரம் பார்த்து செய்தால் அனைத்தும் வெற்றிகரமாக அமையும் என்ற எண்ணத்தின் விளைவே, முன்னாள் முதல்வர் முதல்வராக நீடிக்க முடியாததிர்க்கும், முதல்வர் ஆசையில் முயற்சி எடுத்த நபர் சிறை வசம் சென்றதிர்க்கும் , தற்பொழுது முதல்வர் பதவிக்கு முன்னெடுப்பவருக்கு தாமதம் ஆவதற்கும் அடிப்படை காரணமாக அமைகிறது..

ஒருவரது சுய ஜாதகம் வலிமை பெறாமல், நடைபெறும் திசாபுத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தாமல்... ஒருவர் நல்ல நேரம் பார்த்து செய்யும் காரியங்கள் எதுவும் வெற்றி பெறாது.. குறிப்பாக சுய ஜாதகம் வலிமை பெற்று இருந்து சம்பந்தப்பட்ட ஜாதகர் ராகுகாலம், எமகண்டம் மற்றும் குளிகை நேரத்தில் ஒரு காரியத்தை செய்தாலும் நிச்சயம் வெற்றி மேல் வெற்றியை தரும், சுய ஜாதக வலிமை இன்றி ஒருவர் நல்ல முகூர்த்தம்,நல்ல ஹோரை மற்றும் பஞ்ச பட்சி பார்த்து செய்தாலும் சம்பந்தப்பட்ட அன்பருக்கு தோல்வியே மிஞ்சும், எனவே நல்ல நேரம் என்பது சுய ஜாதக வலிமையின் அடிப்படையிலேயே நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்பதே "ஜோதிடதீபத்தின்" கருத்து.

முன்னாள் முதல்வருக்கு தெரியாத ஜோதிடர்களா? சாஸ்திர வல்லுன்னர்களா? இருப்பின்னும் அவர் தேர்தலில் வெற்றி பெற்றும், ஜோதிடர்களின் ஆலோசனை படி நல்ல நேரம் பார்த்து பதவி ஏற்றும் அதில் நீடிக்க முடியவில்லை, முதல்வர் பதவி ஆசையில் ஒருவர் சிறை செல்ல நேர்ந்தது, முதல்வர் பதவியை அடைவதற்கு தற்பொழுது ஒருவர் முயற்சிக்கும் பொழுது அதுவும் தாமதம் ஆகிறது... இங்கே ஒரு நாளில் நிர்ணயம் செய்யும் நல்ல நேரத்தை விட, ஒருவரின் சுய ஜாதக வலிமையே முழுமையாக வேலை செய்கிறது என்பது 100% விகிதம் உறுதியாகிறது அன்பர்களே! எனவே குறிப்பிட்ட நல்ல நாளில் நல்ல நேரம் பார்த்து ஒரு காரியத்தை செய்வதை விட, சுய ஜாதக வலிமை உணர்ந்து ஒரு காரியத்தை செய்வதே முழு அளவிலான வெற்றி வாய்ப்புகளை வாரி வழங்கும் என்பதை மனதில் கொண்டு ஒவ்வொருவரும் செயல்பட்டால், அவர்கள் செய்யும் காரியங்களில் 100 % விகித வெற்றி உறுதி என்பதை "ஜோதிடதீபம்" அழுத்தம் திருத்தமாக பதிவு செய்ய விரும்புகிறது.

வாழ்க வளமுடன் ஜோதிடன் வர்ஷன் 9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக