புதன், 15 மார்ச், 2017

சந்திரன் திசை வழங்கும் யோக வாழ்க்கை, பூர்வபுண்ணியம் மற்றும் லாப ஸ்தான வழியில் ஜாதகர் பெரும் நன்மைகள் !



சுய ஜாதகத்தில் நடைபெறும் திசாபுத்தி ( நவகிரகங்களின் திசாபுத்தி எதுவென்றாலும் சரி ) வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது சம்பந்தப்பட்ட, ஜாதகருக்கு தான் ஏற்று நடத்தும் பாவக வழியிலான யோகங்களை தங்கு தடையின்றி வாரி வழங்கும், ஜாதகரின் வாழ்க்கையில் பலவித நன்மைகளும் சுப யோகங்களும் தொடர்ந்து நடைபெறும். கீழ்கண்ட ஜாதகருக்கு தற்போழுது நடைமுறையில் சந்திரன் திசை நடைபெறுகின்றது, தனது திசையில் ஜாதகருக்கு சந்திரன் வழங்கும் பலாபலன்களை பற்றி சற்று சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே ! மேலும் ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட வீடுகள் எவை ? வலிமை பெற்ற வீடுகள் எவை ? என்பதையும் சற்று தெளிவாக காண்போம்.


லக்கினம் : ரிஷபம்
ராசி : மேஷம்
நட்ஷத்திரம் : அஸ்வினி 3ம் பாதம்

ஜாதகருக்கு சுய ஜாதக வலிமையை சிந்தனைக்கு எடுத்துக்கொள்ளும் பொழுது, 1,4,7,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது  அடிப்படையிலே வலிமையான ஜாதகர் என்பதை தெளிவு படுத்துகிறது, மேலும் சுய ஜாதகத்தில் கேந்திரம் என்று அழைக்கப்படும் 1,4,7,10ம்  வீடுகள் வலிமை பெறுவது, ஓர் நாற்காலியில்  நான்கு கால்களும் வலிமை  மிக்கதான ஸ்திர தன்மையை பெற்று இருக்கும், மேற்கண்ட அமைப்பை பெரும் ஜாதகர் தனது வாழ்க்கையில் எந்த ஓர் சூழ்நிலையிலும் தோல்வியை தழுவாத யோக வாழ்க்கையை தரும், செய்யும் செயல்களில் வெற்றி, ஸ்திரமான அறிவு திறன், ஆரோக்கியமான உடல் நிலை,  நிலையான சொத்து, வண்டி வாகன யோகம், நல்ல குணம், நல்ல நண்பர்கள், சிறந்த வெளிவட்டார பழக்க வழக்கம், பொதுமக்கள் ஆதரவு, பிரபல்ய யோகம், ஸ்திரமான ஜீவன முன்னேற்றம், கவுரவம் குறையாத யோக வாழ்க்கை, சிறந்த  வாத திறமை, செய்யும் தொழில் அல்லது பணியில் வெற்றி, உயர் பதவி யோகம், என்றவகையில் சுப யோகங்களை வாரி வழங்கும்.

மேற்கண்ட ஜாதகருக்கு இந்த அமைப்பு ( கேந்திர ஸ்தான வலிமை ) இருப்பது, ஜாதகரின் ஸ்திரமான வெற்றிகளை குறிக்கிறது, அடுத்து 3ம் வீடு வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகர், தைரியம் மனஉறுதி இரண்டையும் தனது  சொத்தாக பாவிப்பவர் என்பது தெளிவாகிறது, மேலும்  தான் செய்யும் எந்த ஓர் காரியத்திலும் நேர்த்தியை கடைபிடிப்பவர், ஒழுக்கம் நிறைந்தவர் என்பதை உறுதிப்படுத்துகிறது, சகல செல்வங்களையும் பெரும் யோகம், எதிரிகளை  வெல்லும் வல்லமை, சத்தியத்தை மதித்தல், சூழ்நிலை மாற்றத்தில் ஆர்வம் மற்றும் புதுமை விரும்பி என்பதை தெளிவு படுத்துகிறது.

5,11ம் வீடுகள் லாபஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகத்திலே மிகவும் உயர் ரக யோகங்களை வழங்கும் அமைப்பாக கருதலாம், ஏனெனில் ஜாதகரின் லாப ஸ்தானம் என்பது ( மீன ராசியில் 355:05:14 பாகையில் ஆரம்பித்து மேஷ ராசியில் 28:06:04 பாகையில் முடிவடைகிறது ) மேஷ ராசியிலே அதிகம் வியாபித்து இருக்கின்றது என்பது கவனிக்க தக்க சிறப்பு அம்சமாகும், இதனால் ஜாதகர் பெரும் அதிர்ஷ்டங்கள்  மற்றும் லாபங்கள் முழு அளவில் ஜாதகருக்கு வந்து சேரும், மேலும் லாப ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முதல் ராசியாக வருவதும், சர நெருப்பு  தத்துவ ராசியில் அமைவதும் ஜாதகருக்கான யோக பலன்களை விரைவாகவும், தன்னிறைவாகவும் வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்க அம்சமாகும், அப்படி பட்ட யோகங்களை தரும் 5,11ம் பாவக பலனை தற்போழுது நடைபெறும் சந்திரன் திசை ஜாதகருக்கு ஏற்று நடத்துகிறது என்பது வரவேற்க தக்க விஷயமே, மேலும் ஜாதகர் சந்திரன் திசை முழுவதும் 5,11ம் பாவக வழியிலான சுப யோகங்களை பெறுகிறார் என்பது சிறப்பு அமசமாகும்.

மேற்கண்ட ஜாதகருக்கு நடைபெறும் சந்திரன் திசை சுப யோகங்களை வழங்குவது சிறப்பு என்ற போதிலும், சுய ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளின்  நிலையையும் கருத்தில் கொள்வது நல்லது, ஏனெனில் வலிமை அற்ற பாவக வழியிலான இன்னல்களை ஜாதகர் தவிர்த்தால் மட்டுமே, தற்போழுது நடைபெறும் சந்திரன் தசை வழங்கும் லாப ஸ்தான பலனை முழுமையாக ஜாதகர்  பெற இயலும், ஜாதகருக்கு 2,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் 12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் 2,8,12ம் பாவக வழியிலான இன்னல்களை தரும், 6,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 6,9ம் பாவக வழியிலான கடுமையான இன்னல்களை தரும், எனவே ஜாதகர் சுய ஜாதகத்தில் 2,6,8,9,12ம் பாவக வழியில் இருந்து இன்னல்களை அனுபவிப்பார்  என்பது உறுதியாகிறது.

ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் சந்திரன் தசை வலிமை பெற்ற 5,11ம் பாவக பலனை வழங்கிய போதிலும், சனி புத்தி பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்ற 6ம் பாவக பலனை ஏற்று நடத்துவது உகந்தது அல்ல, ஜாதகர் 5,11ம் பாவக வழியில் நன்மைகளையும், 6ம் பாவாக வழியில் கடுமையான இன்னல்களையும் சந்திக்கும் சூழ்நிலையை தரும்.


குறிப்பு :

சுய ஜாதகத்தில் ஒருவருக்கு பாக்கிய ஸ்தானம் வலிமை அற்று காணப்படுவது நன்மை தரும் அமைப்பு அல்ல, பாதகஸ்தானத்துடன் தொடர்பு பெறுவது கடுமையான இன்னல்களை தரும், ஜாதகரின் பாக்கிய ஸ்தானம் கடுமையாக பாதிக்கப்பட்டும், கலபுருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானம் பாதிக்கப்பட்டும் இருப்பது ஜாதகரின் வாழ்க்கையில் பித்ரு சார்ந்த சாபங்களை  தரும், மேலும் ஜாதகரின் பாக்கிய ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு  10ம் வீடாக அமைவது ஜாதகரின் வாழ்க்கையில் ஜீவன சார்ந்த இன்னல்களும் பெயருக்கு களங்கத்தையும்  தரக்கூடும், என்பதால் ஜாதகர்  முறையான  பித்ரு வழிபாட்டை மேற்கொண்டு வாழ்க்கையில் நலம் பெறுவது அவசியமாகிறது.


வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக