திங்கள், 17 ஏப்ரல், 2017

சுக்கிரன் திசை நடைபெற்றும் திருமணம் தாமதம் ஆக காரணம் என்ன ?


கேள்வி : 

சுக்கிரன் திசை சுக்கிரன் புத்தியில் திருமணம் நடைபெறும் என்றனர், அதற்க்கான அறிகுறி சிறிதும் இதுவரை தெரியவில்லை, திருமணம் நடைபெறுமா? ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இதனால்தான் திருமணம் சுக்கிரன் திசை சுக்கிரன் புத்தியில் நடைபெறவில்லை, திருமணம் தாமதமாக காரணம் இதுவே என்கின்றனர் ? உண்மையில் என்ன நடக்கிறது ? சரியான தீர்வு என்ன ?

பதில் :

தங்களது சுய ஜாதக வலிமையை கருத்தில் கொள்ளாமல், கூறப்பட்ட பொது கருத்தாகவே தங்களின் கேள்வியில் உணர்கிறது " ஜோதிடதீபம் "  மேலும் திருமண வாழ்க்கைக்கும் நடைபெறும் சுக்கிரன் திசைக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை அன்பரே ! பொதுவாக சுய ஜாதகத்தில் திருமண வாழ்க்கையை குறிக்கும்  2,5,7,8,12ம் வீடுகள் வலிமை பெற்று இருப்பதும், சரியான பருவ வயதில் நடைபெறும் திசா புத்திகள் எதுவென்றாலும் வலிமை பெற்ற 2,5,7,8,12ம் பாவக பலனை ஏற்று நடத்துவதும் ஒருவரின் திருமண வாழ்ககையை சிறப்பாக அமைய சுய ஜாதகத்தில் உள்ள வலிமையான நிலையாகும், குறைந்த பட்சம் சுய ஜாதகத்தில் 2,7ம் வீடுகள் மிகவும் வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, ஏனெனில் ஒருவரின் இல்லறவாழ்க்கை சிறப்பாக சரியான வயதில் நடைபெற சுய ஜாதகத்தில் அடிப்படையாக அமையும் வலிமை நிலையாகும், மேலும் வரனுக்கோ வதுவுக்கோ பருவ வயதில் திருமணம் நடைபெற மேற்கண்ட பாவகங்கள் வலிமையுடன் இருப்பதுடன், நடைபெறும் திசா புத்தியும் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது, தாமதம் இல்லா திருமண வாழ்க்கையை  மிகவும் சிறப்பாக அமைத்து தரும்.

 தங்களது சுய ஜாதக வலிமை நிலையை பற்றியும், நடைபெறும் சுக்கிரன் திசை தங்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றியும் சற்று சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பரே !


லக்கினம் : மகரம் 
ராசி : விருச்சகம்
நட்ஷத்திரம் : அனுஷம் 3ம் பாதம் 

தங்களது ஜாதகத்தில் தற்போழுது சுக்கிரன் திசை நடைபெறுகின்றது, அதில் மாற்றம் இல்லை இருப்பினும் நடைபெறும் சுக்கிரன் திசை தங்களுக்கு 8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் ஆயுள் பாவக பலனை ஏற்று நடத்திக்கொண்டு இருப்பது வரவேற்கத்தக்க விஷயமல்ல, சுக்கிரன் திசை தங்களுக்கு திடீர் இழப்பை, எதிர்ப்பால் அமைப்பினரால் இன்னல்கள், தெய்வீக அனுகூலம் இன்மை, எடுக்கும் காரியங்கள் தடைபடும் தன்மை என்ற வகையில் இன்னல்களை தந்து கொண்டு இருக்கின்றது என்பதனால் சுக்கிரன் திசை தங்களுக்கு யோக பலாபலன்களை தரவில்லை என்பது உறுதியாகிறது, சுக்கிரன் திசை நடைபெற்றால் திருமணம் நடைபெறும் என்பது உண்மை அற்ற கருத்து என்பது, ஒருவேளை நடைபெறும் சுக்கிரன் திசை வலிமை பெற்ற களத்திர  ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே ஜாதகருக்கு திருமணம் சிறப்பாக அமையும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள், தங்களுக்கு நடைபெறும் சுக்கிரன் திசை வலிமை அற்ற ஆயுள் பாவக பலனை தருவது திடீர் இழப்புகளையும், மருத்துவ செலவுகளையும் தரும் என்பது மட்டுமே உண்மை, மேலும் சுக்கிரன் திசையில்  தற்போழுது நடைபெறும் சூரியன் புத்தியும் 8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை அற்ற ஆயுள் பாவக பலனை தருவது தங்களது திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்ய உகந்தது அல்ல.

சுக்கிரன் திசையில் அடுத்து வரும் சந்திரன் புத்தியும் தங்களுக்கு 9ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று விரைய ஸ்தான பலனை தருவது தங்களுக்கு மன ரீதியான நெருக்கடிகளை கடுமையாக தரும் என்பதனால் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நலம் தரும், தங்களுக்கு உள்ள வாய்ப்பு  என்பது ? வரும் வதுவின் ஜாதகம் மிகவும் வலிமையுடன் இருப்பதாக தேர்வு செய்து திருமணம் செய்துகொள்வது மட்டுமே, இதற்க்கு தாங்கள் தங்களது குடும்பத்தில் உள்ள பெரியோரின் ஆதரவை நாடுவது மட்டும் சிறந்த வழிமுறையாக கருதுகிறோம்.

தங்களது சுய ஜாதகத்தில் 1,4,7,10ம் பாவகங்கள் வலிமை பெற்று இருந்தாலும், தற்போழுது  நடைபெறும் சுக்கிரன் திசை தங்களுக்கு சாதகமான பலனை தரவில்லை என்பது வருந்தத்தக்கது என்றால் அது மிகையில்லை, மேலும் 1,4,7,10ம் பாவகங்களை தவிர மற்ற அனைத்து பாவகங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது தங்களது வாழ்க்கையில் சிறப்பை தரும் அம்சமல்ல என்பதை கருத்தில் கொள்வது தங்களுக்கு நலம் தரும், வலிமை பெற்ற பெண்ணின் ஜாதகத்தை தாங்கள் தேர்வு செய்யவில்லை எனில் தங்களது இல்லற வாழ்க்கை மிகவும் சிரமத்திற்கு ஆளாகும் என்பதை கவனத்தில் கொள்க .

செவ்வாய் தோஷம் என்பதே முற்றிலும் தவறான கருத்தாக "ஜோதிடதீபம்" கருதுகிறது, மேலும் தங்களுக்கு 8ல் செவ்வாய் தோஷம் என்று குறிப்பிட்டு உள்ளீர்கள், இதுவே தங்களது சுய ஜாதகத்தில் உள்ள உண்மை நிலைக்கு புறம்பானது, ஏனெனில் தங்களது சுய ஜாதகத்தில் செவ்வாய் பகவான் சிம்மத்தில் உள்ள 7ம் பாவகத்தில் உள்ளார் என்பதில் தெளிவு பெறுங்கள், மேலும் தங்களது திருமண வாழ்க்கை தடைபெற உண்மையான காரணம் செவ்வாய் தோஷம் அல்ல, தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசை தங்களுக்கு  சாதகமாக இல்லை என்பதும், சுக்கிரன் திசையில் சுக்கிரன்,சூரியன்  மற்றும் சந்திரன் புத்திகளும் வலிமை பெற்ற களத்திர பாவக பலனை ஏற்று நடத்தவில்லை  என்பதே முழு முதற் காரணமா என்பதில் தெளிவு பெறுங்கள்.

வலிமை பெற்ற வதுவின் ஜாதகத்தை குடும்பத்தில் உள்ள பெரியோர்களின் ஆதரவுடன் தேர்வு செய்து திருமணம் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு  வாழ்க்கையில் நலம் பெறுங்கள் ( தாங்கள் யாதொரு எதிர்பார்ப்பும் இன்றி நல்ல  வதுவின் ஜாதகம் வேண்டும் என்பதை மட்டும் கருத்தில் கொண்டு செயல்படுவதே தங்களது இல்லற வாழ்க்கையை சிறப்பிக்கும் ) 

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக