செவ்வாய், 18 ஜூலை, 2017

சனி மகா திசை தரும் பலாபலன் என்ன ? எதிர்வரும் புதன் திசை தரும் பலாபலன்கள் என்ன ?


 சுய ஜாதகத்தில் சனி திசை நடைபெறும் பொழுது பெரும்பாலும் நாம் அனைவரும் நமக்கு இன்னல்களே நடைபெறும் என்று கருதுவது உண்டு, மேலும் சனி திசை என்பது வாழ்க்கையில் இன்னல்களையும், துன்பங்களையும் வாரி வழங்கும் அமைப்பை பெற்றது என்ற கருத்தும் பரவலாக உண்டு, மனித வாழ்க்கையில் வரும் இன்னல்களுக்கும் துன்பங்களுக்கும் காரணகர்த்தாவாக சனிபகவானை உருவகபடுத்துபவர்களும் உண்டு, இன்னும் சிலர், ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி என்று, ஜாதகத்தில் சந்திரன் நின்ற ராசிக்கு சனிபகவானின் சஞ்சார நிலையை கருத்தில் கொண்டு பெரும் இன்னல்களை தருபவர் என்று சனிபகவானை துவேசிப்பவர்களும் உண்டு, மேற்கண்ட விஷயங்கள் யாவும் சுய ஜாதகத்தில் பாவக வலிமை நிலையை பற்றிய தெளிவு இல்லாமலும், நடைபெறும் திசா புத்திகள் ஏற்று நடத்தும் பாவக வலிமையின் தன்மையை பற்றிய புரிதல் இல்லாமலும், சொல்லப்படும் கட்டுக்கதையாகவே " ஜோதிடதீபம் " கருதுகிறது, அடிப்படையில் சுய ஜாதகம் இருக்கும் பொழுது ராசியை வைத்து பலாபலன் காண முற்படுவதே தவறான ஓர் அணுகுமுறை என்பதை பதிவு செய்ய விரும்புகிறோம், லக்கினத்தையும் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலையையும் கருத்தில் கொண்டு பலாபலன் காண முற்படுவதே சரியான மற்றும் துல்லியமான ஜாதக பலன்கள் காண வழிவகுக்கும், ஜாதகரின் கேள்விக்கு உண்டான பதிலை அவரது சுய ஜாதக அமைப்பை வைத்து பலாபலன் எப்படி காண்பது என்பதனை இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : விருச்சிகம்
ராசி : துலாம்
நட்ஷத்திரம் : சித்திரை 4ம் பாதம்

ஜாதகருக்கு தற்போழுது  சனி திசை ( 13/03/2013 முதல் 12/03/2022 வரை ) நடைமுறையில் உள்ளது நடைபெறும் சனி  திசை ஜாதகருக்கு வழங்கும் பலன்கள் என்ன என்பதனை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், ஜாதகருக்கு தற்போழுது நடைமுறையில் உள்ள சனி திசை வலிமை பெற்ற 7ம் வீடு களத்திர  ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு அளவில் ஸ்திரமாக 7ம் பாவக பலனை மட்டும் ஏற்று நடத்துகிறது, ஜாதர் விருச்சிக லக்கினம்  என்பதால் 7ம் பாவகம் ஜாதகருக்கு ஸ்திர மண் தத்துவ ராசியான ரிஷபத்தில் அமைகிறது, மேலும் 7ம் பாவகம் ஜாதகருக்கு ரிஷபத்தில் 32:32:05 பாகையில் ஆரம்பித்து மிதுனத்தில் 61:17:18 பாகையில் முடிவடைகிறது, பெரும்பாலும் 7ம் பாவகம் ஜாதகருக்கு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வாக்கு ஸ்தானமான ரிஷப ராசியில் வியாபித்து இருப்பது, வரவேற்க தக்க அம்சமாகும், மேலும் சனி திசை முழுவதும் ஜாதகத்துக்கு  7ம் வீடு களத்திர  ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக பலனை தருவது வரவேக்க தக்க அம்சமாகும்.

இதனால் ஜாதகர் சனி திசையில் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து சகல  சௌபாக்கியங்களையும் அனுபவிக்கும் யோகத்தை தரும், மேலும் தனது  நண்பர்கள் உதவி, கூட்டாளிகள் உதவி, வெளிநாடுகளில் இருந்து வருமான வாய்ப்பு, அயல் தேசத்தில் ஜீவன வாழ்க்கையை மேற்கொள்ளும் யோகம், ஸ்திரமான வருமானங்கள், இனிமையான பேச்சு திறன் மூலம் அனைவரின் ஆதரவையும் பெரும் யோகம், பொதுமக்கள் ஆதரவு, சமூக அந்தஸ்து, தெய்வீக அனுக்கிரகம் மூலம் வாழ்க்கையில் சகல முன்னேற்றங்களையும் பெரும் யோகம் உண்டாகும், குறிப்பாக ஜாதகரின் குடும்ப  வாழ்க்கை சிறப்பாக அமையும், கைநிறைவான வருமானம் வந்து சேரும், குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும், எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும், ஜாதகரின் வாக்கு வன்மை அதிகரிக்கும், பேச்சு திறமையால் தனது வாழ்க்கையை மிக சிறப்பானதாக மாற்றி கொள்ளும் யோகம் பெற்றவராகிறார், மேலும் தனது வாழ்க்கை துணையின் முழு ஆதரவையும், அவர்கள் வழியிலான நன்மைகளையும் ஜாதகர் பரிபூர்ணமாக அனுபவிக்கும் யோகம் உண்டு, சனி திசை ஜாதகருக்கு வெளியூர், வெளிநாடு, வியாபாரம், பொதுமக்கள், அயல் தேச லாபங்கள் என்ற வகையில் சுபயோகங்களை ஸ்திரமாக வாரி வழங்கும் என்பது கவனிக்க தக்க அம்சமாகும், ஜாதகருக்கு சனி திசை நடைபெற்றாலும், சனி தனது திசையில் வலிமை பெற்ற களத்திர ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து சகல யோகங்களையும் தரும்.

எனவே சுய ஜாதகத்தில் பாவ கிரகத்தின் திசை, புத்தி  ( சூரியன், செவ்வாய், சனி, தேய்பிறைசந்திரன், ராகு,கேது ) நடைபெற்றால் தீய பலன்கள் நடைபெறும் என்று நினைப்பது முற்றிலும் தவறு, எந்த ஓர் கிரகத்தின் திசாபுத்தி நடைபெற்றாலும், நடைபெறும் திசாபுத்தி அவரவர் சுய ஜாதகத்தில் உள்ள எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்பதை தெளிவாக தெரிந்துகொண்டு, அதற்க்கான உண்மையான பலாபலனை அறிந்து வாழ்க்கையில் நலம் பெறுவது அவசியமாகிறது.

ஜாதகருக்கு அடுத்து வரும் புதன் திசை தரும் பலாபலன்களை சற்று சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !

புதன் திசை ( 12/03/2022 முதல் 13/03/2039 ) ஜாதகருக்கு 1,3ம் வீடுகள் வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று ராஜ யோக பலனை தருவது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், மேலும் ஜாதகரின் வீர்ய ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமாகவும், சர மண் தத்துவ ராசியான மகரத்தில் வியாபித்து இருப்பது, ஜாதகரின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியமும் வந்து சேரும் யோகத்தை தரும், சனி திசையை விட புதன் திசை ஜாதகருக்கு 1,3ம் பாவக வழியில் இருந்து 100% விகித யோக வாழ்க்கையை நல்கும், எதிர்பாராத முன்னேற்றம் மற்றும் ஜீவன வழியிலான லாபங்களை ஜாதகர் தங்கு தடையின்றி பெறுவார், அதிர்ஷ்டத்தின் தாக்கத்தை முழு அளவில் ஜாதகர் ஜீவன வழியில் இருந்து பெறுவார், அபரிவிதமான தொழில் வளர்ச்சி, எடுக்கும் காரியங்கள் யாவும் வெற்றி, சுலப பொருள் வரவு, மக்களின் பேராதரவு, பொது வாழ்க்கையில் வெற்றி, அரசியல் லாபங்கள், தெய்வீக அனுபவங்கள், மண், மணை, வண்டி வாகன சேர்க்கை, எதிர்பாராத அதிர்ஷ்டம் என ஜாதகரின் வாழ்கையில் புதன் திசை மிகுந்த நன்மைகளை பரிபூர்ணமாக வாரி வழங்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

மேற்கண்ட ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் சனி திசை களத்திர பாவக வழியில் இருந்து சுப யோகங்களையும், புதன் திசை வீர்ய ஸ்தான வழியில் இருந்து யோக பலன்களையும் வாரி வழங்குவது, அவரது சுய ஜாதகத்தில் பாவகங்கள் பெற்றுள்ள சுபதுவத்தை எடுத்துரைக்கிறது, எனவே நமது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பணிரெண்டு பாவகங்களும் வலிமை பெற்று இருப்பின், நமக்கு எந்த கிரகத்தின் திசாபுத்தி நடைபெற்றாலும் யோக பலனே நடைமுறைக்கு வரும், நமது ஜாதகத்தில் பாவகங்கள் பாதிக்கப்பட்டு இருப்பின் நமக்கு நடைபெறுவது குரு,சுக்கிரன் போன்ற சுப கிரகத்தின் திசை என்றாலும் அவயோக பலன்களே நடைமுறைக்கு வரும் என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது, கிரகங்களின் திசாபுத்திகள் நமக்கு நன்மையையும் தீமையையும் தருவதில்லை, நமது சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையே நமக்கு நன்மையையும் தீமையையும் தருகின்றது என்பதே உண்மை அன்பர்களே, எனவே அவரவர் சுய ஜாதக வலிமையை கருத்தில் கொண்டு ஜாதக பலாபலன்கள் காண்பதே மிக துல்லியமான பலாபலன்களை காண இயலும் என்பதை கருத்தில் கொள்க.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக