செவ்வாய், 30 ஜனவரி, 2018

தொழில் ஸ்தான வலிமையின் அடிப்படையில் சரியான தொழில் தேர்வை செய்வது எப்படி ? சனி திசை தரும் பலன்கள் என்ன ?


 தொழில் ஒருவருக்கு இயற்கையாக அமைவதென்பது சுய ஜாதகத்தில் ஜீவன பாவக வலிமையின் அடிப்படையில் நிகழும் ஓர் விஷயமாகும், நடைபெறும் திசை ஜாதகருக்கு வலிமை பெற்ற ஜீவன ஸ்தான தொடர்பை பெற்று பலாபலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு தொழில் ரீதியான தன்னிறைவான முன்னேற்றங்களை பரிபூர்ணமாக வாரி வழங்கும், நடைபெறும் திசை வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்துமாயின், சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக வழியிலான நன்மைகள் பெரிய அளவில் நடைமுறைக்கு வாராது, கீழ்கண்ட ஜாதகத்தை இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : ரிஷபம்
ராசி : கும்பம்
நட்ஷத்திரம் : பூரட்டாதி 2ம் பாதம்

ஜாதகருக்கு 2,6,9ம் வீடுகளை தவிர மற்ற பாவகங்கள் அனைத்தும் மிக மிக வலிமையுடன் இருப்பது ஜாதகரின் சுய ஜாதக வலிமையை நமக்கு தெளிவு படுத்தும், குறிப்பாக 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகத்தில் மிகவும் வலிமை பெற்ற அமைப்பாகும், எனவே ஜாதகர் தொழில் வழியில் இருந்து மிக அபரிவிதமான நன்மைகளை பரிபூர்ணமாக பெறுவதை உறுதிப்படுத்துகிறது, ஜாதகரின் சுக ஸ்தானம் பெரும் பகுதி ஸ்திர நெருப்பு ராசியில் அமைவதும், ஜீவன ஸ்தானம் பெரும் பகுதி ஸ்திர காற்று ராசியில் அமைவதும் ஜாதகருக்கு கிடைத்த புதையல் யோகம் என்றால் அது மிகையில்லை, ஜாதகரின் ஜீவனம் மேற்கண்ட இரண்டு தத்துவங்களை சார்ந்து அமையும் பொழுது ஜாதகரின் தொழில் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்றாக அமைந்துவிடும்.

ஜாதகரின் சுக ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் வீடாகவும், ஸ்திர நெருப்பு ராசியான சிம்மராசியில் முழுவதும் வியாபித்து நிற்பது ஜாதகர் தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில் சிறப்பான வெற்றிகளை பெற உதவிபுரியும் ஜாதகர் கட்டிடக்கலை, வண்டிவாகன தொழில் நுட்பம், மின் சாதனம் தயாரிப்பு அல்லது பராமரிப்பு, நுண் கலை மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களில் அபரிவிதமான வெற்றிகளை பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கி தரும், மேலும் ஜாதகரின் ஜீவன ஸ்தானம் காலபுருஷ தத்துவ அமைப்பைப்பிற்கு 11ம் ராசியான கும்ப ராசியில் முழுவதும் வியாபித்து நிற்பது ஜாதகரின் அதிர்ஷ்டம் ஜாதகர் செய்யும்  தொழில் வழியில் இருந்து அபரிவித நன்மைகளையும் யோகங்களையும் வாரி வழங்கும், தெளிவான சிந்தனை, சிறந்த அறிவு திறன், முற்போக்கு சிந்தனையுடனான யோக வாழ்க்கை, புதிய கண்டுபிடிப்புகள், தொழில் நுட்ப அறிவு திறனை வியாபாரமாக்கும் யுக்தி என்ற வகையில் சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும்.

 ஜாதகருக்கு  சிம்மமும், கும்பமும் வலிமை பெற்று இருப்பது அறிவார்ந்த செயல்கள் மற்றும் சமயோசித புத்திசாலித்தனம் மூலம் வாழ்க்கையில் சகலவித அதிர்ஷ்டங்களையும் தான் செய்யும் ஜீவன வழியில் இருந்து ஜாதகர் சுவீகரிக்கும் வல்லமை கொண்டவர் என்பதை மிக துல்லியமாக தெளிவுபடுத்துகிறது , நடைபெறும் சனி திசை ஜாதகருக்கு தரும் பலாபலன்களை இனி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

சனி திசை தரும் பலன்கள் : ( 14/01/2001 முதல் 15/01/2020 வரை )

ஜாதகருக்கு தற்போழுது  நடைமுறையில் உள்ள சனி திசை 9ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 9ம் பாவக வழியில் இருந்து இன்னல்களையும், 5ம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 5ம் பாவக வழியில் இருந்து அபரிவிதமான சுபயோகங்களையும் வழங்கி கொண்டு இருப்பது ஜாதகர் 5ம் பாவக வழியில் இருந்துமட்டும் சிறப்பான நன்மைகளை பெறுவார் என்பதை தெளிவு படுத்துகிறது, எனவே ஜாதகருக்கு சனி திசை நல்ல கல்வி அறிவை சிறப்பாக வாரி  வழங்கி இருக்கும், இதன் அடிப்படியிலான சமயோசித புத்திசாலித்தனம் ஜாதகருக்கு சிறப்பான வெற்றிகளை வழங்கி இருக்கும், ஜாதகர் மற்றவர் விஷயங்களில் தலையீடு செய்து அதன் வழியிலான துன்பங்களை வெகுவாக அனுபவித்திருக்கக்கூடும் என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும்.

இருப்பினும் தற்போழுது நடைமுறையில் உள்ள சனி திசை குரு புத்தி ( 03/07/2017 முதல் 15/01/2020 வரை ) ஜாதகருக்கு 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு அளவிலான சுபயோக பலாபலன்களை வாரி வழங்கிக்கொண்டு இருப்பது, ஜாதகருக்கு ஜீவன ரீதியாக  ஓர் சிறப்பான ஆரம்பத்தை வழங்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை ஜாதகர் இதை உணர்ந்து செயல்படுவது வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், தனக்கு வரும் நல்ல தொழில் வாய்ப்புகளை ஏற்று சிறப்பான முன்னேற்றங்களை காண்பது மிக மிக அவசியமாகிறது.

எதிர்வரும் புதன் திசை ஜாதகருக்கு வலிமை பெற்ற களத்திர ஸ்தான பலனை நடைமுறைக்கு கொண்டு வர இருப்பதால், தற்போழுது ஜாதகருக்கு வரும் நல்ல ஜீவன வாய்ப்புகளை ஏற்பதே நன்மையை தரும், குறிப்பாக ஜாதகருக்கு வெளியூர் அல்லது வெளிநாடுகளில் இருந்து வரும் ஜீவன வாய்ப்புகளை தவறாமல் கைப்பற்றி, எதிர்வரும் புதன் திசை தரும் "களத்திர ஸ்தான" பலாபலனை பரிபூர்ணமாக அனுபவிப்பதே புத்திசாலித்தனம், வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக