செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

செவ்வாய் தோஷம் எனும் மாயவலை !

 

 " மாற்றம் ஒன்றே மாறாதது " என்ற விதி அணைத்திற்கும் பொருந்தும், இன்றைய சூழலில் ஜோதிட சாஸ்திரமும் இதற்க்கு ஆர்ப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது, இயற்க்கை உண்மைக்கு புறம்பான விஷயங்களை புறம் தள்ளிவிட்டு, சத்தியத்தை நோக்கி நகரும் என்பது மறுக்க இயலாத உண்மை அன்பர்களே,  பிற்போக்கு தனமான மூடநம்பிக்கைகளில் மனிதனை மூழ்கடித்து உண்மைக்கு புறம்பான விஷயங்களை பதிவு செய்துகொண்டிருந்த பலரை, இன்றைய இளைய தலைமுறையினர் தெரிக்கவிட்டு கொண்டு இருப்பது வரவேற்க்கதக்க விஷயமாக " ஜோதிடதீபம் " கருதுகிறது, இன்றைய இளைஞர்கள் தன்னிறைவான பொருளாதார வளர்ச்சியை ஆண் பெண் பாகுபாடு இன்றி பெறுவதிலேயே நாம் இதை தெளிவாக உணர்ந்துகொள்ள இயலும், மேலும் இதற்க்கு அவரவர் சுய ஜாதக  பாவக வலிமை பெரிதும் உதவுகிறது என்பது கவனிக்கத்தக்க விஷயமாக உள்ளது, தனது ஜாதகத்தில் 7ல் செவ்வாய் பகவான் உள்ளதால் செவ்வாய் தோஷம் என்கின்றனர்? நான் செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டுமா ? என்ற கேள்விக்கான பதிலை இன்றை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : மகரம் 
ராசி : ரிஷபம் 
நட்சத்திரம் : மிருகசீரிடம் 1ம் பாதம் 

 ஜாதகரின் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்துள்ள செவ்வாய் பகவான் ஜாதகருக்கு செவ்வாய் தோஷத்தை தருகிறார் என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பான விஷயமாகவே " ஜோதிடதீபம் " கருதுகிறது, ஜாதக வலிமை என்பது பிறந்த தேதி நேரம் மற்றும் இடம் ஆகிவற்றை அடிப்படையாக கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது, இதன் அடிப்படையில்  ஜாதகருக்கு லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை மற்றும் வலிமை அற்ற தன்மை அமைகிறது, ஒருவரின் திருமண வாழ்க்கையினை நிர்ணயம் செய்வது சுய ஜாதகத்தில் 2,7,8ம் வீடுகள் ஆகும், சுய ஜாதகத்தில் மேற்கண்ட வீடுகள் வலிமை பெற்று இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகரின் திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை அன்பர்களே, 2,7,8ல் பாவ கிரகங்கள் என்று அழைக்கப்படும் செவ்வாய், சனி, தேய்பிறை சந்திரன், சூரியனுடன் சேராத புதன், ராகு,கேது  போன்ற கிரகங்கள் அமர்ந்து இருந்தாலும், சுய ஜாதக வலிமையின்  அடிப்படையில் 2,7,8ம் வீடுகள் வலிமை பெற்ற பாவக தொடர்பை பெற்று இருப்பின் மேற்கண்ட கண்ட பாவ கிரகங்கள் அமர்ந்து இருப்பதால் ஜாதகருக்கு யாதொரு பாதிப்பையும் தாராது என்பதே உண்மை.

2,7,8ல் பாவ கிரகங்கள் என்று அழைக்கப்படும் செவ்வாய், சனி, தேய்பிறை சந்திரன், சூரியனுடன் சேராத புதன், ராகு,கேது  போன்ற கிரகங்கள் அமர்ந்து இருந்தால், சம்பந்தப்பட்ட பாவகம் வலிமை இல்லை என்று கருதுவது முற்றிலும் ஜாதக கணிதம் அறியாமல் கூறப்படும் வாய்ஜாலம் என்பதை தவிர வேறு இல்லை, கீழ்கண்ட மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் என்று அழைக்கப்படும் 7ம் பாவகத்தில் செவ்வாய் பகவான் அமர்ந்து இருப்பினும், 7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது  ஜாதகருக்கு சுய ஜாதகத்திலே மிகவும் வலிமை பெற்ற அமைப்பாகும், மேலும் ஜாதகருக்கு லக்கினம் எனும் முதல் வீடும்  களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது  ஜாதகருக்கு தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து சுகபோகங்களை அனுபவிக்கும் யோகம் கொண்டவர் என்பதை தெளிவு படுத்துகிறது, 7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது ஜாதகர் தனது வாழ்க்கை துணையுடனான புரிதல்கள், இணக்கமான வாழ்க்கை, பரஸ்பரம் அன்பு செலுத்தும் யோகம் என்ற  வகையில்  சுபயோகங்களை பரிபூர்ணமாக வாரி வழங்கும் அமைப்பை தருவது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், செவ்வாய் இங்கு அமர்வது  தோஷத்தை தருமெனில் ஜாதகரின் களத்திர ஸ்தானம் வலிமை இழந்து காணப்பட வேண்டும் ஆனால் ஜாதகருக்கு களத்திர ஸ்தானம் மிகவும் வலிமை பெற்று இருக்கின்றது.

மேலும் ஜாதகரின் களத்திர ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 4ம் வீடாகவும் சர நீர் ராசியாகவும் அமைவது ஜாதகரின் வாழ்க்கையில் தனது மனைவி வழியில் இருந்து சகல சுகபோகங்களையும் அனுபவிக்கும் வல்லமையை தருவதுடன், ஜாதகர் எந்த பெண்ணை ( தனது வாழ்க்கை துணையாக ) தேர்வு செய்தாலும் அவர் வழியில் இருந்து நன்மைகளையும் சுக போகங்களையும் தன்னிறைவாக பெறுவார் என்பதை அவரது சுய ஜாதகமே கட்டியம் கூறுகிறது, மேலும் தான் தேர்வு செய்யும் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி,  அதனால் யாதொரு பாதிப்பும் ஜாதகருக்கு ஏற்படாது என்பதே உண்மை நிலை, செவ்வாய் தோஷம் என்பது முற்றிலும் தவறான கருத்து அன்பர்களே, தம்பதியரின் சுய ஜாதகத்தில் பாவகங்கள் நல்ல வலிமையுடன் இருப்பின் செவ்வாய் போன்ற பாவக கிரகங்கள் எங்கு அமர்ந்து இருந்தாலும் அதனால் யாதொரு பாதிப்பும் வாராது, சுய ஜாதகம் வலிமை இழக்கும் பொழுதே தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக அமையாது என்பதனை கருத்தில் கொள்வது நல்லது, மேலும் இது போன்ற மூடநம்பிக்கைகளை களைந்து, சுய ஜாதக வலிமைக்கு முக்கியத்துவம் தந்து திருமண வாழ்க்கையில் இணையும் பொழுது, இல்லற வாழ்க்கை பரிபூர்ணத்துவத்தையும் சகல சௌபாக்கியத்தையும் வாரி வழங்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை அன்பரே !

குறிப்பு :

மேற்கண்ட ஜாதகத்தில் தாய் மற்றும் தந்தையை பிரதிபலிக்கும் பாவகங்களான 4,10ம் வீடுகள் ஜாதகருக்கு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மட்டுமே இன்னல்களை தரும் அமைப்பாகும், தற்போழுது நடைமுறையில் உள்ள குரு திசை ஜாதகருக்கு 8ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு, திடீர் அதிர்ஷ்டத்தை 8ம் பாவக வழியில் இருந்து வாரி வழங்கும், இது ஜாதகருக்கு தனது தொழில் வழியில் பிரதிபலிக்கும், தொழில் மூலம் ஜாதகர் சுபயோக வாழ்க்கையை பெறுவர் என்பதுடன், 8ம் வீடு வாழ்க்கை துணை வழியில் இருந்து பெரும் நன்மைகளை குறிக்கும், எனவே ஜாதகர் திருமண பந்தத்தில் இணைந்து சகல சௌபாக்கியங்களையும் பெறுவதே புத்திசாலித்தனம், எதிர்வரும் சனி திசையை 3,6,8,9,11ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பரிபூர்ண யோகத்தை நல்குவது ஜாதகரின் எதிர்கால வாழ்க்கையையும் சிறப்பிக்கும் என்பதால், நம்பிக்கையுடன் இல்லற வாழ்க்கையில் இணைந்து நலம் பெற " ஜோதிடதீபம் " வாழ்த்துகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக