திங்கள், 5 பிப்ரவரி, 2018

சனி திசை ( எதிர் வரும் ) தரும் பலாபலன்களும், சுய ஜாதக வலிமையின்மையும்!

 

 சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் வலிமை பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் சிறப்புகளை தரும்,  ஒருவேளை சுய ஜாதகத்தில் சில பாவகங்கள் பாதிக்கப்பட்டு இருப்பின், நடைமுறையில் அல்லது எதிர்வரும் திசா புத்திகள் பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்தாமல் இருப்பது ஜாதகருக்கு சிறப்புகளை தரும், சுய ஜாதகத்தில் பாவகங்கள் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அதனால் வரும் இன்னல்களை ஜாதகர் சந்திக்காமல், திசாபுத்திகள் ஏற்று நடத்தும் வலிமை பெற்ற பாவக வழியிலான நன்மைகளை மட்டுமே ஜாதகர் பெறுவார் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், கீழ்கண்ட ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் குரு திசை ராகு புத்தி தரும் பலாபலன்கள் பற்றியும், எதிர்வரும் சனி திசை தரும் பலாபலன்கள் பற்றியும் இன்றை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : மீனம் 
ராசி : ரிஷபம் 
நட்ஷத்திரம் : ரோகிணி 4ம் பாதம் 

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் லக்கினம் உற்பட பல பாவகங்கள் வலிமையற்று காணப்பட்ட போதிலும், வலிமை பெற்ற பாவக பலனையே கடந்த ராகு திசை ஏற்று நடத்தியிருப்பது ஜாதகருக்கு சுபயோக பலன்களை வழங்கியதுடன், அதற்க்கு அடுத்து தற்போழுது நடைமுறையில் உள்ள குரு திசையை 2,5,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இன்னல்களையும், 6,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும் வழங்கிக்கொண்டு இருக்கின்றது, ஜாதகர் குரு திசையில் 2,5,8ம் பாவக வழியில் இன்னல்களையும், 6,10ம் பாவக வழியில் சுபயோகங்களையும் பெற்றுக்கொண்டு இருப்பது கவனிக்கத்தக்க விஷயமாகும், மேலும் ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் குரு திசை ராகு  புத்தி வழங்கும் பலன்களை சிந்திப்போம், தற்போழுது நடைபெறும் ராகு புத்தி ஜாதகருக்கு 4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுக ஸ்தான வழியில் இருந்து நன்மைகளை தருவது ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளை தரும் அமைப்பாகும், எனவே ஜாதகர் தற்போழுது 4ம் பாவக வழியிலான நன்மைகளை பரிபூர்ணமாக அனுபவிக்கும் வல்லமையை தந்துகொண்டு இருக்கின்றது என்பது வரவேற்கத்தக்க சிறப்புஅம்சமாகும்.

 இனி ஜாதகருக்கு அடுத்துவரும் சனி திசை தரும் பலாபலன்கள் என்ன ? என்பதே அதிமுக்கியமான கேள்வி, ஜாதகருக்கு எதிர்வரும் சனி திசை 11ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் அதிர்ஷ்டத்தை வாரி வழங்க காத்துகொண்டு இருப்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், மேலும் ஜாதகரின் லாப ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 10ம் வீடான மகர ராசியில் 13 பாகைகளையும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 11ம் வீடான கும்ப ராசியில் 18 பாகைகளையும் கொண்டிருப்பது மிகுந்த நன்மைகளை குறுகியகாலத்தில் வாரி வழங்கும் அமைப்பாகும், ஜாதகரின் தொழில் சர மண் தத்துவம் சார்ந்து அமைந்திருப்பது மேலும்  வலுசேர்க்கும் அமைப்பாகும், ஜாதகர் சனி திசை காலத்தில் 11ம் பாவக வழியில் இருந்து நல்ல அதிர்ஷ்டத்தையும், சுபயோகங்களையும் சர மண் மற்றும்  ஸ்திர காற்று தத்துவ அமைப்பில் இருந்து தன்னிறைவாக பெறுவார் என்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 1,2,3,5,7,8,9,12 என 8 வீடுகள் பாதிக்கப்பட்டு இருந்த போதிலும் எதிர்வரும் சனி திசை வலிமை பெற்ற லாப ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு லாப ஸ்தான வழியில் இருந்து சுபயோகங்களை பரிபூர்ணமாக அனுபவிக்கும் வல்லமையை தரும், ஜாதகர் தனது தொழில்  அமைப்புகளில் இருந்தும், தனது அறிவுத்திறன் மூலமும் நல்ல அதிர்ஷ்ட  வாய்ப்புகளை தன்னிறைவாக பெறுவார், எனவே சுய ஜாதகத்தில் பாவகங்கள் பாதிக்கப்பட்டு இருந்த போதிலும், நடைபெறும் எதிர்வரும் திசா புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் ஜாதகருக்கு சுபயோக பலாபலன்களே நடைமுறைக்கு வரும் என்பது மேற்கண்ட ஜாதகத்தின் மூலம் நாம் அறிந்துகொள்ளும் விஷயமாகும், நடைபெறுவது சுப கிரகத்தின் திசையா ? அசுப கிரகத்தின் திசையா? என்று ஆய்வு செய்வதைவிட, நடைபெறும் திசை சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துகிறதா? வலிமையற்ற பாவக பலனை ஏற்று நடத்துகிறதா ? என்பதில் தெளிவு பெறுவதே மிக துல்லியமான ஜாதக பலாபலன்களை கண்டுணர வாய்ப்பளிக்கும் வாழ்த்துகள்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக