ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

7ல் அமர்ந்த ராகு ஜாதகியை " முதிர்கன்னி " என்ற நிலைக்கு ஆளாக்குமா ?



 களத்திர ஸ்தானத்தில் அமர்ந்த ராகு தான் அமர்ந்த பாவகத்தை கடுமையாக பாதிப்பிற்க்கு ஆளாக்கும் பொழுது, சம்பந்தப்பட்ட ஜாதகரின்  திருமணம் வாழ்க்கை மிகப்பெரிய கேள்விக்குரியாக மாறிவிடும், மேலும் ஜாதகர் திருமணத்திற்க்காக மேற்கொள்ளும் முயற்சிகள் யாவும் முழுமை பெறாமல், மிகப்பெரிய இன்னல்களுக்கும் துன்பத்திற்கும் ஆளாக்கும், காதல் திருமணம் செய்துகொள்வதற்கான வாய்ப்பும் ஜாதகருக்கு கிட்டாது என்பதுடன், இல்லற வாழ்க்கை துணையை தேர்வு செய்வதில் பெரும் தவறு இழைத்து அதன் வழியிலான தொல்லைகளை வாழ்நாள் முழுவதும் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், பொதுவாக சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகத்தில் ராகு அல்லது கேது அமரும் பொழுது சம்பந்தப்பட்ட பாவகத்தை மிகவும் வலிமைப்படுத்தும் அமைப்பில் இருப்பது களத்திர ஸ்தான வழியிலான சுபயோகங்களை வாரி வழங்கும், மாறாக வலிமை அற்ற நிலையை தருமாயின் ஜாதகரின் நிலை களத்திர பாவக வழியில் இருந்து கடுமையான இன்னல்களை எதிகொள்ளும் சூழ்நிலையை தரும் என்பதற்கு கீழ்கண்ட ஜாதகமே நல்ல உதாரணம் என்பதை, இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம். 


லக்கினம் : கன்னி
ராசி : சிம்மம்
நட்ஷத்திரம் : மகம் 4ம் பாதம்

ஜாதகிக்கு  ராகு பகவான் களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகத்தில் வலிமையற்று அமர்ந்து இருப்பதும், சுய ஜாதகத்தில் 7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் ஜாதகியின் திருமண வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும் அமைப்பாகும், குறிப்பாக ஜாதகியின் களத்திர ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு விரைய பாவகம் என்று அழைக்கப்படும்  மீன ராசியில் அமைவதும் ஜாதகிக்கு வாழ்க்கை துணை வழியில் இருந்து கடுமையான மன நிம்மதி இழப்பையும், மனப்போராட்டத்தையும் வாரி வழங்கும் என்பதை மறுப்பதற்கு இல்லை, சுய ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை குறிக்கும் பெரும்பாலான வீடுகளின் தொடர்பு ஜாதகிக்கு திருமண வாழ்க்கை என்ற ஓர் அமைப்பையே கேள்விக்குறியாக மாற்றும் வல்லமையுடன் காணப்படுவது கவனிக்கத்தக்கது, எந்த ஓர் சூழ்நிலையிலும் ஜாதகி திருமண வாழ்க்கையில் இணைவதற்கான சந்தர்ப்பத்தை தட்டிப்பறித்துக்கொண்டே இருக்கும் என்பது கவனிக்கத்தக்கது .

இல்லற வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் 2,5,7,8,12ம் வீடுகள் முறையே 2,8,12ம்  வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடனும், 5ம் வீடு மட்டும் லாப ஸ்தானத்துடனும், 7ம் வீடு 200% விகித இன்னல்களை தரும் பாதக ஸ்தானத்துடன்  சம்பந்தம் பெற்று இருப்பது, ஜாதகிக்கு வயது 31 கடந்தும் திருமண வாழ்க்கை எனும் சுப நிகழ்வை நடைமுறைப்படுத்தவில்லை, பெரும்பாலான வீடுகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது, ஜாதகியின் இல்லற வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றி அமைத்திருக்கிறது, மேலும் சுய ஜாதகத்தில் 4ம் வீடு கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது ஜாதகியின் நற்குணங்களை இழந்து, அனைவருடனும் விரோத போக்கை கடைபிடிப்பது, ஜாதகியின் இல்லற வாழ்க்கைக்கு தானே தேடிவைத்துக்கொள்ளும் சூன்யமாகும், குணக்கேடான செயல்பாடுகள் ஜாதகியின் நற்பெயருக்கு பெருத்த களங்கத்தை ஏற்படுத்திக்கொண்டு இருப்பதை அறியாமல் , தனது செயலே சரியானது என்ற மனஇயல்புடன் ஜாதகி செயல்படுவதும் ஓர் வகையில் திருமண வாழ்க்கை அமைவதை வெகுவாக தடுத்துக்கொண்டு இருக்கிறது, ஜாதகியின் நண்பர்கள் கூறும் அறிவுரையும், ஜாதகியின் நடவடிக்கையை சிறிதும் மாற்ற முடியவில்லை என்பது கவலைக்கு உரியது.

 நடைபெறும் சந்திரன் திசை வலிமை பெற்ற லக்கின பாவக பலனை ஏற்று நடத்துவது  நல்ல ஜீவன மேன்மையை தந்து இருப்பது ஜாதகியின் பொருளாதார  தன்னிறைவை சிறப்பாக அமைத்து தந்துகொண்டு இருக்கிறது என்ற போதிலும், இல்லற வாழ்க்கை எனும் விஷயத்தை மிகப்பெரிய கேள்விக்குறியாக மாற்றி வைத்திருப்பது கவனிக்கத்தக்கது, திருமண தாமதம் ஏன் ? என்ற கேள்விக்கு சுய ஜாதகத்திலும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கும் 2,5,7,8,12ம் வீடுகள் மிக மிக கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதே அடிப்படை காரணம் என்றால் அதை மறுப்பதற்கு இல்லை, நடைபெறும் சந்திரன் திசை வலிமை பெற்ற பாவாக பலனை ஏற்று நடத்திய போதிலும், அது ஜாதகிக்கு திருமணம் சார்ந்த நன்மைகளை வழங்காமல், ஜீவனம் சார்ந்த நன்மைகளை மட்டும் வாரி வழங்கிக்கொண்டு இருப்பது கவனிக்கத்தக்கது.

மேற்கண்ட ஜாதகி தனது சுய ஜாதக வலிமை நிலையை தெளிவாக உணர்ந்து, தனக்கு  வரும் வரனின் ஜாதகத்தில் 2,5,7,8,12ம் வீடுகள் வலிமை உள்ள ஜாதகமாக தேர்வு செய்து இல்லற வாழ்க்கையில் இணைந்து நலம் பெறுவதே சாலச்சிறந்தது, மாறாக தனது எண்ணத்தின் படி வாழ்க்கையை வாழ ஆரம்பித்தாள், இறுதியில் இல்லற வாழ்க்கை சார்ந்த கடுமையான இன்னல்களை எதிர்கொண்டு நிம்மதி இழந்து வாடும் சூழ்நிலையை தந்துவிட வாய்ப்புண்டு, மேலும் தனது ஜாதக வலிமையை பற்றி தெளிவு பெறுவது ஜாதகியின் குடும்ப வாழ்க்கையில் வரும் இன்னல்களை வெகுவாக குறைக்க உதவும் என்பதை உணர்ந்து செயலாற்றுவது சகல நலன்களையும் தரும்.

குறிப்பு :

 மேற்கண்ட ஜாதகத்தில் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்த ராகு தான் அமர்ந்த பாவகத்தை 100% விகிதம் பாதிப்பிற்கு ஆளாக்குவது, ஜாதகி வாழ்க்கை துணை வழியில் இருந்து கடுமையான இன்னல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், அதை போன்றே சுய ஜாதகத்திலும் 7ம் வீடு பாதக ஸ்தான தொடர்பை பெறுவது திருமண வாழ்க்கையில் தடை தாமதங்களும், தனக்கு உகந்த வாழ்க்கை துணையை தேர்வு செய்வதில் மிகுந்த குழப்பத்தையும் ஏற்படுத்தும், மேலும் ஜாதகி 2,5,7,8,12 வீடுகள் வலிமை பெற்ற ஓர் ஜாதகரை தனது  வாழ்க்கை துணையாக தேர்வு செய்யவில்லை எனில், வாழ்க்கையே நரகமாகிவிட வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதை நினைவில் கொள்வது ஜாதகியின் எதிர்கால வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொடுக்கும் .

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக