வெள்ளி, 6 ஏப்ரல், 2018

ராகு திசை சுய புத்தி சுபயோக பலனை வழங்கினால், பிறகு வரும் புத்திகள் மிகப்பெரிய கெடுதலை தருமா ?


 கேள்வி : 

   ராகு திசை சுயபுத்தியில் நல்ல பலனை தந்தது. ஒரு தசா சுயபுத்தியில் அதிகமான நன்மையை வழங்குகிறது என்றால் பிறகு வரும் புத்திகள் மிகப்பெரிய கெடுதலை தரும் என்பதில் எவ்வித சந்தேகமும் வேண்டியதில்லை, இது உண்மையா? இந்த ஜாதகத்தை உங்களது பாணியில் விளக்கி தெளிவை கொடுக்க முடியுமா? ஆள் ஆளுக்கு ஒன்னா சொன்னா மனுசன் எதை நம்புறது ?

பதில் :

 ஒரு தசா சுயபுத்தியில் அதிகமான நன்மையை வழங்குகிறது என்றால் பிறகு வரும் புத்திகள் மிகப்பெரிய கெடுதலை தரும் என்பதில் எவ்வித சந்தேகமும் வேண்டியதில்லை. என்ற கருத்து சுய ஜாதக கணிதம் என்றால் என்னவென்றே தெரியாமல், பிதற்றும் வாய் ஜாலம் என்றே சொல்ல தோன்றுகிறது, அடிப்படையில் எந்த ஓர் கிரகத்தின் திசையும் சரி, புத்தியும் சரி தன்னிசையாக பலாபலன்களை வழங்கும் வல்லமை அற்றவை, சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் பெரும் வலிமையை மட்டுமே தனது திசை, புத்தி, அந்தரம் மற்றும் சூட்ஷம காலங்களில் நடைமுறைக்கு கொண்டுவரும், இதை சுய ஜாதக கணிதம் பற்றி தெளிவு பெற்றவர்கள் மிக எளிதாக உணர இயலும், கீழ்கண்ட ஜாதகருக்கு ராகு தனது சுய புத்தியில் யோக பலனை வழங்கியதால், அடுத்து வரும் மற்ற புத்திகள் அவயோகங்களை வாரி வழங்கும் என்பது முற்றிலும் தவறான கருத்து, ராகு தனது திசையில் தரும் பலனும், ராகு சுய புத்தியிலும் மற்ற புத்திகளில் நடைமுறைக்கு வரும் பலாபலன்கள் பற்றியும் இன்றை பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : மகரம்
ராசி : மேஷம்
நட்சத்திரம் : பரணி 3ம் பாதம்

ராகு திசையில் சுய புத்தி ஜாதகருக்கு யோக பலனை வழங்கியது எப்படி ?

ஜாதகருக்கு ( 17/01/2008 முதல் 16/01/2026 வரை ) நடைமுறையில் உள்ள ராகு திசை சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்புகளான 5,11ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பூர்வ புண்ணிய ஸ்தானம் மற்றும் லாப ஸ்தான வழியில் இருந்து முழு வீச்சில் யோக பலன்களை வாரி வழங்கி உள்ளது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், சுய ஜாதகத்தில் நடைபெறும் நவக்கிரக திசை அல்லது புத்தி எதுவென்றாலும், வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு ஏற்று நடத்தும் பாவக வழியில் இருந்து சுபயோக பலாபலன்களே நடைமுறைக்கு வரும், மாறாக சுய ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்தும் நவகிரகங்களின் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் ஜாதகருக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து அவயோக பலன்களையே வாரி வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

மேற்கண்ட் ஜாதகருக்கு ராகு திசை 5,11ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பூர்வ புண்ணிய ஸ்தானம் மற்றும் லாப ஸ்தான வழியில் இருந்து நன்மைகளையும், ராகு திசை ராகு புத்தி மேற்கண்ட பாவக வழியிலான தொடர்புகளை பெற்று சுய திசையில் சுய புத்தி ஜாதகருக்கு சுபயோக பலாபலன்களையே வழங்கியது தெளிவாகிறது, அடுத்து வந்த ராகு திசை குரு புத்தி ஜாதகருக்கு 3,4 ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றதும், ஜாதகருக்கு ராகு திசை குரு புத்தியும் ஜாதகருக்கு நன்மைகளை வழங்கியிருக்கிறது, குரு புத்திக்கு அடுத்து வந்த சனி புத்தி 1,7,10ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் ( சர லக்கினத்திற்கு பாதக ஸ்தானம் 11ம் வீடாகும் ) பெற்று 200% மடங்கு இன்னல்களை வாரி வழங்கியுள்ளது, ராகு திசையில் சனி புத்திக்கு அடுத்து வந்த புதன் புத்தியும் 1,7,10ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இன்னல்களையும், 8ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சில நன்மைகளையும் வழங்கி கொண்டு இருப்பது கவனிக்கத்தக்கது.

 ஜாதகர் 29/12/2015 முதல் 18/07/2018 வரை 1,7,10ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, பாதக ஸ்தான வழியில் இருந்து கடுமையான கடுமையான இன்னல்களை தொடர்து வழங்கிக்கொண்டு இருப்பதால் ஜாதகர் மிகுந்த துன்பத்திற்கும் இன்னல்களுக்கும் ஆளாகி கொண்டு இருக்கின்றார், மேலும் ஜாதகரின் லக்கினம், களத்திரம் மற்றும் ஜீவன ஸ்தானங்களே பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதால் ஜாதகருக்கு வரும் பாதிப்புகள் அதிக அளவில் உள்ளது என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும், லக்கினம் பாதிக்கப்படுவது ஜாதகரே தன்னை தானே பாதிப்பிற்க்கு ஆளாக்கி கொள்வார், களத்திர ஸ்தானம் பாதிக்கப்படுவது ஜாதகருக்கு ஏற்படும் எதிர்பாலின சேர்க்கையின் மூலம் இன்னல்களுக்கு ஆளாகும் சூழ்நிலையை தரும், ஜீவன ஸ்தானம் பாதிக்கப்படுவது ஜாதகரின் தொழில் ஸ்தான வழியிலான இன்னல்களுடன், சுய கவுரவம் பாதிக்கும் சூழ்நிலையை தரும்.

 ராகு திசையில் அடுத்து வரும் கேது மற்றும் சுக்கிரன் புத்திகள் 8ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவக பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு சில எதிர்பாராத நன்மைகளையும், சூரியன் மற்றும் செவ்வாய் புத்திகள் 2ம் வீடு குடும்ப ஸ்தானமான 2ம் பாவக பலனை ஏற்று நடத்தி நிறைவான வருமான வாய்ப்புகளையும், சுபயோகங்களையும், சந்திரன் புத்தி 6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இன்னல்களையும், 9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக பலாபலன்களை நடத்த தயார் நிலையில் இருப்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

 நவகிரகங்கள் தன்னிசையாக நன்மை தீமை பலாபலன்களை நடைமுறைக்கு கொண்டுவருவதற்கான வாய்ப்பு என்பது சிறிதும் இல்லை என்பதே மேற்கண்ட உதாரண ஜாதகம் மூலம் நாம் அறிந்துகொள்ள வேண்டிய விஷயமாகும், சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவக வலிமையையே ஏற்று நடத்தும் என்ற உண்மையையும் நாம் உணர்ந்துகொள்ளவேண்டிய நேரமிது, மேலும் கோட்சார கிரகங்களின் தாக்கம் என்பதனையும் மேற்கண்ட முறையிலேயே கையாண்டு துல்லியமான பலாபலன்களை உணர்ந்து, நமது வாழ்க்கையை மேலும் சிறப்பு மிக்கதாக மாற்றிக்கொள்வது சகல நன்மைகளையும் தரும்.

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலையையும் , நடைபெறும் திசாபுத்திகள் ஏற்று நடத்தும் பாவகங்களின் தன்மையையும் நாம் தெளிவாக உணர்ந்து கொள்வது, நமது வாழ்க்கையை மிகவும் சிறப்பு மிக்கதாக மாற்றிக்கொள்ளும் வாய்ப்பை தரும், குறிப்பாக நமது எதிர்கால திட்டமிடுதல்களை மிக சிறப்பாக முன்னெடுத்துச்செல்லும் வாய்ப்பை வாரி வழங்கும் என்பது மறுக்க இயலாத உண்மை.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696 

1 கருத்து:

  1. சிம்ம ராசி பூரம்3ம் பாதம் விருச்சிக லக்னம்
    பிறந்த தேதி 29-07-1987 நேரம் 2.47pm

    இப்போது ராகு திசை ராகு புத்தி எனக்கு எவ்வாறு இருக்கும்

    பதிலளிநீக்கு